Published:Updated:

அயர்லாந்துக்கு எதிராக 6 விக்கெட்டுகள் வீழ்த்திய நைப்..! யார் இந்த ஆப்கானிஸ்தான் கேப்டன்? #PlayerBio

அயர்லாந்துக்கு எதிராக 6 விக்கெட்டுகள் வீழ்த்திய நைப்..! யார் இந்த ஆப்கானிஸ்தான் கேப்டன்? #PlayerBio

``மிகவும் இக்கட்டான நிலையில்தான் எனக்கு கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது என நன்று தெரிகிறது, அதைச் சிறப்பாகச் செய்து முடிக்கிறேனா இல்லையா என்பது உலகக் கோப்பை முடிந்ததும் தெரியும்"

அயர்லாந்துக்கு எதிராக 6 விக்கெட்டுகள் வீழ்த்திய நைப்..! யார் இந்த ஆப்கானிஸ்தான் கேப்டன்? #PlayerBio

``மிகவும் இக்கட்டான நிலையில்தான் எனக்கு கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது என நன்று தெரிகிறது, அதைச் சிறப்பாகச் செய்து முடிக்கிறேனா இல்லையா என்பது உலகக் கோப்பை முடிந்ததும் தெரியும்"

Published:Updated:
அயர்லாந்துக்கு எதிராக 6 விக்கெட்டுகள் வீழ்த்திய நைப்..! யார் இந்த ஆப்கானிஸ்தான் கேப்டன்? #PlayerBio

தன் அட்டகாசமான பந்துவீச்சால் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி, அயர்லாந்து அணியைச் சுருட்டி வீசியுள்ளார் ஆப்கானிஸ்தான் கேப்டன் குல்பாதீன் நைப். இந்த இரு அணிகளும் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டி, பெல்ஃபாஸ்ட் நகரில் நேற்று நடந்தது. முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் 305 ரன்கள் குவித்தது. அதை சேஸ் செய்து தொடரை வெல்லும் முனைப்பில் களமிறங்கிய அயர்லாந்தை, தன் டிரேட் மார்க் ஸ்விங் டெலிவரிகளால் நிலைகுலையச் செய்தார் நைப். அயர்லாந்தின் உயிர்நாடியான ஸ்டிர்லிங், பால்பிர்னி இருவரையும் அடுத்தடுத்த ஓவர்களில் அவர் வீழ்த்தியபோதே அணியின் வெற்றி உறுதியானது. ஆனால், அதன்பின்னும் ஓயாமல் பட்டையைக் கிளப்பிய அவர் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். 126 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆப்கானிஸ்தான், தொடரைச் சமன் செய்தது. ஆப்கானிஸ்தான் அணியின் இரண்டாவது உலகக் கோப்பையில், அந்த அணியை வழிநடத்தவிருக்கும் குல்பாதின் நைப் யார்!

பெயர் : குல்பாதீன் நைப் 

பிறந்த தேதி : 16.03.1991

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஊர் : லோகர், ஆப்கானிஸ்தான்

ரோல் : ஆல் ரவுண்டர்

பேட்டிங் ஸ்டைல் : வலது கை பேட்ஸ்மேன்

பௌலிங் ஸ்டைல் : வலது  கை வேகப்பந்து வீச்சாளர்

சர்வதேச அறிமுகம் : 09.08.2011

செல்லப்பெயர் : டென்கி

அயர்லாந்துக்கு எதிராக 6 விக்கெட்டுகள் வீழ்த்திய நைப்..! யார் இந்த ஆப்கானிஸ்தான் கேப்டன்? #PlayerBio

பிளேயிங் ஸ்டைல்

2011–ம் ஆண்டிலிருந்து ஆடிக்கொண்டிருக்கும் சீனியர் வீரர். ஏறத்தாழ அனைத்து அணியினரோடும் ஆடியிருப்பதால், எதிரணியின் ப்ளஸ், மைனஸ் நன்றாகவே தெரியும். அதற்கேற்ப ஆடுவார். ஓப்பனர்கள் சொதப்பும்போது நிதானமாக இன்னிங்ஸைக் கட்டமைத்து, அணியைக் கரை சேர்த்து விடுவார். எப்போதாவது அதிரடி காட்டுபவர். பெரும்பாலும் சிக்ஸ், ஃபோர்களை தவிர்த்து, விக்கெட்டுகளுக்கு இடையை ஓடி ரன்கள் குவிப்பதில் கில்லாடி. பௌலிங்கைப் பொறுத்தவரை பந்தைச் சிறப்பாக ஸ்விங் செய்வார். அதுவும் புதிய பந்தாக இருந்தால் இவருக்குக் கூடுதல் பலம். பேட்ஸ்மேனின் நிலையறிந்து மாற்றி மாற்றி பந்தை பிட்ச் செய்து குழப்புவார். 

