Published:Updated:

தோனி, மலிங்கா, மாலிக்... யாருக்கெல்லாம் இது கடைசி உலகக் கோப்பை? #WorldCup2019

தோனி, மலிங்கா, மாலிக்... யாருக்கெல்லாம் இது கடைசி உலகக் கோப்பை? #WorldCup2019
News
தோனி, மலிங்கா, மாலிக்... யாருக்கெல்லாம் இது கடைசி உலகக் கோப்பை? #WorldCup2019

இந்திய வீரர்களுள் தோனிக்கு இதுவே கடைசி உலகக் கோப்பை. அவர் நிச்சயம் ஓரிரு ஆண்டுகளுக்கு மேல் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடப்போவதில்லை என்பதால், அவருடைய நான்காவது உலகக் கோப்பையே கடைசியாகவும் இருக்கும்.

லகக் கோப்பை, வெறும் கொண்டாட்டங்களை மட்டும் கொண்டுவருவதில்லை. சில சகாப்தங்களின் முடிவாகவும் அவை அமைகின்றன. இம்ரான் கான், பிரயன் லாரா, மைக்கேல் கிளார்க் எனப் பல சகாப்தங்கள் உலகக் கோப்பைக்குப் பின் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்தோ, மொத்தமாகவோ ஓய்வு பெற்றிருக்கின்றன. சிலர், கடைசி தொடர் என்பதையே ரொம்ப எமோஷனலாக எடுத்துக்கொள்வார்கள். கேப்டன்களைப் பொறுத்தவரை, பலரது பதவியையும் அந்தத் தொடர் பறித்துவிடும். ஜெயசூர்யா, ஷான் போலக் போல..! இதுவரை இப்படிப் பல முடிவுகளை உலகக் கோப்பைகள் சந்தித்திருக்கின்றன. இந்த உலகக் கோப்பை அப்படி யாருக்கெல்லாம் முடிவுரை எழுதப்போகிறது என்று பார்ப்போம். 

கிறிஸ் கெய்ல்

5 உலகக் கோப்பைகளில் விளையாடிய கையோடு, வெஸ்ட் இண்டீஸ் யூனிஃபார்மைக் கழட்டிவைக்கவிருக்கிறது இந்த ஜமைக்காப் புயல். டி-20 கிரிக்கெட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர், சர்வதேச கிரிக்கெட்டிலும் தன்னுடைய முத்திரைகளைப் பதித்துக்கொண்டுதான் இருக்கிறார். டி-20 போட்டியில் சதம், ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம், டெஸ்டில் முச்சதம் என்ற அட்டகாசமான சாதனையைப் படைத்திருக்கிறார் கெய்ல். சில காலம் அணியில் தேர்வு செய்யப்படாமல் இருந்தாலும், திரும்பி வரும்போதெல்லாம் அதை மாஸ் கம்பேக்காக மாற்றியிருக்கிறார் கெய்ல். இங்கிலாந்துக்கு எதிராக பிரிட்ஜ்டவுனில் அவர் அடித்த சதம், அதற்கான எடுத்துக்காட்டு. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தோனி, மலிங்கா, மாலிக்... யாருக்கெல்லாம் இது கடைசி உலகக் கோப்பை? #WorldCup2019

40 வயதை நெருங்கினாலும், பிட்சில் ஓடுவது முற்றிலுமாகக் குறைந்திருந்தாலும், இன்னும் அந்த சிக்சர் அடிக்கும் பலம் அவரிடம் குறையவில்லை. 2015 தொடரில் இரட்டைச் சதமடித்து அசத்தியவர், இந்த முறையும் சில மிரட்டல் இன்னிங்ஸ்கள் ஆடலாம். வெஸ்ட் இண்டீஸ், அரையிறுதிக்குத் தகுதி பெறாது என்று பிராக்டிகலாக யோசித்தால், அவரின் கடைசி சர்வதேசப் போட்டி ஆப்கானிஸ்தான் அணியுடன். எந்த ஆட்டத்திலும் எந்தச் சாதனையும் படைக்கப்படலாம்! 

இம்ரான் தாஹிர்

40 வயதாகிவிட்டது. ஆனாலும், பராசக்தி எக்ஸ்பிரஸ் ஓய்வதாய்த் தெரியவில்லை. சேப்பாக்கத்தில் அடிக்கடி டேக் ஆஃப் ஆகிக்கொண்டிருந்தது. வயதாகிவிட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல், இன்னும் ஓடிக்கொண்டேயிருக்கும் தாஹிர் மிகப்பெரிய ஆச்சர்யம்தான். இந்தத் தொடரின்போதுதான் அவர் தன்னுடைய 100-வது ஒருநாள் போட்டியை விளையாடப்போகிறார். இந்த ஐ.பி.எல் தொடரில் 26 விக்கெட்டுகள் வீழ்த்தி மெர்சல் செய்த இவர், நிச்சயம் இங்கிலாந்திலும் ஒரு பெரிய மாற்றத்தை நிகழ்த்தக்கூடும். இலங்கைக்கு எதிரான தொடரில், எமோஷனல் ஃபேர்வெல் எல்லாம் முடிந்துவிட்டது. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வரலாற்றின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் என்ற சிறப்போடு ஓய்வு பெறப்போகிறார். 

தோனி, மலிங்கா, மாலிக்... யாருக்கெல்லாம் இது கடைசி உலகக் கோப்பை? #WorldCup2019

ஜே.பி.டுமினி

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வரலாற்றின் தவிர்க்க முடியாத ஒருவராக இருந்திருக்க வேண்டியவர் டுமினி. ஆனால், கன்சிஸ்டென்சி இல்லாத அவரது ஆட்டம், மற்றுமொரு சாதாரண வீரராக, அவரது கிரிக்கெட் வாழ்க்கைக்கு முடிவுரை எழுதவுள்ளது. 2007 - 2010 காலகட்டத்தில், இவர் ஆடிய ஆட்டத்தைத் தொடர்ந்திருந்தால், இந்நேரம் டி வில்லியர்ஸுக்கு நிகராகப் பேசப்பட்டிருப்பார். ஏற்கெனவே உள்ளூர் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றுவிட்டதால், இனி டி-20 தொடர்களில் மட்டுமே இவரைப் பார்க்கலாம். 

2015 தொடரில், 5-வது விக்கெட்டுக்கு உலக சாதனை பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த டுமினி, பந்துவீச்சிலும் ஒரு கை பார்த்து ஹாட்ரிக் வீழ்த்தி அசத்தினார். அதைப்போல், சில ஆச்சர்ய பர்ஃபாமன்ஸ்களைக் கொடுத்தால், ஓய்வு நாள்களுக்கான சிறப்பான நினைவுகளைச் சேமித்துக்கொள்ளலாம். 

தோனி, மலிங்கா, மாலிக்... யாருக்கெல்லாம் இது கடைசி உலகக் கோப்பை? #WorldCup2019

இவர்கள் மட்டுமே, இப்போதைக்கு உறுதியாக ஓய்வு பற்றிச் சொன்ன வீரர்கள். இவர்கள் தவிர்த்து, பலரும் உலகக் கோப்பையோடு நடையைக் கட்டலாம். ஒரு சில வீரர்கள் இப்போது ஓய்வை அறிவிக்காவிட்டாலும், இன்னும் ஓரிரு ஆண்டுகளில் அந்தக் கட்டத்தை அடைந்துவிடுவார்கள். அவர்களுக்கு இதுவே கடைசி தொடராக இருக்கலாம். பிளங்கட், ஷான் மார்ஷ், ராஸ் டெய்லர், மொர்டசா, ஹசிம் அம்லா, மலிங்கா, ஜீவன் மெண்டிஸ், முகமது ஹஃபீஸ், ஷோயப் மாலிக், ஆஸ்கர் ஆஃப்கன் போன்ற வீரர்களுக்கு இதுவே கடைசி உலகக் கோப்பைத் தொடராக இருக்கும். ஒருசிலர் ஒருநாள் போட்டிகளிலிருந்தே கூட விலகலாம். 

இந்திய வீரர்களுள், தோனிக்கு இதுவே கடைசி உலகக் கோப்பை. அவர் நிச்சயம் ஓரிரு ஆண்டுகளுக்கு மேல் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடப்போவதில்லை என்பதால், அவருடைய இந்த நான்காவது உலகக் கோப்பையே, கடைசியாகவும் இருக்கும். கேதர் ஜாதவ், ஷிகர் தவான் ஆகியோர் அடுத்த உலகக் கோப்பையில் ஆடுவதும் சந்தேகம்தான். வயது அவர்களுக்கு ஒத்துழைக்க வாய்ப்பில்லை. இயான் மோர்கன், ஃபின்ச், கவாஜா, டிம் சௌத்தி, கிராந்தோம் ஆகியோரும் காலப்போக்கில் அணிகளில் தங்கள் இடங்களை இழக்கக்கூடும். இளம் வீரர்களின் வருகை, அவர்களை இன்னும் 4 வருடங்களுக்கு அணிகளில் வைத்திருக்காது. 

தோனி, மலிங்கா, மாலிக்... யாருக்கெல்லாம் இது கடைசி உலகக் கோப்பை? #WorldCup2019

கேப்டன்களைப் பொறுத்தவரை, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகள் கோப்பை வெல்லாவிட்டாலும் தங்கள் கேப்டன்களைத் தக்கவைத்துக்கொள்ளவே வாய்ப்பு அதிகம். இந்தியாவும் அப்படித்தான். கோப்பை வெல்லாவிட்டால், கோலி பதவி விலகப்போவதில்லை, அவரை விலக்கும் முடிவை எடுக்கக்கூடிய தைரியசாலியும் பி.சி.சி.ஐ வசம் இல்லை. எனவே, இந்திய அணியில் மாற்றங்கள் இருக்கப்போவதில்லை. கோப்பை வெல்லாவிட்டால், மோர்கன் பதவி விலக வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. பதவி பறிக்கப்பட்டு ஜோ ரூட் வசம் கொடுக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது. ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோசமான முடிவுகளைச் சந்தித்தால், கேப்டன்களின் தலை நிச்சயம் உருளும். எது நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்!