Published:Updated:

`இங்கிலாந்துக்கு சாதகமான சூழல்..!’ - உலகக்கோப்பை தொடர் குறித்து ரிக்கி பான்டிங்

கிரிக்கெட்டை உலகுக்கு அறிமுகப்படுத்திய இங்கிலாந்து அணி, இதுவரை ஒருமுறைகூட உலகக் கோப்பையை வென்றதில்லை. இந்த முறை கோப்பையை வெல்லும் வாய்ப்பு இங்கிலாந்து  அணிக்கு இருப்பதாக, ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனும் உதவி பயிற்சியாளருமான பான்டிங் தெரிவித்துள்ளார். பான்டிங், ஆஸ்திரேலியா அணிக்கு தொடர்ச்சியாக இரண்டு முறை உலகக் கோப்பையை பெற்றுத்தந்தவர். ஒருநாள் போட்டித் தொடரில் இங்கிலாந்து அணியின் சிறப்பான செயல்பாடும், உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடப்பது அவர்களுக்கு சாதமான விஷயம் என பான்டிங் கூறுகிறார்.

`இங்கிலாந்துக்கு சாதகமான சூழல்..!’ - உலகக்கோப்பை தொடர் குறித்து ரிக்கி பான்டிங்

``இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இந்தத் தொடரில் இங்கிலாந்துக்கு கடுமையான சவால் அளிக்கும்.  அதை எதிர்க்கொள்ள இங்கிலாந்தும் தயாராக இருக்கும். இங்கிலாந்து அணி, ஒருநாள் தர வரிசையில் முதலிடத்தில் இருக்கிறது.  நடந்துமுடிந்த பாகிஸ்தான் தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இந்தத் தொடரில், அனைத்துப் போட்டிகளிலும் 300-க்கும் அதிகமான ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், மேற்குஇந்தியத் தீவுகள் போன்ற அணிகளும் அச்சுறுத்தலாக இருக்கும். உலகக் கோப்பை ஒரு ஓப்பன் டோர்னமென்ட், இதில் கோப்பையை வெல்ல அனைவருக்கும் வாய்ப்புள்ளது. இங்கிலாந்து அணிக்கு சில சாதகமான சூழல் இருக்கிறது. ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை ஸ்மித், வார்னர் திரும்பியிருப்பது அணிக்குக் கூடுதல் பலம். உலகக் கோப்பை வெல்வதற்காக நாங்கள் கடுமையாகப் போராடுவோம். அது, நீண்ட நாள்கள் நடைபெறும் தொடர் என்பதால், வீரர்கள் காயமடையாமல் இருப்பது அவசியம். கோப்பையை வெல்ல இங்கிலாந்துக்குச் சாதகமான சூழல் இருந்தாலும், மற்ற அணிகளையும் அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள  முடியாது. அதேநேரம், இங்கிலாந்து அணி தொடரை நடத்துவதால், அவர்களுக்குக் கூடுதல் அழுத்தம்  இருக்கும்”  என்றார்.
 
Vikatan