Published:Updated:

ஏபிடி அழுகை... வாட்சன் – வஹாப் பஞ்சாயத்து... மெளகா மெளகா...! 2015 உலகக் கோப்பை நினைவுகள்!

ஏபிடி அழுகை... வாட்சன் – வஹாப் பஞ்சாயத்து... மெளகா மெளகா...! 2015 உலகக் கோப்பை நினைவுகள்!
ஏபிடி அழுகை... வாட்சன் – வஹாப் பஞ்சாயத்து... மெளகா மெளகா...! 2015 உலகக் கோப்பை நினைவுகள்!

இந்த மேட்சின் ஹைலைட்ஸில் வாஹாபின் அதிரடியான ஸ்பெல்லும் இடம்பெற்றது. விதிகளை மீறி வாட்சனிடம் நடந்துகொண்டதால் தொடரின் ஊதியத்தில் 50 சதவிகிதம் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ``அவரின் அபராதத்தை நான் கொடுக்கிறேன்” என லாரா சொன்னார். இது போதாதா அந்த ஸ்பெல்லின் சிறப்பைக் கூற?

த்துக்குட்டி அணிகள் பெரிய அணிகளை வீழ்த்தி அதிர்ச்சி தருவது, சர்ச்சைகள் எழுவது, தென்னாப்பிரிக்கா நாக் அவுட் சுற்றில் சொதப்புவது... என உலகக்கோப்பைக்கு என ஒரு டெம்ப்ளேட் இருக்கும். இந்த டெம்ப்ளேட்டில் ஆஸ்திரேலியா கப் அடிக்கும் என்பதையும் சேர்த்துவிடலாம். இப்படி உலகக்கோப்பையின் வழக்கமான டெம்ப்ளேட்டின்படியே 2015 உலகக்கோப்பையும் நடந்தது. அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்தி ஃபைனலில் நியூசிலாந்தை வீழ்த்தி சொந்த மண்ணில் உலகக்கோப்பையை வென்ற இரண்டாவது அணியாகத் திகழ்ந்தது ஆஸ்திரேலியா.

கடந்த 2015 உலகக்கோப்பையின் சில சுவாரஸ்யங்கள்... #WorldCupMemories

மெளகா மெளகா… மெளகா மெளகா!

ஏபிடி அழுகை... வாட்சன் – வஹாப் பஞ்சாயத்து... மெளகா மெளகா...! 2015 உலகக் கோப்பை நினைவுகள்!

2015 உலகக் கோப்பை தொடங்கியதே `மெளகா மெளகா’ விளம்பரம் மூலம்தான். தொடரின் முதல் போட்டி தொடங்குவதற்கு முன்பே `மெளகா மெளகா’ விளம்பரம் வைரல் ஹிட். இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே ஓர் எதிர்பார்ப்பு இருக்கும். அதைக் கூட்டுவதற்காக அவர்கள் ரைவல்ரியைக் கொஞ்சம் காமெடி கலந்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உருவாக்கிய விளம்பரம்தான் இந்த `மெளகா மெளகா’. வாட்ஸ் அப் ஃபேஸ்புக் என எல்லா சமூக வலைதளங்களிலும் `மெளகா மெளகா’தான் வைரல்.

உலகக்கோப்பையில் இந்தியாவைப் பாகிஸ்தான் வெல்லாமல் இருந்ததை, கொஞ்சம் கலாய்த்து எடுக்கப்பட்டது அந்த விளம்பரம். 1992-ல் பாகிஸ்தானின் இளம் கிரிக்கெட் ரசிகர் ஒருவர், உலகக்கோப்பையில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்துவதைப் பட்டாசு வெடித்துக் கொண்டாடக் காத்துக்கொண்டிருப்பது போலத் தொடங்கும் அந்த விளம்பரம், 2011-ல் அதே ரசிகர், அதே பட்டாசுடன் தன்னுடைய மகனுடன் உலகக் கோப்பையில் இந்தியாவை பாகிஸ்தான் வெல்லும் தருணத்துக்காகக் காத்திருப்பதாக முடியும்.

முதலில் வெறும் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்காக மட்டும் உருவாக்கப்பட்ட அந்த விளம்பரம் பெரும் வரவேற்பைப் பெற்றதால், இந்தியா பங்குபெறும் ஒவ்வொரு போட்டிக்கும் புதியதாக ஒரு `மெளகா மெளகா’ விளம்பரம் உருவாக்கப்பட்டு, அந்த உலகக் கோப்பையின் மிகப்பெரிய சென்சேஷனாக அமைந்தது.

ஏபிடி அழுகை... வாட்சன் – வஹாப் பஞ்சாயத்து... மெளகா மெளகா...! 2015 உலகக் கோப்பை நினைவுகள்!

உலகக் கோப்பையின் மிரட்டலான ஸ்பெல்

``நீ பேட் கையில் வைத்திருக்கிறாயா?''

காலிறுதிப் போட்டியில் ஷேன் வாட்சன், பாகிஸ்தான் வீரர் வஹாப் ரியாஸிடம் உதிர்த்த வார்த்தைகள் இவை. உலகக் கோப்பையின் மகத்தான ஒரு பெளலிங் ஸ்பெல்லின் ஆரம்பப்புள்ளி இந்த வார்த்தைகள்தான். ஸ்டார்க்கின் 150 கி.மீ வேகத்தில் வரும் பவுன்ஸர்களுக்கும் யார்க்கர்களுக்கும் தட்டுத்தடுமாறிக்கொண்டிருந்த வஹாப் ரியாஸிடம் ஆஸ்திரேலியருக்கே உரிய தனித்துவமான `ஸ்லெட்ஜிங்’கில் ஈடுபட்டார் வாட்சன். அந்த வார்த்தைகள் வாஹாபின் காதுகளில் நீங்காமல் ஒலித்துக்கொண்டிருந்தன. அந்த வார்த்தைகளின் தாக்கத்தால் இரண்டாவது இன்னிங்ஸில் வெறிகொண்டவர் போல் பந்து வீசினார்.

அந்த வெள்ளை ஆயுதம் வஹாப் கையில் வரும்போதெல்லாம் எல்லோரும் குஷியானார்கள், ஒருவரைத் தவிர. ஆம்... ஷேன் வாட்சன். அவர் உதிர்த்த வார்த்தைகளுக்குப் பல மடங்கு சேர்த்து திருப்பித் தந்தார் வஹாப். பவுன்ஸர்களால் அவரை திக்குமுக்காட செய்தார். ஷேன் வாட்சன் அப்படியே நிலைகுலைந்துபோனார். வாட்சன் தடுமாறுவதைப் பார்த்து அவர் அருகே சென்று கை தட்டிய விதம் எல்லாம் நிச்சயமாக THUG LIFE தான்!

அன்று தன் வாழ்நாளின் மிகச் சிறந்த ஸ்பெல்லை வீசினார் வஹாப். மிகச் சிறந்த ஸ்பெல் என்பது, நம்பரை வைத்து அல்ல. தன்னை  கேலியாகப் பேசியவரிடம், சற்றும் அசராமல் அவர் மிரட்டியவிதம்தான், அந்த ஸ்பெல்லைக் கொண்டாடக் காரணம். அந்த ஸ்பெல்லில் விக்கெட் விழவில்லை, பவுண்டரிகள் அடிக்கப்படவில்லை. இருந்தும் அந்த மூன்று ஓவர்களில் வஹாப் காட்டிய ஆட்டிட்யூட், உலக கிரிக்கெட் ரசிகர்களை  திருப்திப்படுத்திவிட்டது. கிரிக்கெட் போட்டியில் ஹைலைட்ஸ் ஒளிபரப்பும்போது பேட்ஸ்மேன் அடிக்கும் சிக்ஸர்களும், பெளலர் எடுக்கும் விக்கெட்டுகளும்தான் ஒளிபரப்பப்படும். ஆனால், இந்த மேட்சின் ஹைலைட்ஸில் வாஹாபின் அதிரடியான ஸ்பெல்லும் இடம்பெற்றது. விதிகளை மீறி வாட்சனிடம் நடந்துகொண்டதால் தொடரின் ஊதியத்தில் 50 சதவிகிதம் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ``அவரின் அபராதத்தை நான் கொடுக்கிறேன்” என லாரா சொன்னார். இது போதாதா அந்த ஸ்பெல்லின் சிறப்பைக் கூற?

கிரிக்கெட் உலகத்தையே சோகத்தில் ஆழ்த்திய அந்தக் காட்சி!

ஏபிடி அழுகை... வாட்சன் – வஹாப் பஞ்சாயத்து... மெளகா மெளகா...! 2015 உலகக் கோப்பை நினைவுகள்!

காலிறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி `நாக்-அவுட்’ போட்டிகளில் தன்னைப் பிடித்திருந்த சாபம் நீங்கிவிட்டதாக நினைத்த தென்னாப்பிரிக்காவின் நினைப்பில், அடுத்த போட்டியில் இடி இறங்கியது. எப்போதும் தென்னாப்பிரிக்கா பங்குபெறும் நாக் அவுட் போட்டிகளில் மழை வந்து அவர்களின் வெற்றியைப் பறித்துவிடும். இந்தப் போட்டியிலும் மழை வந்து குறிக்கிட்டது. அப்படி மழையாக வந்தவர், தென்னாப்பிரிக்காவில் பிறந்த நியூசிலாந்து வீரர் கிராண்டு எலியாட். ஆம், தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர் மூலமே அன்று அந்நாட்டின் கனவு கலைக்கப்பட்டது. அந்தச் சோகக் காட்சிக்குக் காரணமாக அமைந்தவரும் இவர்தான்.

