Published:Updated:

ஜோ டென்லி - இங்கிலாந்தின் சர்ப்ரைஸ் பேக்கேஜ்! #CWC19 #PlayerBio

ராம் கார்த்திகேயன் கி ர

கடந்த ஆண்டு நடந்த இங்கிலாந்து டி-20 பிளாஸ்ட் தொடரின் ஒரு போட்டியில் சதம் அடித்து, ஹாட்ரிக் விக்கெட்டும் வீழ்த்தி சரித்திரம் படைத்தார் டென்லி.

ஜோ டென்லி - இங்கிலாந்தின் சர்ப்ரைஸ் பேக்கேஜ்! #CWC19 #PlayerBio
ஜோ டென்லி - இங்கிலாந்தின் சர்ப்ரைஸ் பேக்கேஜ்! #CWC19 #PlayerBio

பெயர் : ஜோ டென்லி

பிறந்த தேதி : 16.3.1986

ஊர் : கென்ட், இங்கிலாந்து

ரோல் : பேட்ஸ்மேன்

பேட்டிங் ஸ்டைல் : வலது கை பேட்ஸ்மேன்

பெளலிங் ஸ்டைல் : லெக்பிரேக்

சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகம் : 27.8.2009

செல்லப்பெயர் : டென்னர்ஸ், நோ பேண்ட்ஸ்

ஜோ டென்லி - இங்கிலாந்தின் சர்ப்ரைஸ் பேக்கேஜ்! #CWC19 #PlayerBio

ப்ளேயிங் ஸ்டைல்

ஜோ டென்லி ஒரு 3 டைமென்ஷன் (3டி) ப்ளேயர். ஆம்! பேட்டிங், பெளலிங், ஃபீல்டிங் என அனைத்து பாக்ஸ்களையும் டிக்கடிக்கிறார். இருந்தும் பேட்டிங்தான் அவரின் பலம். பேட்டிங்கில் எந்த இடத்திலும் ஆடக்கூடிய 'Flexible' வீரர். பொதுவாக, மேல் வரிசையில் வந்து ஆட்டத்தைக் கட்டமைக்கும் வேலையைத்தான் செய்வார். ஆனால், அவர் இங்கிலாந்து அணியில் இருப்பதற்குக் காரணம் அவரது லெக்ஸ்பின். பெளலிங்கை பொறுத்தவரை பார்ட்டைம் பெளலராக பந்துவீசக்கூடியவராக இருந்தவர், இப்போது அவரது ஸ்பின்னுக்காகவே அணியில் இடம்பெற்றிருக்கிறார். முன்னணி பெளலர்கள் விக்கெட் எடுக்கச் சிரமப்படும்போது திடீரென இவரது லெக் ஸ்பின் மூலம் விக்கெட்டுகளை வீழ்த்தி ‘சர்ப்பிரைஸ்’ பேக்கேஜாக இருப்பார். பெரிதாகச் சுழல் மாயாஜாலம் எல்லாம் இவர் பெளலிங்கில் இருக்காது. பந்தைச் சரியான ஆங்கிளில் ரிலீஸ் செய்வதன் மூலம், விக்கெட்டுகள் எடுக்காவிட்டாலும் ரன்களைக் கட்டுப்படுத்துவார். பெரும்பாலும், பந்தை 'டிர்ஃப்ட்' செய்யவே விரும்புவார். 

ஜோ டென்லி - இங்கிலாந்தின் சர்ப்ரைஸ் பேக்கேஜ்! #CWC19 #PlayerBio

கிரிக்கெட் பயணம்

13 வயதில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய டென்லி, 2004-ல் முதல் தர கிரிக்கெட் போட்டியில் கென்ட் அணிக்காக அறிமுகமானார். தனது சிறப்பான பேட்டிங்கால் சீக்கிரமே இங்கிலாந்து 19 வயதுக்குட்பட்டோர் அணியில் இடம்பிடித்தார். 2007 சீஸனில் ஓப்பனராகக் களமிறங்கி சதம் அடித்து அசத்தியதைத் தொடர்ந்து, இங்கிலாந்து லயன்ஸ் அணியில் இடம் கிடைத்தது. கிடைத்த வாய்ப்பையெல்லாம் சரியாகப் பயன்படுத்தி சிறப்பாகச் செயல்பட 2009-ம் ஆண்டு இங்கிலாந்து அணியில் ஆட வேண்டும் என்கிற நீண்ட நாள் கனவும் கைகூடி வந்தது. ஆனால், இங்கிலாந்து அணிக்காக விளையாடும்போது பெரிதாக சோபிக்காததால் ஒரே வருடத்தில் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

