Election bannerElection banner
Published:Updated:

`உலகக் கோப்பையில் மேஜிக் நிகழ்த்துவேன்!’ - தென்னாப்பிரிக்க மிஸ்டரி ஸ்பின்னர் ஷம்சி! #PlayerBio

`உலகக் கோப்பையில் மேஜிக் நிகழ்த்துவேன்!’ - தென்னாப்பிரிக்க மிஸ்டரி ஸ்பின்னர் ஷம்சி! #PlayerBio
`உலகக் கோப்பையில் மேஜிக் நிகழ்த்துவேன்!’ - தென்னாப்பிரிக்க மிஸ்டரி ஸ்பின்னர் ஷம்சி! #PlayerBio

லெக்ஸ்பின், கூக்ளி என பலரிடம் போல் இவரிடமும் ஸ்டாக் டெலிவரிகள் இருந்தாலும், பந்தைப் பிட்ச் செய்யும் லைனிலும், பந்துவீசும் வேகத்திலும் மாற்றங்களை காட்டுவதில் தான் இவரின் உண்மையான மிஸ்ட்ரி உள்ளது

பெயர் : தப்ராய்ஸ் ஷம்சி

பிறந்த தேதி : 18-2-1990

ஊர் : ஜோஹன்னஸ்பெர்க், தென்னாப்பிரிக்கா

ரோல் : பெளலர்

பேட்டிங் ஸ்டைல் : வலதுகை பேட்ஸ்மேன்

பெளலிங் ஸ்டைல் : சைனாமேன்

சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகம் : 7-6-2016

செல்லப்பெயர் : சாசரர்

`உலகக் கோப்பையில் மேஜிக் நிகழ்த்துவேன்!’ - தென்னாப்பிரிக்க மிஸ்டரி ஸ்பின்னர் ஷம்சி! #PlayerBio

பிளேயிங் ஸ்டைல்

`சைனாமேன்’ என்றழைக்கப்படும் இடதுகை லெக்ஸ்பின்னர்கள் கிரிக்கெட்டில் மிகவும் அரிது. பேட்ஸ்மேன்கள் அத்தகைய பெளலர்களை அதிகமாக விளையாடிப் பழக்கப்படாததால் அவர்களின் பந்துவீச்சு `மிஸ்டரி’யாகவே இருக்கும். தப்ராய்ஸ் ஷம்சியும் ஒரு `சைனாமேன்’ பெளலர். இது மட்டுமே அவரின் பலமல்ல; ஏற்கெனவே தன் பெளலிங்கில் இருக்கும் மிஸ்டரியில் பல வேரியேஷன்களைக் காட்டி பேட்ஸ்மேன்களைத் திக்குமுக்காடச்செய்வார். லெக்ஸ்பின், கூக்ளி என இவரிடமும் ஸ்டாக் டெலிவரிகள் இருந்தாலும், பந்தை பிட்ச் செய்யும் லைனிலும், பந்து வீசும் வேகத்திலும் மாற்றங்களைக் காட்டுவதில்தான் உண்மையான மிஸ்டரி உள்ளது. பேட்ஸ்மேன்கள் இவரைக் கணிக்கவே விட மாட்டார். பொதுவாக, ரன்களைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு பந்து வீசும் பெளலர்களை எளிதாக பேட்ஸ்மேன்கள் கையாளக்கூடும். ஆனால், ஷம்சி பந்து வீசுவதன் நோக்கம் அதுவல்ல, விக்கெட் பிரதான நோக்கம். 

`உலகக் கோப்பையில் மேஜிக் நிகழ்த்துவேன்!’ - தென்னாப்பிரிக்க மிஸ்டரி ஸ்பின்னர் ஷம்சி! #PlayerBio

கிரிக்கெட் பயணம்

2009-ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா முதல் தர தொடரில் கெளடங் அணிக்காக விளையாடி தன் கிரிக்கெட் பயணத்துக்குப் பிள்ளையார் சுழி போட்டார். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு அவரால் சிறப்பாக பந்து வீச முடியவில்லை. பிறகு, டைட்டன்ஸ் அணிக்கு விளையாடிய அவருக்கு 2013-ல் நடந்த மூன்று நாள் கோப்பை (THREE DAY CUP) கைகொடுத்தது. அந்தத் தொடரில் 47 விக்கெட்டுகள் வீழ்த்தி, அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் மூன்றாம் இடம் பிடித்தார். 2015-ம் ஆண்டு அவருக்குத் திருப்புமுனை தந்த ஆண்டு எனக் கூறலாம். கரீபியன் ப்ரீமியர் லீக்கில் செயின்ட் கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்கு விளையாடிய இவர், 11 விக்கெட்டுகள் கைப்பற்றி அந்த சீஸனின் அதிக விக்கெட் வீழ்த்தியவராகத் திகழ்ந்தார். அவரின் அந்தச் சிறப்பான செயல்பாடு, ஐ.பி.எல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அதில்  கவனம் பெற, இவருக்கு தென்னாப்பிரிக்கா அணியின் கதவும் திறந்தது.