D/L விதிப்படி 42 ஓவர்களில் 298 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்துக்கு, கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவை என்ற நிலை வந்தது. பிறகு, இரண்டு பந்துகளில் 5 ரன்கள் தேவை. ஸ்டெயின் வீசிய பந்தை மிட் ஆன் திசையில் சிக்ஸருக்குப் பறக்கவிட்டார் எலியாட். நியூசிலாந்து வீரர்கள் அனைவரும் மைதானத்துக்குள் எலியாட்டை நோக்கி வர, கேமரா அந்த வீரரின் பக்கம் திரும்பியது. அவர் கண்களில் நீர் வழியும் காட்சியைப் பார்த்ததும் மொத்த கிரிக்கெட் ரசிகர்களின் நெஞ்சும் பிதுங்கியது. சகவீரர்கள் ஒவ்வொருவரையும் கண்களில் நீரோடு அவர் தேற்றும் காட்சியை இன்று நினைத்தாலும் நம் கண்களிலும் நீர் ததும்பும். தன்னுடைய சுயசரிதையில் `என்னுடைய வாழ்க்கையின் மிகப் பெரிய துயரம்' என அந்த நிமிடங்களை விவரித்து கடந்து சென்றார் அந்த மாவீரன் டி வில்லியர்ஸ்.  

அவுட்- நாட் அவுட்… நாட் அவுட்- அவுட்!

லீக் சுற்றில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மோதிய ஆட்டத்தின்போது ஜேம்ஸ் டெய்லருக்கு LBW முறைப்படி அவுட் தரப்பட்டது. அதே நேரத்தில் சிங்கிள் எடுக்க முயன்றபோது ஜேம்ஸ் ஆண்டர்சன் ரன் அவுட் செய்யப்பட்டார். டெய்லர் lbw-க்கு ரிவ்யூ கேட்க, அது நாட்-அவுட்டாக அமைந்தது. இருந்தும் ஜேம்ஸ் ஆண்டர்சனின் ரன் அவுட்டை கணக்கில்கொண்டார்கள் நடுவர்கள். ஐ.சி.சி விதியின்படி lbw விதி மாற்றியமைக்கும்போது ரன் அவுட் செய்யப்பட்டால் அந்த பாலை `டெட் பால்’ என அறிவிக்க வேண்டும். ஆனால், அன்று ஆண்டர்சனுக்கு அவுட் வழங்கப்பட்டது. இந்தத் தவறுக்காக ஐ.சி.சி பிறகு மன்னிப்பு கேட்டது.

ஏபிடி அழுகை... வாட்சன் – வஹாப் பஞ்சாயத்து... மெளகா மெளகா...! 2015 உலகக் கோப்பை நினைவுகள்!

இந்தியா - வங்கதேசம் மோதிய காலிறுதியில் 40-வது ஓவரில் ரோஹித் ஷர்மாவுக்கு ரூபல் ஹுசைன் ஒரு ஃபுல் டாஸ் வீசினார். அது கேட்ச்சானது. ஆனால், ஸ்கொயர் லெக் அம்பயர் அதை இடுப்புக்கு மேல் வீசப்பட்டதாக எண்ணி நோ- பால் என அறிவித்தார். ரீப்ளேவில் பந்து இடுப்புக்குக் கீழே சென்றது தெரியவந்தது. `ரோஹித்துக்கு அவுட் கொடுத்திருந்தால் வங்கதேசம் வெற்றி பெற்றிருக்கும்' என அந்நாட்டு ரசிகர்கள் கடிந்துகொண்டனர். இந்த நிகழ்வும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தொடர்ந்து நான்கு சதங்கள்… இரட்டைச் சதங்கள்

ஏபிடி அழுகை... வாட்சன் – வஹாப் பஞ்சாயத்து... மெளகா மெளகா...! 2015 உலகக் கோப்பை நினைவுகள்!

இந்தத் தொடரில் இலங்கை வீரர் சங்கக்காரா தொடர்ந்து நான்கு போட்டிகளில் சதம் அடித்து சாதனை படைத்தார். லீக் சுற்றில் வங்கதேசம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து எனத் தொடர்ந்து நான்கு போட்டிகளிலும் சதம் அடித்து ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்த நான்கு சதங்கள் அடித்த வீரர் மற்றும் ஒரே உலகக்கோப்பையில் அதிக சதம் அடித்த வீரர் ஆனார்.

அதுமட்டுமல்லாமல், முதல் இரட்டைச்சதம் அடித்ததும் இந்த உலகக்கோப்பையில்தான். கெயில் ஜிம்பாப்வேக்கு எதிராக முதல் இரட்டைச் சதமும், அதைத் தொடர்ந்து நியூசிலாந்து வீரர் மார்டின் கப்டில் அடித்த 237 ரன்கள் உலகக்கோப்பையில் தனி மனிதன் அடித்த அதிகபட்ச ஸ்கோராகவும் அமைந்தன.

இந்தத் தொடரில் அரையிறுதிப் போட்டியைத் தவிர எல்லாப் போட்டிகளிலும் இந்தியா எதிரணியை ஆல்-அவுட் செய்தது.

முந்தைய உலகக்கோப்பைகள்

Vikatan
அடுத்த கட்டுரைக்கு