Published:Updated:

மற்ற அணியிலிருந்து ஒருவரை தேர்வு செய்யச் சொன்னால்...? - உலகக்கோப்பை கேப்டன்களின் சுவாரஸ்ய பதில்கள்

மற்ற அணியிலிருந்து ஒருவரை தேர்வு செய்யச் சொன்னால்...? - உலகக்கோப்பை கேப்டன்களின் சுவாரஸ்ய பதில்கள்
மற்ற அணியிலிருந்து ஒருவரை தேர்வு செய்யச் சொன்னால்...? - உலகக்கோப்பை கேப்டன்களின் சுவாரஸ்ய பதில்கள்

இந்தியாவில் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர், மக்களவைத் தேர்தல் என இரட்டைத் திருவிழா நடைபெற்று வந்தது. ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா முடிந்துவிட்ட நிலையில் தற்போது தேர்தல் திருவிழாவும் முடிந்துவிட்டது. இந்நிலையில், அனைவரது கவனமும் இங்கிலாந்தில் இன்னும் சில தினங்களில் தொடங்க இருக்கும் உலகக்கோப்பை தொடர் மீது திரும்பியுள்ளது. 

மற்ற அணியிலிருந்து ஒருவரை தேர்வு செய்யச் சொன்னால்...? - உலகக்கோப்பை கேப்டன்களின் சுவாரஸ்ய பதில்கள்

Photo Credit: Twitter/ cricketworldcup

இதற்கான 10 அணிகளும் இங்கிலாந்து சென்றுவிட்டது. தற்போது உலகக்கோப்பையில் லீக் ஆட்டங்களுக்கு முன்னதாகப் பயிற்சி ஆட்டங்களில் விளையாடவுள்ளது. இந்திய அணி தென்னாப்பிரிக்காவுடனான தனது முதலாவது லீக் ஆட்டத்துக்கு முன்னதாக நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளது. 

மற்ற அணியிலிருந்து ஒருவரை தேர்வு செய்யச் சொன்னால்...? - உலகக்கோப்பை கேப்டன்களின் சுவாரஸ்ய பதில்கள்

Photo Credit: Twitter/ cricketworldcup

இந்நிலையில் நேற்று இங்கிலாந்தில் அனைத்து கேப்டன்களும் கலந்துகொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அவர்களிடம் பல சுவாரஸ்ய கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அதில் முக்கியமானது, மற்ற அணியிலிருந்து உங்கள் அணிக்கு ஒரு வீரர் வேண்டும் என்றால் யாரை எடுப்பீர்கள் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு வீரர்கள் முன்வைத்த பதில்கள் பின்வருமாறு:

இலங்கை கேப்டன் திமுத் கருணாரத்னே: எங்களுக்கு இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் வேண்டும்!

தென்னாப்பிரிக்கா கேப்டன் ஃபாஃப் டூப்பெளஸ்ஸிஸ்: பந்துவீச்சு என்றால் ரஷித் கான் அல்லது பும்ரா, பேட்டிங் என்றால் விராட் கோலி

நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன்: எனக்குப் பந்துவீச்சாளர்தான் தேவை. ரஷித் கான்

பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் கான்: ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து)

மேற்கு இந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஹோல்டர்: எங்கள் அணி சிறப்பாக இருக்கிறது. மற்ற அணியிலிருந்து வீரர்கள் தேவை இல்லை. 

வங்கதேச கேப்டன் மோர்டசா: (கோலியை கை காட்டி) அவர்தான் எங்களுக்கு வேண்டும்!

ஆஃப்கானிஸ்தான் கேப்டன் குல்பதீன் நையீப்: அது ஆட்டத்தின் அன்றுதான் சொல்ல முடியும். மாறுபடவும் செய்யும். 

மற்ற அணியிலிருந்து ஒருவரை தேர்வு செய்யச் சொன்னால்...? - உலகக்கோப்பை கேப்டன்களின் சுவாரஸ்ய பதில்கள்

Photo Credit: Twitter/ cricketworldcup

ஆஸ்திரேலிய கேப்டன் பின்ச்: தென்னாப்பிரிக்காவின் ரபாடா இருந்தால் கூடுதல் பலமாக இருக்கும்

இந்திய அணியின் கேப்டன் கோலி: தென்னாப்பிரிக்காவின் ஃபாஃப் டூப்பெளஸ்ஸிஸ்

போட்டியை நடத்தும் நாடான இங்கிலாந்து அணியின் கேப்டன் மார்கன் வித்தியாசமான பதில் ஒன்றை அளித்தார். அவர், ``நான் மற்ற அணியிலிருந்து ஒரு வீரரை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக ஆஸ்திரேலிய அணியின் உதவி பயிற்சியாளர் எங்களது பயிற்சியாளர் குழுவில் இருக்க வேண்டும் என்பேன்" என்றார். ஆஸ்திரேலியாவின் உதவி பயிற்சியாளராக தற்போது அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பான்டிங் இருக்கிறார். 

கேப்டன்களின் இந்தப் பதில்கள் அணியில் இருக்கும் பலம் மற்றும் பலவீனங்கள் குறித்துத் தெரிந்துகொள்ள வசதியாக இருக்கிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மற்ற அணியிலிருந்து ஒரு வீரரை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்றால் நீங்கள் யாரை தேர்ந்தெடுப்பீர்கள்...? ஒரு வீரர் மட்டுமே....! 
 

Vikatan