கிரிக்கெட் பயணம்

2008 ஆப்கன் கிரிக்கெட் லீகில்,  ராவல்பிண்டி அணிக்கு எதிரான போட்டியில் ஆடியதுதான் இவரது முதல் போட்டி. அதன்பின் பாடி பில்டிங் லைனில் சென்ற அவர் 2010–ம் ஆண்டின் இறுதியில் மீண்டும் கிரிக்கெட்டுக்கே திரும்பினார். அதன்பின் `லிஸ்ட் ஏ’ போட்டிகளில் கிட்டத்தட்ட அத்தனை பொசிஷன்களிலும் ஆடினார். லிஸ்ட் ஏ போட்டிகளில், இவர் அதிக ஸ்கோர் அடித்தால் நிச்சயம் அணி வெற்றி பெறும் என்ற நிலையில், தான் சார்ந்திருந்த அணிக்காக ஆடியவர்‌. சரியான வீரர்கள் இல்லாமல் தவித்த ஆப்கான் அணிக்கு புதிய மாற்றமாக வந்து சேர்ந்தவர். 2011–ம் ஆண்டு கனடாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தன் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கினார். கிரிக்கெட் போர்டு செய்த மாற்றத்தால், அஸ்கர் ஆஃப்கன் வசமிருந்த கேப்டன் பதவி இந்த உலகக் கோப்பைக்காக இவரிடம் கொடுக்கப்பட்டுள்ளது‌.

அயர்லாந்துக்கு எதிராக 6 விக்கெட்டுகள் வீழ்த்திய நைப்..! யார் இந்த ஆப்கானிஸ்தான் கேப்டன்? #PlayerBio

சிறந்த பர்ஃபாமன்ஸ்

* 74*(97) vs ஐக்கிய அரபு அமீரகம்

ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி. முதலில் ஆடிய அரபு அணி 177 ரன்களுக்கு ஆல் அவுட். பெளலிங்குக்குச் சாதகமான பிட்ச், பேட்ஸ்மேன்களை நீண்ட நேரம் நிலைக்கச் செய்யவில்லை. இதே பிரச்னையைத்தான் ஆப்கான் அணியும் எதிர்கொண்டது. ஓப்பனர்கள், மிடில் ஆர்டர் என அனைவரும் சொற்ப ரன்களுக்கு அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுக்க நின்று நிதானமாக ஆடினார் நைப், 97 பந்துகளில் 74 ரன்கள் வெறும் 4 பவுண்டரிகள்தான். ஆனால், அற்புதமான ஆட்டம். ஆப்கான் வீரர்களே அசந்தனர். அவருக்கு ஒத்துழைத்த நஜிபுல்லாவைத் தவிர அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். இருந்தாலும் தன்னால் முடியும் என்று நம்பி, வீழ்ந்த அணியை ஒற்றைக் கையால் மீட்டார் நைப். 

* 4/31 vs ஸ்காட்லாந்து

ஐ.சி.சி. வேர்ல்டு கிரிக்கெட் லீகில், ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டி ஷார்ஜாவில் நடக்கிறது. பேட்டிங்கிற்குச் சாதகமான பிட்ச், மெக்கான், மெக்லீயாய்டு என ஸ்காட்லாந்தின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நல்ல ஃபார்மில் இருந்தனர். இந்தக் கூட்டணியைக் கலைத்துப் போட்டார் நைப். ஸ்விங், யார்க்கர் என மாறி மாறி வேரியேஷன்கள் காட்ட, ஆட்டம் கண்டது ஸ்காட்லாந்தின் பேட்டிங் லைன் அப், 250 ரன்களுக்கு மேல் எகிறும் என எதிர்பார்க்கப்பட்ட அணியின் ஸ்கோரை 199 ரன்களில் முடித்தார். 31 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகள், 20 டாட் பால்கள். 

அயர்லாந்துக்கு எதிராக 6 விக்கெட்டுகள் வீழ்த்திய நைப்..! யார் இந்த ஆப்கானிஸ்தான் கேப்டன்? #PlayerBio

நைப் ஸ்பெஷல்

பாடி பில்டிங்கில் அதீத ஆர்வம் கொண்டிருந்த இவரது ஆதர்சம் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு. 2010 ஆசிய போட்டிகளில் வெள்ளி வென்ற ஆஃப்கன் அணியில் நைப் இடம்பெற்றிருந்தார்.

இவரது ஃபேவரிட் வீரர், பாகிஸ்தானின் ஷோயப் அக்தர்

"மிகவும் இக்கட்டான நிலையில்தான் எனக்கு கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது என நன்றாகவே தெரிகிறது, அதைச் சிறப்பாகச் செய்து முடிக்கிறேனா, இல்லையா என்பது உலகக் கோப்பை முடிந்ததும் தெரியும்"

       - குல்பாதீன் நைப்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism