Published:Updated:

``வீரர்கள் பான்டிங்கைச் சுற்றி வருகிறார்கள்; இது விசித்திரமானது’- ஆஸி. கேப்டன் ஆரோன் ஃபின்ச்

‘ரிக்கி பான்டிங்’ ஆஸ்திரேலியா அணிக்காக இரண்டு முறை உலகக் கோப்பையை பெற்றுத்தந்த கேப்டன்.  உலகக் கோப்பை தொடருக்காக ஆஸ்திரேலியா அணியின் உதவி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர்களான ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு தடை காரணமாக, கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ஆஸி அணியில் பல்வேறு ஏற்ற இறக்கங்கள் இருந்தன.   பேட்ஸ்மேன்களின் மோசமான ஃபார்ம் என நிறையப் பிரச்னைகள் இருந்தது. தற்போது ஸ்மித், வார்னர் ஆகியோர் அணிக்குத் திரும்பியுள்ளனர். வார்னர், அட்டகாசமாக ஃபார்மில் உள்ளார். இந்தியாவில் நடந்த ஐபிஎல் தொடரில் வெளுத்து வாங்கினார். ஸ்மித் தனது பழைய ஆட்டத்தை மீட்டெடுத்துவருகிறார். இந்த நிலையில்,  ஆஸ்திரேலியா அணிக்கு உதவி பயிற்சியாளராக பான்டிங் நியமிக்கப்பட்டது, ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கூடுதல் தெம்பை அளித்துள்ளது. உலகக் கோப்பை தொடர் மற்றும் ஆஷஸ் தொடருக்காக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

``வீரர்கள் பான்டிங்கைச் சுற்றி வருகிறார்கள்; இது விசித்திரமானது’-  ஆஸி. கேப்டன் ஆரோன் ஃபின்ச்

இதுகுறித்துப் பேசியுள்ள ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச்,  ``கடந்த சில தொடர்களில் என்னுடைய செயல்பாடுகள் திருப்திகரமானதாக இல்லை. இது தொடர்பாக அணி வீரர்களிடம் பேசினேன். என்னை மன்னித்துவிடுங்கள், என்னால் முடிந்த வரை களத்தில் கடுமையாகப் போராடுகிறேன். ஆனால், என்னால் ரன்களைக் குவிக்க முடியவில்லை எனக் கூறினேன். அவர்களிடமிருந்து எனக்குக் கிடைத்த ஒத்துழைப்பும் ஆதரவும் அபாரமானது. கனவு காண்பது எனக்கு முக்கியமானது எனக் கருதுகிறேன். ஏனென்றால், நீங்கள் துரத்துவதற்கு  ஏதாவது இருந்தால் நன்றாக இருக்கும்.  உலகக் கோப்பை தொடரை நாங்கள் வென்று, சக வீரர்களுடன் அந்தக் கோப்பை பால்கனியில் ஏந்துவதாக ஒரு பிம்பத்தை மனதிற்குள் உருவாக்கி வைத்துள்ளேன். கண்டிப்பாக அதைச் செய்வேன்.

``வீரர்கள் பான்டிங்கைச் சுற்றி வருகிறார்கள்; இது விசித்திரமானது’-  ஆஸி. கேப்டன் ஆரோன் ஃபின்ச்

ஸ்மித், வார்னர் இருவரும் மீண்டும் அணியில் இணைந்திருப்பது மகிழ்ச்சி.  அதேபோல பான்டிங் வருகை வீரர்களுக்குத் தெம்பை அளித்துள்ளது. அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரரும் பான்டிங்கால் ஈர்க்கப்பட வேண்டும் என  விரும்புகிறார்கள்.  இதைப் பார்க்கும் போது, 8 வயது குழந்தைகள் ஜஸ்டின் பீபரை சுற்றிவருவதுபோல உள்ளது. இது, பார்ப்பதற்கு விசித்திரமாக இருந்தாலும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது”என்றார். ஃபின்ச் கூறியது போல பான்டிங் வருகை ஆஸ்திரேலிய வீரர்களுக்கு மனரீதியாகத் தெம்மை அளித்துள்ளது. இரண்டு முறை உலகக் கோப்பை வென்ற  கேப்டன் அணியினருடன் இருப்பது ஆஸிக்கு கூடுதல் பலமே.

Vikatan