`உலகக் கோப்பையில் மேஜிக் நிகழ்த்துவேன்!’ - தென்னாப்பிரிக்க மிஸ்டரி ஸ்பின்னர் ஷம்சி! #PlayerBio

ஏற்கெனவே இம்ரான் தாஹிர்போல் உலகத் தர ரிஸ்ட் ஸ்பின்னர் அணியில் இருந்ததால், இவருக்கு போதிய அளவு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருந்தும் கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளார். இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் தனது பெளலிங்கில் இன்னும் சில வேரியேஷன்களைக் கூட்டி அசத்தினார். தாஹிர் உலகக்கோப்பைக்குப் பிறகு விடைபெறுவதாக அறிவித்த இந்தச் சமயத்தில்  லிமிட்டெட் ஓவர்களில் தென்னாப்பிரிக்காவின் ஸ்பின் பெளலிங் அட்டாக்கில் முக்கிய அங்கம் வகிக்கப்போவது ஷம்சிதான்.

சிறந்த பர்ஃபாமன்ஸ்

* 2018-ம் ஆண்டு ஜூலையில் நடந்த இலங்கை அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் இவரின் மாயச்சுழல் பலமாக வேலைசெய்தது. பொதுவாக இலங்கை பிட்ச் ஸ்பின்னுக்குச் சாதகமாக இருக்கும். ஆனால், அன்று சுழலுக்குப் பெரிதாக ஒத்துழைப்பு தரவில்லை. இருந்தும் தன் அக்யூரசி மற்றும் வேரியேஷன்கள் மூலம் இலங்கை பேட்ஸ்மேன்களைத் திணறவைத்தார். 51 பந்துகளில் 36 டாட் பால்கள்! ஒருகட்டத்தில் பேட்ஸ்மேன்கள் அடித்து ஆடவும் செய்தனர். ஆனால், இவரது சுழல் அப்போதுதான் வேலையைக் காட்டியது. படபடவென நான்கு விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.  அதில் செட்டான பேட்ஸ்மேன்களான குசல் பெரேரா மற்றும் திசாரா பெரேராவும் அடங்குவர்.

`உலகக் கோப்பையில் மேஜிக் நிகழ்த்துவேன்!’ - தென்னாப்பிரிக்க மிஸ்டரி ஸ்பின்னர் ஷம்சி! #PlayerBio

* இரண்டு மாதங்கள் முன்பு... அதே இலங்கையுடனான டி20 போட்டி. இந்தமுறை தென்னாப்பிரிக்காவில். டி20 போட்டிகளில் ஷம்சியின் சாதனைகள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ஆனால், அந்தப் போட்டியில்  4 ஓவர்கள் வீசி வெறும் 16 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஸ்டெயின், சிபாம்லா. மோரிஸ், டுமினி என அனைவரின் பந்துவீச்சையும் இலங்கை பேட்ஸ்மேன்கள் விளாச, மிகச் சிக்கனமாகப் பந்து வீசி ரன்ரேட்டைக் கட்டுப்படுத்தினார். இல்லையேல், அந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா தோற்றிருக்கும். சொல்லப்போனால், இந்தத் தொடரின் செயல்பாடுதான் அவரின் உலகக்கோப்பை இடத்தை உறுதிசெய்தது. 

ஷம்ஷி ஸ்பெஷல்

கிரிக்கெட்டை ஆடுவதைப்போல் இவர் மேஜிக்குலும் ஆர்வம்காட்டுபவர். இவர் விக்கெட் எடுத்த பிறகு செய்யும் கொண்டாட்டமே வித்தியாசமாக இருக்கும். பஸ் டிரைவரைபோல் சமிக்ஞை செய்வது, மேஜிக் செய்வது என வித்தியாசமாகக் கொண்டாடுவார். அப்படி முகமூடி அணிந்து கொண்டாடுவதை, ஐ.சி.சி தடையும் விதித்துள்ளது.

ரோல்மாடல் – இம்ரான் தாஹிர்

``ஷம்சி இந்தப் போட்டியில் விளையாடினான் என்று சொல்வதைவிட, இந்தப் போட்டியில் ஷம்சி தாக்கம் ஏற்படுத்தினான் என்று சொல்லும்படி செயல்படத்தான் முற்படுவேன். நான் உலகக்கோப்பையில் தாக்கம் ஏற்படுத்தப்போகிறேன்.”

          – தப்ரைஸ் ஷம்சி

Vikatan
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு