Published:Updated:

'இந்தியாவிடம் இருப்பது அசல் கோப்பையே'

மும்பை, ஏப்.4,2011

இந்திய அணியிடம் வழங்கபட்டுள்ள உலக கோப்பை அசலானது தான் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது. ##~~##

இந்திய கிரிக்கெட் அணிக்கு வழங்கப்பட்டது மாதிரி உலகக் கோப்பை தான் என்றும், சுங்கத் துறையிடம் அசல் உலகக் கோப்பை இருப்பதாகவும் வெளியான தகவலால் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், இந்திய அணியிடம் அளிக்கப்பட்டது அசல் கோப்பை தான் என்று விளக்கம் அளித்துள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், சுங்கத்துறை வசம் இருப்பது தான் மாதிரி உலகக் கோப்பை என்று தெரிவித்துள்ளது.

இதனிடையே, தங்களிடம் இருப்பது அசல் கோப்பையா, இல்லையா என்பது தெரியாது என்றும், 35 சதவீத வரி செலுத்தப்பட்டவுடன் தாங்கள் பறிமுதல் செய்துள்ள கோப்பையை திருப்பி தந்துவிடுமோம் என்றும் சுங்கத் துறை தெரிவித்துள்ளது.