Published:Updated:

`எப்படி போனாங்களோ அப்படியே வந்திருக்காங்க’ – ஆறாவது முறை ஆஸி சாம்பியன்?! #CWC19

`எப்படி போனாங்களோ அப்படியே வந்திருக்காங்க’ – ஆறாவது முறை ஆஸி சாம்பியன்?! #CWC19

பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், இந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் வைத்திருக்கும் சராசரி - 43.55. ஆனால், அவருக்கே அந்த அணியில் இடமில்லை. அந்த அளவுக்கு பலமான அணியாக இருக்கிறது ஆஸ்திரேலியா.

Published:Updated:

`எப்படி போனாங்களோ அப்படியே வந்திருக்காங்க’ – ஆறாவது முறை ஆஸி சாம்பியன்?! #CWC19

பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், இந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் வைத்திருக்கும் சராசரி - 43.55. ஆனால், அவருக்கே அந்த அணியில் இடமில்லை. அந்த அளவுக்கு பலமான அணியாக இருக்கிறது ஆஸ்திரேலியா.

`எப்படி போனாங்களோ அப்படியே வந்திருக்காங்க’ – ஆறாவது முறை ஆஸி சாம்பியன்?! #CWC19

`மஞ்சள் சட்டைக்காரர்கள் அவ்வளவுதான்' என்று எல்லோரும் நினைத்திருக்க, மாஸ் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறது ஆஸ்திரேலியா. தொடர் தோல்விகளுக்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தான் அணிகளை அவர்கள் பந்தாட, ஐ.பி.எல் தொடரில் ஒட்டுமொத்த உலகத்துக்கும் வேப்பிலை அடித்திருக்கிறார் டேவிட் வார்னர். தன் பங்குக்கு, கேப்டன் ஆனவுடனேயே அரைசதம் அடித்து, சைலன்ட்டாக கம்பேக் கொடுத்திருக்கிறார் ஸ்டீவ் ஸ்மித். கடந்த உலகக் கோப்பைக்குப் பின் எப்படிப் போனதோ, அப்படியே திரும்ப வந்திருக்கிறது ஆஸி அணி... சாம்பியன்களாக! 

கேப்டன் : ஆரோன் ஃபின்ச்

பயிற்சியாளர் : ஜஸ்டின் லேங்கர்

ஐ.சி.சி ஒருநாள் ரேங்கிங் : 5

உலகக் கோப்பையில் இதுவரை :

உலகக் கோப்பை பர்ஃபாமன்ஸ்
1975 ரன்னர் அப்
1979 குரூப் சுற்று
1983 குரூப் சுற்று
1987 சாம்பியன்
1992 குரூப் சுற்று
1996 ரன்னர் அப்
1999 சாம்பியன்
2003 சாம்பியன்
2007 சாம்பியன்
2011 காலிறுதி
2015 சாம்பியன்
`எப்படி போனாங்களோ அப்படியே வந்திருக்காங்க’ – ஆறாவது முறை ஆஸி சாம்பியன்?! #CWC19

பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், இந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் வைத்திருக்கும் சராசரி - 43.55. ஆனால், அவருக்கே அந்த அணியில் இடமில்லை. அந்த அளவுக்கு பலமான அணியாக இருக்கிறது ஆஸ்திரேலியா. கடந்த ஓராண்டாக தடுமாறிக்கொண்டிருந்தவர்கள், ஃபார்முக்கு வந்த நேரத்தில், வார்னர், ஸ்மித் இருவரும் அணிக்குத் திரும்பியது அவர்களைப் பலமடங்கு பலப்படுத்தியுள்ளது. ஐ.பி.எல் தொடரில் வார்னர் அடித்த அடியைப் பார்த்தால், உலகக் கோப்பையில் எந்த அணியும் தப்பாது என்றே தோன்றுகிறது.

ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஆனபிறகு ஸ்டீவ் ஸ்மித்தும் சிறப்பாகவே செயல்பட்டார். ஃபின்ச், வார்னர், கவாஜா, ஸ்மித், ஸ்டோய்னிஸ், மேக்ஸ்வெல், கேரி அடங்கிய பேட்டிங் ஆர்டர் ஃபுல் ஃபார்மில் இருக்கிறது. ஹேசில்வுட் இன்னும் காயத்திலிருந்து முழுமையாகக் குணமடையாவிட்டாலும், மிட்சல் ஸ்டார்க் பேட் கம்மின்ஸ், நாதன் கூல்டர்நைல், ஜேசன் பெரண்டார்ஃப் அடங்கிய பௌலிங் யூனிட் மிரட்டலாகவே இருக்கிறது. ஸ்டார்க் சமீபத்திய போட்டிகளில் பெரிய அளவில் தாக்கம் ஏற்படுத்தாதது மட்டுமே ஆஸ்திரேலியாவின் கவலை. ஜை ரிச்சர்ட்சன் காயத்தால் விலகியிருப்பது பௌலிங் யூனிட்டைக் கொஞ்சம் பலவீனப்படுத்துகிறது. அவரது வேரியேஷன்களை ஆஸ்திரேலியா மிஸ் செய்யலாம்! 

`எப்படி போனாங்களோ அப்படியே வந்திருக்காங்க’ – ஆறாவது முறை ஆஸி சாம்பியன்?! #CWC19

ஷான் மார்ஷ் - இந்த ஆஸ்திரேலிய அணியில் கொஞ்சம் கேள்விக்குட்படுத்தவேண்டிய தேர்வு. அனுபவத்தின் காரணமாக மார்ஷ் அணியில் இடம்பிடித்துவிட, சுழலை மிகச்சிறப்பாகக் கையாளக்கூடிய ஹேண்ட்ஸ்கோம்ப் வெளியே அமரவேண்டியதாகிவிட்டது. மேலும், பேக் அப் கீப்பரையும் ஆஸ்திரேலியா இழந்துள்ளது.

டோனி ஸ்டார்க், தானோசைக் கொன்று உலகத்தைக் காப்பாற்றிவிட்டார். ஆர்யா ஸ்டார்க், நைட் கிங்கைக் கொன்று வெஸ்டரோசைக் காப்பாற்றிவிட்டார். இது, மிட்செல் ஸ்டார்க் முறை. ஆஸ்திரேலியாவின் கோப்பையைத் தக்கவைத்து, கிரிக்கெட் உலகில் அவர்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டவேண்டிய பொறுப்பு இவரிடம் இருக்கிறது. கடந்த உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்றவர், இங்கிலாந்திலும் தன் வேகத்தைக் காட்டி மிரட்டக்கூடும். காயத்திலிருந்து முழுமையாகக் குணமடைந்துவிட்டால், இவரது யார்க்கர்கள் இங்கிலாந்தில் பல சேதங்களை ஏற்படுத்தும். ஆனால், ஸ்டார்க் முழுமையாக வரவேண்டுமே..!

