Published:Updated:

சூதாட்டத்தில் அரசியல் தலைவர்கள்: நடிகர் விண்டூ தாராசிங் பகீர்

சூதாட்டத்தில் அரசியல் தலைவர்கள்: நடிகர் விண்டூ தாராசிங் பகீர்
சூதாட்டத்தில் அரசியல் தலைவர்கள்: நடிகர் விண்டூ தாராசிங் பகீர்
சூதாட்டத்தில் அரசியல் தலைவர்கள்: நடிகர் விண்டூ தாராசிங் பகீர்

மும்பை: மும்பை கிரிக்கெட் சூதாட்டத்தில் அரசியல் தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக நடிகர் விண்டூ தாராசிங் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக நடிகர் விண்டூ தாராசிங் மும்பை போலீசாரால் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் மீதான புகார்களுக்கு உரிய ஆதாரங்களை போலீசாரால் திரட்ட முடியவில்லை. இதையடுத்து அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

நடிகர் விண்டூ தாராசிங் தினமும் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டிருந்தது. அதன்படி கையெழுத்து போடுதற்காக மும்பை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''நான் ஒரு அப்பாவி. கிரிக்கெட் சூதாட்டத்தில் என்றுமே ஈடுபட்டதில்லை. நான் எந்த தவறும் செய்யவில்லை. குற்றப்பிரிவு போலீசார் விசாரித்ததில் நான் எந்த தவறும் செய்யவில்லை என்பது தெரியவந்திருக்கிறது. கிரிக்கெட் சூதாட்டத்தில் இந்தியாவிலுள்ள அரசியல் தலைவர்களும், அவர்களின் மகன்களும் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை'' என்று கூறிய அவர்,

##~~##
''ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர் ராஜ் குந்த்ரா எனது நண்பர். அவர், தனது அணி வெற்றி பெற வேண்டும் என்று விரும்புவதில் தவறு இல்லை. நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. எனவே இந்த சூதாட்ட வழக்கில் நான் விடுதலை ஆவேன் என்று நம்புகிறேன்'' என்றார்.
''இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுகிறார்கள். சூதாட்டம் தடை செய்யப்பட்டால், பிறகு போலீசார் புக்கிகளை கைது செய்யும் நடவடிக்கை எடுக்க வேண்டியதிருக்கும். எனக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி உலகின் பல நாட்டு கிரிக்கெட் வீரர்களும் நல்ல நண்பர்களாக உள்ளனர். ஆனால் அவர்களுக்கும் கிரிக்கெட் சூதாட்டங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை'' எனவும் அவர் கூறினார்.