Published:Updated:

அஷ்வின் சந்தேகத்தால் பதறிய ரசிகர்கள்! - ஜெயசூர்யா பதிலால் நிம்மதி

ராம் பிரசாத்
அஷ்வின் சந்தேகத்தால் பதறிய ரசிகர்கள்! - ஜெயசூர்யா பதிலால் நிம்மதி
அஷ்வின் சந்தேகத்தால் பதறிய ரசிகர்கள்! - ஜெயசூர்யா பதிலால் நிம்மதி
அஷ்வின் சந்தேகத்தால் பதறிய ரசிகர்கள்! - ஜெயசூர்யா பதிலால் நிம்மதி

என்னது சிவாஜி செத்துட்டாரா... இந்த வசனம் திரைப்படத்தில் ஒரு நகைச்சுவை காட்சியில் இடம்பிடிக்கும். 1980 - 90களில் முக்கிய நிகழ்வுகள் எல்லாம் அகில இந்திய வானொலியிலும், அடுத்த நாள் வரும் நாளிதழ்களிலும்தான் பார்த்து மக்கள் தெரிந்துகொண்டனர். இந்த நவீன அறிவியல் உலகத்தில் உலகின் எந்த மூளையில் நடக்கும் நிகழ்வுகளும் சமூகவலைதளங்கள் மூலம் நொடிப்பொழுதில் இப்போது தெரிந்துவிடுகிறது. அதிலும் அதிக பயனாளர்களை கொண்ட ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்களில் பரவும் தகவல்கள் உண்மையா என்று கூட ஆராயாமல் பலருக்குப் பகிரப்படுகிறது.  

அஷ்வின் சந்தேகத்தால் பதறிய ரசிகர்கள்! - ஜெயசூர்யா பதிலால் நிம்மதி

சினிமா, விளையாட்டு பிரபலங்கள் போன்றவர்கள் குறித்து வெளியாகும் தகவல் காட்டுத்தீபோல் பரவ ஆரம்பித்துவிடுகிறது. இதை அதே துறையில் இருக்கும் ஒரு பிரபலம் தெரியாமல் பகிர்ந்துவிட்டால் அவ்வளவு அந்த வதந்தி உண்மை என நம்பப்பட்டு விடும். இப்படிதான் சமீபத்தில் இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா குறித்து ஒரு வதந்தி பரவியது. கனடா சென்ற ஜெயசூர்யா அங்கு நடந்த சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டதாக ஒரு வதந்தி பரவியது. இந்த வதந்தி இந்திய வீரர் அஸ்வினுக்கு எட்டியது. ஆனால், இந்தத் தகவல் அதிகாரபூர்வமான தகவல் இல்லை எனக் கருதிய அஸ்வின் சந்தேகத்துடன் ஒரு ட்வீட்டைத் தட்டிவிட்டார்.

அஷ்வின் சந்தேகத்தால் பதறிய ரசிகர்கள்! - ஜெயசூர்யா பதிலால் நிம்மதி


அஷ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் `ஜெயசூர்யா குறித்து ஒரு செய்தி கேள்விப்பட்டேன் அது உண்மையா? வாட்ஸ் அப்பில் எனக்கு அந்தச் செய்தி வந்து. ஆனால், ட்விட்டரில் அதுபோன்று எதுவும் தென்படவில்லை’ என ட்வீட் செய்தார். இது தவறான தகவல் என அவரது கமென்ட் பாக்ஸில் நிறைய நண்பர்கள் பதிவிட்டனர். இந்த வதந்தி தொடர்பாக ஜெயசூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், ``என் உடல் நலம் குறித்து வெளியாகும் தவறான தகவல்களைப் புறக்கணியுங்கள். நான் இலங்கையில்தான் இருக்கிறேன். கனடாவுக்கு எல்லாம் செல்லவில்லை. இதுபோன்ற வதந்திகளைப் புறக்கணியுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Vikatan