Published:Updated:

மார்க் வுட் - எத்தனை காயங்கள் ஏற்பட்டாலும் வேகம் குறையாது! #CWC19 #PlayerBio

மார்க் வுட் - எத்தனை காயங்கள் ஏற்பட்டாலும் வேகம் குறையாது! #CWC19 #PlayerBio
News
மார்க் வுட் - எத்தனை காயங்கள் ஏற்பட்டாலும் வேகம் குறையாது! #CWC19 #PlayerBio

பெளலிங்கில், தொடர்ந்து 145 கி.மீ மேல் வேகத்தில் போடுவது சாதரண விஷயமில்லை. மார்க் வுட் ஐந்து-பத்து மீட்டர் ரன் அப்பிலேயே 145 கி.மி வேகத்தை தாண்டுகிறார். அதுதான் மற்ற பெளலர்களிடமிருந்து அவரை தனித்துக்காட்டுகிறது.

பெயர் : மார்க் வுட்

பிறந்த தேதி : 11-1-1990

ஊர் : நார்த்தம்பர்லேண்ட், இங்கிலாந்து

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ரோல் : பெளலர்

பேட்டிங் ஸ்டைல் : வலதுகை பேட்ஸ்மேன்

பெளலிங் ஸ்டைல் : வலதுகை வேகப்பந்து வீச்சாளர்

சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகம் : 8-5-2015

மார்க் வுட் - எத்தனை காயங்கள் ஏற்பட்டாலும் வேகம் குறையாது! #CWC19 #PlayerBio

பிளேயிங் ஸ்டைல்

தொடர்ந்து 145 கி.மீ மேல் வேகத்தில் பந்துவீசுவது சாதாரண விஷயமில்லை. மார்க் வுட் ஐந்து - பத்து மீட்டர் ரன் அப்பிலேயே 145 கி.மி வேகத்தைத் தாண்டுகிறார். அதுதான் மற்ற பெளலர்களிடமிருந்து அவரைத் தனித்துக்காட்டுகிறது. ஆண்டர்சன், பிராட் போன்று பெரிதாக இவருக்கு ஸ்விங் இல்லை. இருந்தும் தன் அசுர வேகத்தால், பந்தைச் சரியான இடத்தில் பிட்ச் செய்து, பேட்ஸ்மேன் பந்தைக் கணிக்க நேரம் கொடுக்காமல், சவால் தரும் ஆற்றல் உடையவர். விக்கெட் வீழ்த்துவதை விட முக்கிய ஓவர்களில் ஸ்லோ பால், லெக் கட்டர், ஆஃப் கட்டர் என வேரியேஷன்ஸ் காட்டி ரன்களைக் கட்டுப்படுத்தி, எகனாமிக்கலாக போடுவதுதான் இவரின் சிறப்பு.

மார்க் வுட் - எத்தனை காயங்கள் ஏற்பட்டாலும் வேகம் குறையாது! #CWC19 #PlayerBio

கிரிக்கெட் பயணம்

2008-ல் நார்த்தம்பர்லேண்ட் அணிக்காக மைனர் கவுன்ட்டி சாம்பியன்ஷிப் போட்டிகளில் விளையாடி தன்னுடைய கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார் மார்க் வுட். அதைத்தொடர்ந்து 2011-ல் டர்ஹம் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். முதல் சீசனில், முதல் ஐந்து போட்டிகளிலேயே 19 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். 2013-ம் ஆண்டு அவருக்குத் திருப்புமுனையாக அமைந்தது. அந்த சீசனில் 27 விக்கெட்டுகள் கைப்பற்றி, டர்ஹம் அணி சாம்பியன் ஆக முக்கியப் பங்காற்றினார். அது அவரை இங்கிலாந்து லயன்ஸ் அணியில் இடம்பெறச்செய்தது. அங்கும் அவரின் சிறப்பான செயல்பாடு, இங்கிலாந்து அணியின் கதவைத் திறந்தது.

மார்க் வுட் - எத்தனை காயங்கள் ஏற்பட்டாலும் வேகம் குறையாது! #CWC19 #PlayerBio

இங்கிலாந்து அணிக்காக வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் சிறப்பாகச் செயல்பட்டார் மார்க் வுட். ஆண்டர்சன்,பிராட் போன்ற சீனியர் வீரர்களால் டெஸ்ட் அணியில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் ஒருநாள் அணிக்கு அந்த அணியின் முக்கிய பெளலர்களில் ஒருவராக உள்ளார். காயங்கள் அவரைத் துரத்திக்கொண்டு இருக்க, முயற்சியைக் கைவிடாமல் அதே வேகத்தில் பந்து வீசுகிறார். வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர் இரண்டிலும் நன்றாகச் செயல்பட்டு மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ளார். 

சிறந்த பெர்ஃபாமன்ஸ்

* கடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தி இங்கிலாந்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அதுவும் பெளலிங்கிற்கு பெரிதாக உதவாத பிட்சில், சரியான லென்த் மற்றும் லைனில் பந்து வீசி டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், மேக்ஸ்வெல் போன்ற முக்கிய பேட்ஸ்மேன்களை பெவிலியனுக்கு அனுப்பி அசத்தினார். விக்கெட் எடுத்தது மட்டுமல்லாமல், 10 ஓவர்களில் வெறும் 33 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

மார்க் வுட் - எத்தனை காயங்கள் ஏற்பட்டாலும் வேகம் குறையாது! #CWC19 #PlayerBio

* 10 மாதங்களுக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான டெஸ்ட் தொடரில் மீண்டும் அணிக்குத்  திரும்பிய மார்க் வுட், கடைசி டெஸ்டில் தன்னுடைய முதல் '5 wicket haul' கைப்பற்றி அசத்தினார். அந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அவரின் ஸ்பெல் அபாரமாக இருந்தது. பிட்ச்சின் தன்மையை சரியாகப் பயன்படுத்தி வேகம் மூலம் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களை திணறடித்தார். காயத்துக்குப் பிறகு வேகம் குறைந்து விட்டது என்று வசைபாடியவர்களுக்கெல்லாம், அசத்தல் ஃபெர்பாமென்ஸ் மூலம் பதிலளித்தார்.

மார்க் வுட் - எத்தனை காயங்கள் ஏற்பட்டாலும் வேகம் குறையாது! #CWC19 #PlayerBio

வுட் ஸ்பெஷல்

145 கி.மீ வேகத்தில் பந்துவீசும் சொற்ப இங்கிலாந்து பெளலர்களில் ஒருவர்.

டிரென்ட் பிரிட்ஜ் அவரின் ஃபேவரட் மைதானம்

ரோல் மாடல் – ஸ்டீவ் ஹார்மிசன்

“என் மீது எனக்கே சில சமயம் நம்பிக்கையில்லாமல் இருக்கும். அந்தச் சமயத்தில் சோர்ந்துவிடாமல் இன்னும் அதிகமாகப் பயிற்சி செய்து என்னால் முடிவும் என்பதை எனக்கே நிரூபிப்பேன்!” 

 – மார்க் வுட்