ஜோ டென்லி - இங்கிலாந்தின் சர்ப்ரைஸ் பேக்கேஜ்! #CWC19 #PlayerBio

அதுவரை பேட்ஸ்மேன் என்கிற ஒற்றை அடையாளத்தில் இருந்த டென்லி லெக் ஸ்பின் என்கிற ஆயுதத்தையும் தனது ஆட்டத்தில் சேர்த்துக்கொண்டார். பேட்ஸ்மேன் டென்லி ஆல்ரவுண்டர் டென்லியாக உருவெடுக்கத் தொடங்கினார். மீண்டும் டொமெஸ்டிக் கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினார். 2018-ம் ஆண்டு அவருக்கு கம்பேக் ஆண்டு எனக் கூறலாம். அந்த ஆண்டில் டென்லி, டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்துத் தர போட்டியிலும் கென்ட் அணியின் சிறந்த வீரர்களில் முதல் இரண்டு இடத்தில் இடம்பிடித்தார். அத்தகைய சிறப்பான செயல்பாட்டால் மீண்டும் இங்கிலாந்து அணியின் ஜெர்ஸி வாசனையை டென்லியால் நுகர்ந்து பார்க்க முடிந்தது. 32 வயதில் டெஸ்ட் அணியில் இடம் கிடைத்தது. கடந்த ஆண்டு இலங்கை அணியுடனான தொடரில் 4 விக்கெட்டுகள் கைப்பற்றியவர் இப்போது உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றிருக்கிறார்.

ஜோ டென்லி - இங்கிலாந்தின் சர்ப்ரைஸ் பேக்கேஜ்! #CWC19 #PlayerBio

சிறந்த பர்ஃபாமன்ஸ்

இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் யாரும் எதிர்பாராதவிதமாக ஓப்பனிங் ஸ்பெல்லை டென்லி வீசினார். அந்த மூவ் இங்கிலாந்து அணிக்கு வெற்றியாகவே அமைந்தது. ஆம்! பார்ட்டைம் பெளலரான டென்லி அன்று தனது லெக் ஸ்பின் மூலம் நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றினார். 4-0-19-4 என அட்டகாசமான ஸ்பெல் அது. அதுவும் ஓப்பனர்களை வெளியேற்றி முழுநேர ஸ்பின்னராக உருவெடுத்தார். நியூ பாலை மிகவும் அற்புதமாகப் பயன்படுத்தினார். பேட்டிங்கிலும் 17 பந்துகளில் 20 ரன்கள் எடுக்க, ஆட்டநாயகன் விருது வென்றார் டென்லி.

ஜோ டென்லி - இங்கிலாந்தின் சர்ப்ரைஸ் பேக்கேஜ்! #CWC19 #PlayerBio

கடந்த ஆண்டு நடந்த இங்கிலாந்து டி-20 பிளாஸ்ட் தொடரின் ஒரு போட்டியில் சதம் அடித்து, ஹாட்ரிக் விக்கெட்டும் வீழ்த்தி சரித்திரம் படைத்தார் டென்லி. கென்ட், சர்ரி அணிகள் மோதிய அந்தப் போட்டியில், முதலில் கென்ட் அணி பேட்டிங் செய்தது. 63 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து அசத்தினார் டென்லி. அடுத்து சர்ரி அணி பேட்டிங் செய்தபோது, 13-வது ஓவரை வீசவந்தார். நான்காவது பந்தில் ரிக்கி கிளார்க், ஐந்தாவது பந்தில் ஜேமி ஸ்மித் விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த ஓவரின் கடைசிப் பந்தில் மேத்யூ பில்லன்ஸையும் வெளியேற்றி ஹாட்ரிக் சாதனை படைத்தார். கிரிக்கெட் வரலாற்றில், ஒரே டி-20 போட்டியில், சதமும் அடித்து ஹாட்ரிக் விக்கெட்டும் வீழ்த்திய ஒரே வீரர் டென்லிதான். 

ஜோ டென்லி - இங்கிலாந்தின் சர்ப்ரைஸ் பேக்கேஜ்! #CWC19 #PlayerBio

டென்லி ஸ்பெஷல்

2018-ம் ஆண்டின் PCA ப்ளேயர் ஆஃப் தி இயர் அவார்ட் வாங்கினார்.

ஓப்பனராக அணியில் 2009-ல் இடம்பெற்று இப்போது பெளலராக அணியில் இடம் பெற்றுள்ளார்.

ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார். அந்த அணிக்காக விளையாடிய முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். 

“கடந்த காலங்களை நினைத்து வருத்தப்படுவதில் எந்த அர்த்தமும் இல்லை… என்னுடைய சிறந்த காலம் என்னுடைய எதிர்காலம்தான்”

     - ஜோ டென்லி

Vikatan