Published:Updated:

உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்பு யாருக்கு இருக்கிறது? - கேப்டன்களின் `அடடே' பதில்கள்!

உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்பு யாருக்கு இருக்கிறது? - கேப்டன்களின் `அடடே' பதில்கள்!
உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்பு யாருக்கு இருக்கிறது? - கேப்டன்களின் `அடடே' பதில்கள்!

உலகக்கோப்பை தொடர் வரும் 30 -ம் தேதி தொடங்குகிறது. முன்னதாக பயிற்சி ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இந்நிலையில் நேற்று அனைத்து அணியின் கேப்டன்களும் கலந்துகொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பல சுவாரஸ்ய கேள்விகள் முன்வைக்கப்பட்டன. மற்ற அணியிலிருந்து ஒரு வீரர் உங்கள் அணிக்கு வேண்டும் என்றால் யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள் உள்ளிட்ட பல கேள்விகள் கேட்கப்பட்டன. 

உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்பு யாருக்கு இருக்கிறது? - கேப்டன்களின் `அடடே' பதில்கள்!

அதேபோன்று உங்கள் பார்வையில் உலகக்கோப்பையை வெல்லும் அணி எது என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கேப்டன்களின் பதில் என்னவாக இருந்தது என்பதைப் பார்க்கலாம்....!

ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச்:

இது ஒரு நல்ல கேள்வி. என்னைப் பொறுத்தவரையில் இங்கிலாந்து அணி கடந்த இரண்டு ஆண்டுகளாக நல்ல ஃபார்மில் இருக்கிறது. இந்தியாவும்தான். இந்த இரண்டு அணியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இங்கிலாந்து அணிக்குக் கூடுதல் வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன். எங்கள் அணியிலும் கடந்த முறை உலகக்கோப்பையை வென்றபோது அணியில் இருந்த 6 பேர் தற்போதும் உள்ளனர். இது ஒரு நல்ல விஷயம். ஆனால் விளையாட ஆரம்பித்த பின்னர் அழுத்தம் இருக்கும். அதைச் சமாளித்து ஆட வேண்டும். மொத்தத்தில் இரு ஒரு நல்ல தொடராக இருக்கும்.

உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்பு யாருக்கு இருக்கிறது? - கேப்டன்களின் `அடடே' பதில்கள்!

இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன்:

யார் கோப்பை வெல்வார்கள் என்று எனக்குச் சுத்தமாக எந்த ஐடியாவும் இல்லை. இங்கு ஓர் அணி மற்ற அணியைவிட சிறந்தது எனச் சொல்ல முடியாது. உலகின் டாப் 10 அணிகள் மட்டுமே இங்கு மோதவுள்ளன. அனைத்து அணியுமே டாப் டீம்தான். இங்கு இந்த முறை கொஞ்சம் தரமான கிரிக்கெட்டைப் பார்க்கலாம். 

சொந்த மண்ணில் விளையாடுவது குறித்து சொல்கிறார்கள். சொந்த மண்ணில் விளையாடுவது நல்ல விஷயம்தான். அதனால்தான் அதைச் சாதகமான விஷயமாகச் சொல்கிறோம். ரசிகர்கள் ஆதரவு இருக்கும். இங்கு அதிக போட்டிகளில் விளையாடி இருக்கிறோம். இங்கிலாந்து நாட்டில் கிரிக்கெட் விளையாடுவது எப்போதும் சிறப்பாக இருக்கும். இங்கு இருக்கும் எந்த கேப்டன்களைக் கேட்டாலும் சொல்வார்கள், அவர்கள் இங்கிலாந்து மண்ணில் விளையாட விரும்புவதை.

இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி:

நாங்கள் விளையாட இருக்கும் இரண்டு பயிற்சி ஆட்டங்களும் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப இருக்கிறார்கள். எங்கு விளையாடினாலும் எங்கள் மீது அழுத்தம் இருக்கிறது. நாங்கள் உலகில் எங்கு விளையாடினாலும் எங்களுக்கு ரசிகர்களின் ஆதரவு இருக்கிறது. ஆரோன் பின்ச் கருத்தை ஒத்துக்கொள்கிறேன். இங்கிலாந்துக்குக் கூடுதல் வாய்ப்பு இருப்பதாகக் கருதுகிறேன். உள்ளூரில் விளையாடுவது அவர்களுக்குக் கூடுதல் பலம். அதே நேரத்தில் மார்கன் சொன்னதைப் போல் இங்கு விளையாட வந்திருக்கும் 10 அணிகளும் பலமான அணிதான். அனைத்து அணிகளுக்கும் எதிராக ஒருமுறைதான் மோதுவோம். இதுதான் சவாலான விஷயம். இந்த உலகக்கோப்பைதான் சவாலானது என்பது எனது கருத்து!

உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்பு யாருக்கு இருக்கிறது? - கேப்டன்களின் `அடடே' பதில்கள்!

பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது!

கோலி மற்றும் மார்கன் சொன்னதை போன்று அனைத்து அணிகளும் பலமான அணிதான். ரசிகர்கள் இங்குத் தரமான கிரிக்கெட்டைப் பார்க்கவுள்ளனர். பாகிஸ்தானின் இங்கிலாந்து சுற்றுப்பயணங்களைப் பார்த்தால், தெரியும் பாகிஸ்தான் இங்கிலாந்தில் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறது என்று. நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். சிறப்பாக விளையாடுவோம்
        
இலங்கை கேப்டன் கருணாரத்னே:

நாங்கள் சற்று முன்னதாகவே இங்கு வந்தோம். இங்குள்ள சூழலைப் புரிந்துகொள்ள இது உதவும். நாங்கள் கடந்த காலங்களில் இங்கிலாந்து மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறோம். எங்களின் பெஸ்டை கொடுப்போம்!

உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்பு யாருக்கு இருக்கிறது? - கேப்டன்களின் `அடடே' பதில்கள்!

நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன்:
 

கடந்த உலகக் கோப்பையில் விளையாடிய சில வீரர்கள் இன்னும் எங்கள் அணியில் இருக்கிறார்கள். இந்த அனுபவம் எங்களுக்கு உதவும். 4 வருடங்களுக்கு ஒருமுறை உலகக்கோப்பை தொடர் நடப்பதால் நிச்சயம் புதிய வீரர்கள் அணிக்கு வந்திருப்பார்கள். போட்டி நாளில் எதுவும் நடக்கலாம். அதுதான் போட்டியின் சுவாரஸ்யமும் கூட

தென்னாப்பிரிக்கா கேப்டன் ஃபாஃப் டூப்ளெஸ்ஸிஸ்:

சர்வதேச கிரிக்கெட்டை கவனித்தால் தெரியும், உள்ளூர் ஆட்டமோ வெளியூர் ஆட்டமோ அனைத்துமே சவாலானதாகத்தான் இருந்திருக்கிறது. உள்ளூர் அணியில் ஆதிக்கம் இருக்கும் என்பது கிடையாது. மற்ற கேப்டன்கள் சொன்னதைப் போன்று இந்தத் தொடரை ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். அனைத்து அணிகளுக்கு எதிராகவும் ஒருமுறைதான் விளையாட இருக்கிறோம். இது நிச்சியம் சிறப்பான தொடராக இருக்கும்.

வங்கதேச கேப்டன் மோர்டசா:

எங்கள் அணி சிறப்பாக இருக்கிறது. இதுவரையில் இருந்ததில் இது சிறந்த அணி என நான் நினைக்கிறேன். நிறைய இளம் வீரர்கள் அணியில் உள்ளனர். அவர்களின் ஆட்டத்தைக் காண ஆவலுடன் இருக்கிறோம்.

உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்பு யாருக்கு இருக்கிறது? - கேப்டன்களின் `அடடே' பதில்கள்!

ஆப்கானிஸ்தான் கேப்டன் குல்பதீன் நையீப்: 
  
எங்கள் நாட்டில் தற்போது அமைதி நிலவுகிறது. அதற்கு கிரிக்கெட்டுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. ஒரு நல்ல கிரிக்கெட்டை வழங்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதிக அளவிலான ரசிகர்களின் முன்னால் விளையாடுவதற்கு ஆர்வமாக இருக்கிறோம்.   
 

Vikatan