`எப்படி போனாங்களோ அப்படியே வந்திருக்காங்க’ – ஆறாவது முறை ஆஸி சாம்பியன்?! #CWC19

கவனிக்கப்படவேண்டிய வீரர்கள்

பேட் கம்மின்ஸ்

13 ஆண்டுகள் கழித்து ஆஸ்திரேலியர் ஒருவர், டெஸ்ட் பவுலர்கள் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் அமர்ந்திருக்கிறார். பேட் கம்மின்ஸ் - நம்பிக்கையிழந்த ஆஸ்திரேலிய அணிக்கு ஆக்சிஜனாய் மாறியிருக்கிறார். எவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் கம்மின்ஸ் காட்டும் கன்சிஸ்டென்ஸி ஆச்சர்யமாக இருக்கிறது. புஜாராவின் மகத்தான அரணை எளிதாக உடைத்தவருக்கு, ஒருநாள் போட்டிகளில் விக்கெட் எடுப்பது கடினமாக இருக்கப்போவதில்லை. இன்னும் ஒருநாள் போட்டிகளில் 33.6 என்ற மிகச் சிறப்பான ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கிறார். இப்போதிருக்கும் ஃபார்மில், குறைந்தபட்சம் 15-20 விக்கெட்டுகள் நிச்சயம் வீழ்த்தக்கூடும். இவரை ஃபிட்டாக வைத்திருப்பது மட்டும்தான் ஆஸ்திரேலிய அணி செய்யவேண்டிய ஒரே விஷயம். மிட்செல் ஸ்டார்க், தன் ஆயுதங்களை முற்றிலுமாக இழந்துவிட்ட நிலையில், கடந்த உலகக் கோப்பையில் அவர் செய்ததை, இந்த முறை கம்மின்ஸ் செய்வார் என்று எதிர்பார்க்கலாம். 

`எப்படி போனாங்களோ அப்படியே வந்திருக்காங்க’ – ஆறாவது முறை ஆஸி சாம்பியன்?! #CWC19

டேவிட் வார்னர்

`நிஜமாலுமே ஒரு வருஷம் நீ சும்மாதான் இருந்தியா?' என்று சிலிர்க்கும் அளவுக்கு ஐ.பி.எல் தொடரில் ரன் குவித்திருக்கிறார் இந்த ஆஸ்திரேலியர். அதுவும் 12 போட்டிகளில் 692 ரன்கள் (சராசரி : 69.2). 8 அரை சதம், 1 சதம் என ஒரு பௌலரையும் விட்டு வைக்கவில்லை இந்த லிட்டில் டைனமோ. சொல்லப்போனால் இது வார்னர் 2.0! கடந்த சில மாதங்களாகத் துவண்டு கிடந்த ஆஸ்திரேலிய அணி, மீண்டு கொண்டிருக்கும் இந்த நிலையில், இவரது ஃபார்ம் அணிக்குப் பலமடங்கு பலம் சேர்க்கிறது. உலகக் கோப்பையின் டாப் ஸ்கோரர் இவர்தான் என்று மெல்போர்ன் கங்காருக்கள் ஆருடம் சொல்லியிருக்கின்றன!

`எப்படி போனாங்களோ அப்படியே வந்திருக்காங்க’ – ஆறாவது முறை ஆஸி சாம்பியன்?! #CWC19

ஆஸ்திரேலியாவின் அட்டவணை

தேதி நேரம் போட்டி மைதானம்
ஜூன் 1 மாலை 6 மணி ஆப்கானிஸ்தான் vs ஆஸ்திரேலியா கவுன்டி மைதானம், பிரிஸ்டோல்
ஜூன் 6 மாலை 3 மணி ஆஸ்திரேலியா vs வெஸ்ட் இண்டீஸ் டிரென்ட் பிரிட்ஜ், நாட்டிங்ஹாம்
ஜூன் 9 ஞாயிறு இந்தியா vs ஆஸ்திரேலியா கென்னிங்டன் ஓவல், லண்டன்
ஜூன் 12 புதன் ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான் தி கூப்பர் அசோசியேட்ஸ் கவுன்டி மைதானம், டான்டன்
ஜூன் 15 மாலை 3 மணி இலங்கை vs ஆஸ்திரேலியா கென்னிங்டன் ஓவல், லண்டன்
ஜூன் 20 மாலை 3 மணி ஆஸ்திரேலியா - வங்கதேசம் டிரென்ட் பிரிட்ஜ், நாட்டிங்ஹாம்
ஜூன் 25 மாலை 3 மணி இங்கிலாந்து - ஆஸ்திரேலியா லார்ட்ஸ், லண்டன்
ஜூன் 29 மாலை 6 மணி நியூசிலாந்து - ஆஸ்திரேலியா லார்ட்ஸ், லண்டன்
ஜூலை 6 மாலை 6 மணி ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா ஓல்டு டிராஃபோர்ட், மான்செஸ்டர்

முந்தைய பாகங்கள்