Published:Updated:

சாம்பியன்ஸ் டிராபி ஃபார்மை தொடருமா சர்ஃபராஸ் அண்ட் கோ...பாகிஸ்தான் அணி எப்படி இருக்கு?!

சாம்பியன்ஸ் டிராபி ஃபார்மை தொடருமா சர்ஃபராஸ் அண்ட் கோ...பாகிஸ்தான் அணி எப்படி இருக்கு?!
News
சாம்பியன்ஸ் டிராபி ஃபார்மை தொடருமா சர்ஃபராஸ் அண்ட் கோ...பாகிஸ்தான் அணி எப்படி இருக்கு?!

சௌகிதார் போட்ட குண்டுகளில், இம்ரான் கானின் வாரிசுகள் கன்சிஸ்டென்சியை இழந்துவிட்டார்கள் போல, யாரையுமே நம்ப முடிவதில்லை. `நான் போன மேட்ச் அடிச்சிட்டேன். என் கோட்டா ஓவர்' என்பதுபோல்தான் அவர்கள் அணியே இருக்கிறது.

2017 சாம்பியன்ஸ் டிராபி வென்ற பிறகு, கிரிக்கெட் அரங்கில் பாகிஸ்தான் மீண்டும் எழுச்சி காணும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெரிதாக அப்படியொன்றும் நடக்கவில்லை. சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு விளையாடிய 7 ஒருநாள் தொடர்களில் இரண்டில் மட்டுமே வென்றுள்ளது. அவையும்கூட இலங்கை, ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராகப் பெற்ற வெற்றிகள்தான். பேட்டிங், பௌலிங் இரண்டுமே நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்துவதால், பாகிஸ்தான் அரையிறுதிக்குள் நுழைவது மிகவும் கடினம் என்றே தெரிகிறது.

கேப்டன் : சர்ஃபராஸ் அஹமது

பயிற்சியாளர் : மிக்கி ஆர்தர்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஐ.சி.சி ஒருநாள் ரேங்கிங் : 6

உலகக் கோப்பையில் இதுவரை : 
    

உலகக் கோப்பை பர்ஃபாமன்ஸ்
1975 குரூப் சுற்று
1979 அரையிறுதி
1983 அரையிறுதி
1987 அரையிறுதி
1992 சாம்பியன்
1996 காலிறுதி
1999 ரன்னர் அப்
2003 குரூப் சுற்று
2007 குரூப் சுற்று
2011 அரையிறுதி
2015 காலிறுதி

பாகிஸ்தான் அணிக்கு எப்போதுமே கைகொடுக்கும் பௌலிங் யூனிட்டிலும் கடந்த சில மாதங்களாகப் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. பல வீரர்களைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டது அந்த அணி. இங்கிலாந்து தொடரும்கூட அப்படியொரு சோதனை முயற்சிதான். இங்கிலாந்து அணி இஷ்டத்துக்கும் 340+ ஸ்கோர் எடுக்க, அறிவித்த அணியில் பல மாற்றங்களைச் செய்துவிட்டனர். இப்போதிருக்கும் அணியைப் பார்ப்பதற்கு, எல்லோரும் பலமான பௌலர்களாகவே தெரிகிறார்கள். ஆனால், ஃபார்ம் என்பதைக் கணக்கில் எடுத்தால், அது மிக மோசமாக இருக்கிறது. 

சாம்பியன்ஸ் டிராபி ஃபார்மை தொடருமா சர்ஃபராஸ் அண்ட் கோ...பாகிஸ்தான் அணி எப்படி இருக்கு?!

2017 சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு, ஒருநாள் போட்டிகளில், கிட்டத்தட்ட 100 ஓவர்கள் பந்துவீசி, 5 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியிருக்கிறார் அந்த அணியின் முன்னணி பௌலர் முகமது ஆமிர். கடந்த 2 ஆண்டுகளாக சர்வதேச ஒருநாள் போட்டிகளே விளையாடாத வஹாப் ரியாஸ் கடைசி நேரத்தில் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ``வஹாப் ரியாஸின் ரிவர்ஸ் ஸ்விங் அணிக்குப் பெரும் பலமாக இருக்கும்" என்று சொல்லியிருக்கிறார் தேர்வுக் குழுத் தலைவர் இன்சமாம் உல் ஹக். 

சாம்பியன்ஸ் டிராபி ஃபார்மை தொடருமா சர்ஃபராஸ் அண்ட் கோ...பாகிஸ்தான் அணி எப்படி இருக்கு?!

பௌலிங்கில் இப்படி எனில், பேட்டிங்கில் வேறொரு பிரச்னை. `நான் போன மேட்ச் அடிச்சிட்டேன். என் கோட்டா ஓவர்' என்பதுபோல்தான் அவர்கள் அணியே இருக்கிறது. ஒரு போட்டியில் சதமடித்துவிட்டால், அடுத்த 5 போட்டிகளில் தடுமாறுகிறார் ஓப்பனர் ஃபகர் ஜமான். கடந்த 2 ஆண்டுகளில் 3 அரைசதங்களே அடித்திருக்கிறார் கேப்டன் சர்ஃபராஸ் அஹமது. இப்படி முழு அணியுமே `கன்சிஸ்டென்சி' என்ற வார்த்தைக்கு அர்த்தம் தேடிக்கொண்டிருக்கிறது. 

அந்த குரூப்புக்குள் டூப்பாக, ஓரளவு ஆறுதல் அளிப்பது பாபர் ஆஸம் மட்டும்தான்! ஃபகர் ஜமான், இமாம் உல் ஹக் போன்றவர்கள், தொடர்ந்து நல்ல தொடக்கம் கொடுத்தாலும், அவ்வப்போதுதான் பெரிய இன்னிங்ஸ் ஆடுகிறார்கள். முகமது ஹஃபீஸ், ஷோயப் மாலிக் போன்ற சீனியர்களுமே தடுமாறுகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஆசிஃப் அலி சேர்க்கப்பட்டிருப்பது அந்த அணிக்கு ஒரு வகையில் நல்ல விஷயம்தான்.

சாம்பியன்ஸ் டிராபி ஃபார்மை தொடருமா சர்ஃபராஸ் அண்ட் கோ...பாகிஸ்தான் அணி எப்படி இருக்கு?!

ஸ்டார் பிளேயர்கள்

பாபர் ஆஸம்

பாபர் ஆஸம் பாகிஸ்தான் ரசிகர்கள் நம்பக்கூடிய ஒரு பேட்ஸ்மேனாக உருவெடுத்துள்ளார். 51.67 என்ற அவரது சராசரியும், 85.96 என்ற ஸ்ட்ரைக் ரேட்டும் சொல்லிவிடும் இவரால் என்ன முடியும் என்பதை. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில், 5 போட்டிகளில் 277 ரன்கள் (1 சதம், 2 அரைசதம், சராசரி : 55.4) எடுத்து மீண்டும் மீண்டும் தன் திறமையை நிரூபித்துக்கொண்டிருக்கிறார். இவரது நிதானம் கலந்த அதிரடி ஆட்டம், நிச்சயம் ஒருசில சதங்களை உலகக் கோப்பையில் பெற்றுக்கொடுக்கும். சாம்பியன்ஸ் டிராபியில் நிகழ்த்திய அற்புதத்தை மீண்டும் பாகிஸ்தான் அணி நிகழ்த்தவேண்டுமென்றால் இவர் `ஆஸமா'க ஆடவேண்டும்!

சாம்பியன்ஸ் டிராபி ஃபார்மை தொடருமா சர்ஃபராஸ் அண்ட் கோ...பாகிஸ்தான் அணி எப்படி இருக்கு?!

ஹசன் அலி

2017 சாம்பியன்ஸ் டிராபி கனவை நனவாக்கியதில் பெரும் பங்கு ஹசன் அலியையே சேரும். 5 போட்டிகளில் 13 விக்கெட்டுகள் வீழ்த்தி, தொடர் நாயகன் விருதை வென்றதோடு பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கு மீண்டும் ஓர் புது அடையாளத்தைப் பெற்றுத்தர உதவினார். கடந்த ஆண்டு 15 போட்டிகளில் 19 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். பெரிதாகச் சொல்லிக்கொள்ளும்படியான செயல்பாடு இல்லைதான். இருந்தாலும், ரிவர்ஸ் ஸ்விங் செய்வதில் அதே வீரியம் உள்ளது. அதுமட்டுமல்லாமல், உலகக் கோப்பை நடக்கும் இடம், சாம்பியன்ஸ் டிராபி நடந்த அதே இடம்தான். அதனால் மிடில் ஓவர்களில் கடந்த தொடர் போல் விக்கெட் வேட்டை நிகழ்த்தலாம். ஐ.சி.சி தொடர் வந்தாலே முழு வீச்சில் செயல்படுபவர்களை நாம் பார்த்திருப்போம், அப்படி ஒரு சர்ப்ரைஸ் பேக்கேஜாக ஹசன் அலி இருக்க வாய்ப்புகள் அதிகம்.

சாம்பியன்ஸ் டிராபி ஃபார்மை தொடருமா சர்ஃபராஸ் அண்ட் கோ...பாகிஸ்தான் அணி எப்படி இருக்கு?!

பாகிஸ்தானின் அட்டவணை

தேதி நேரம் போட்டி மைதானம்
மே 31 மாலை 3 மணி வெஸ்ட் இண்டீஸ் vs பாகிஸ்தான் டிரென்ட் பிரிட்ஜ், நாட்டிங்ஹாம்
ஜூன் 3 மாலை 3 மணி இங்கிலாந்து vs பாகிஸ்தான் டிரென்ட் பிரிட்ஜ், நாட்டிங்ஹாம்
ஜூன் 7 மாலை 3 மணி பாகிஸ்தான் vs இலங்கை கவுன்டி மைதானம், பிரிஸ்டோல்
ஜூன் 12 மாலை 3 மணி ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான் தி கூப்பர் அசோசியேட்ஸ் கவுன்டி மைத்சானம், டான்டன்
ஜூன் 16 மாலை 3 மணி இந்தியா - பாகிஸ்தான் ஓல்டு டிராஃபோர்ட், மான்செஸ்டர்
ஜூன் 23 மாலை 3 மணி பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா லார்ட்ஸ், லண்டன்
ஜூன் 26 மாலை 3 மணி நியூசிலாந்து - பாகிஸ்தான் எட்பாஸ்டன், பிர்மிங்ஹம்
ஜூன் 29 மாலை 3 மணி பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் ஹெடிங்லி, லீட்ஸ்
ஜூலை 5 மாலை 3 மணி பாகிஸ்தான் - வங்கதேசம் லார்ட்ஸ், லண்டன்