Published:Updated:

டேவிட் வில்லி - வேகத்தை மாற்றியே விக்கெட்டுகள் வீழ்த்தும் வித்தகன்! #CWC19 #PlayerBio

டேவிட் வில்லி - வேகத்தை மாற்றியே விக்கெட்டுகள் வீழ்த்தும் வித்தகன்! #CWC19 #PlayerBio
டேவிட் வில்லி - வேகத்தை மாற்றியே விக்கெட்டுகள் வீழ்த்தும் வித்தகன்! #CWC19 #PlayerBio

பெரும்பாலும், ஆஃப் ஸ்டம்ப் லைனுக்கு வெளியேதான் பந்துவீசுவார். சில சமயங்களில், பேட்ஸ்மேன்கள் அந்த லைனை எதிர்பார்த்துக் காத்திருந்தாலும், தன் வேகத்தைக் குறைத்து அவர்களை திக்குமுக்காடச் செய்திடுவார்.

சமீப காலமாக பல அணிகள் இடது கை பந்துவீச்சாளர்கள் இல்லாமல் தவித்து வருகின்றன. அப்படிக் கிடைத்தாலும் அவர்கள் சீராக விளையாடுவதில்லை. இங்கிலாந்து அணிக்கும் அந்த நிலைதான். ஆனால், டேவிட் வில்லி, அவர்களின் தேவையை ஓரளவு பூர்த்தி செய்கிறார். ஸ்டோக்ஸ், வோக்ஸ் என நிறைய ஆல்ரவுண்டர்கள் இருக்கும்போது, அணியில் தனக்கென ஓர் இடத்தை ரிசர்வ் செய்திருப்பது மிகப்பெரிய விஷயம்தான்!

பெயர்: டேவிட் ஜோனதன் வில்லி

பிறந்ந தேதி: 28.02.1990

பிறந்த ஊர்:  நார்த்தாம்டன், இங்கிலாந்து

ரோல்: ஆல்ரவுண்டர்

பேட்டிங்: இடது கை பேட்ஸ்மேன்

பவுலிங்: இடது கை மீடியம் வேகப்பந்து

சர்வதேச அறிமுகம்: 8.5.2015

டேவிட் வில்லி - வேகத்தை மாற்றியே விக்கெட்டுகள் வீழ்த்தும் வித்தகன்! #CWC19 #PlayerBio

பிளேயிங் ஸ்டைல்

டேவிட் வில்லி லிமிடட் ஓவர் போட்டிகளுக்கான முழுமையான பேக்கேஜ்‌. இக்கட்டான நிலையில் பேட்டால் அல்லது பந்தால் ஆட்டத்தின் முடிவையே மாற்றக்கூடியவர். பவுலிங்கைப் பொறுத்தவரையில் ஸ்விங்கும், ஸீம் பவுலிங்கும் இவரின் டிரேட்மார்க். பெரும்பாலும், ஆஃப் ஸ்டம்ப் லைனுக்கு வெளியேதான் பந்துவீசுவார். சில சமயங்களில், பேட்ஸ்மேன்கள் அந்த லைனை எதிர்பார்த்துக் காத்திருந்தாலும், தன் வேகத்தைக் குறைத்து அவர்களை திக்குமுக்காடச் செய்திடுவார். பேஸ் வேரியேஷன்தான் இவரது மிகப்பெரிய பலம். பேட்டிங்கை பொறுத்தவரை மிடில் ஆர்டரில் இறங்கி ரன்ரேட்டைச் சீராக வைத்திருக்க உதவுபவர். இவருக்கு ஃபுல் லென்த்தில் பந்துவீசினால், பௌலரின் கதி அவ்வளவுதான். ஸ்லோ பால்களில் இவர் ஆடும் கட் ஷாட்கள், ஒரு டாப் பேட்ஸ்மேன் ஆடுவதைப் போலவே இருக்கும். கட் ஷாட் மட்டுமல்லாது, புல், ஸ்வீப், டிரைவ் என எல்லா கிரிக்கெட்டிங் ஷாட்களும் ஆடுவார். இங்கிலாந்தின் அச்சுறுத்தும் பேட்டிங் ஆர்டரை, இன்னும் பலப்படுத்துவார் வில்லி! 

டேவிட் வில்லி - வேகத்தை மாற்றியே விக்கெட்டுகள் வீழ்த்தும் வித்தகன்! #CWC19 #PlayerBio

கிரிக்கெட் பயணம் 

அவரின் ஆரம்பகால கிரிக்கெட் தன் சொந்த ஊர் கிளப்பான நார்த்தாம்டன் கிரிக்கெட் கிளப்பில் தொடங்கியது. 2009–ல் நடந்த ட்வென்ட்டி கப் எனப்படும் கிளப்புகளுக்கு இடையேயான தொடரில் முழுநேர கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார். அந்தத் தொடரில் சுமாராக ஆடினாலும், 2013–ம் ஆண்டு நடந்த தொடரின் இறுதிப்போட்டியில் 60 ரன்கள் அடித்தது மட்டுமன்றி 4/3 என்று தனது சிறந்த பந்துவீச்சால் 102 ரன்கள் வித்தியாசத்தில் அணியை வெற்றி பெற வைத்தார். போதாதற்கு, ஆட்டத்தை தன் ஹாட்ரிக்கால்தான் முடிவுக்கே கொண்டுவந்தார். அதன்மூலம் இங்கிலாந்து ஒருநாள் அணியில் 2015–ம் ஆண்டு இடம் பெற்றார். சர்வதேச கிரிக்கெட்டின் ஆரம்ப காலங்களில் பவுலிங்கில் மட்டுமே கவனம் செலுத்திய அவர், 2016 டி20 உலகக்கோப்பையில் பேட்டிங்கிலும் அசத்தினார். ஆஸ்திரேலியாவின் பிக் பேஷ் லீக்கில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்காக விளையாடிவரும் வில்லி, ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். 

டேவிட் வில்லி - வேகத்தை மாற்றியே விக்கெட்டுகள் வீழ்த்தும் வித்தகன்! #CWC19 #PlayerBio

சிறந்த பர்ஃபாமன்ஸ்

* 4/7vs வெஸ்ட் இண்டீஸ், 2019

பதினைந்தே பந்துகளில் ஒட்டுமொத்த வெஸ்ட் இண்டீஸ் டாப் ஆர்டரையும் சுருட்டி பாக்கெட்டில் போட்டுச் சென்றார் டேவிட் வில்லி. வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகள் கடந்த மார்ச் மாதம் மோதிய மூன்றாவது டி-20 போட்டியில், வெறும் 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார் வில்லி. தன் அக்யூரேட் லைன்களாலும், லேட் ஸ்விங்குகளாலும், பேஸ் வேரியேஷன்களாலும், ஒவ்வொரு பேட்ஸ்மேனையும் வெளியேற்றிக்கொண்டிருந்தார். போட்டியின் முதல் பந்திலேயே ஷாய் ஹோப்பை வெளியேற்றி, வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்குக்கு அப்போதே எண்ட் கார்டு போடத் தொடங்கினார். அடுத்து, ஹிட்மேயர், கேம்பல் இருவரும் பேஸ் வேரியேஷன்களால் ஏமாந்து வெளியேறினர். அதுவரை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியவே பந்துவீசிக்கொண்டிருந்தவர், டேரன் பிராவோவுக்கு மிடில் ஸ்டம்ப் லைனில் பிட்ச் செய்து, இன்ஸ்விங் செய்தார். எதிர்பாராத லைன், லென்த்தால் ஏமாந்த பிராவோ கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் அவுட்டானபோது, அணியின் ஸ்கோர் 24-4! அதுவும் 4.3 ஓவர்களில். தன் 15 பந்துகளில் வெஸ்ட் இண்டீஸைக் காலி செய்தார் வில்லி. அதன்பின் அந்த அணி மீளவேயில்லை! 

டேவிட் வில்லி - வேகத்தை மாற்றியே விக்கெட்டுகள் வீழ்த்தும் வித்தகன்! #CWC19 #PlayerBio

* 4/43 vs ஆஸ்திரேலியா, 2018

இங்கிலாந்துக்கு எதிராகத் தொடரை இழந்த சோகத்தில் ஆறுதல் வெற்றியாவது பெற வேண்டும் என்ற முனைப்பில் ஆடியது ஆஸ்திரேலியா. ஆரோன் பின்ச், ஹெட், இருவரும் ஆடியது அசுர ஆட்டம். அதன் பின் வந்த ஷான் மார்ஷூம் சதமடிக்க பேட்ஸ்மேன்களை அடக்கத் தெரியாமல் போராடினர் இங்கிலாந்து பவுலர்கள். அப்போது ஷான் மார்ஷின் விக்கெட்டை மட்டுமல்லாது அடுத்து வந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களையும் வந்த வேகத்தில் பெவிலியனிற்குத் திருப்பி, 43 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஒரு கட்டத்தில் 400 ரன்களை தொட இருந்த ஆஸ்திரேலியாவை 310 ரன்களுக்கு மடக்கியது வில்லியின் ஸ்விங் ஜாலம்.

டேவிட் வில்லி - வேகத்தை மாற்றியே விக்கெட்டுகள் வீழ்த்தும் வித்தகன்! #CWC19 #PlayerBio

வில்லி ஸ்பெஷல்

இங்கிலாந்தின் முன்னாள் வீரர் மற்றும் அம்பயர் பீட்டர் வில்லியின் மகன் இவர்.

இங்கிலாந்து டி-20 தொடரில், ஓப்பனராகக் களமிறங்கி 40 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.

இதுவரை டி-20 போட்டிகளில் இரண்டு சதங்கள் அடித்துள்ளார்.  

ஒருமுறை நாதன் லயான் வீசிய ஒரு ஓவரில் 34 ரன்கள் எடுத்தார். முதல் 5 பந்துகளிலும் சிக்ஸர் அடித்த வில்லி, கடைசிப் பந்தில் மட்டும் ஜஸ்ட் மிஸ்ஸாக பௌண்டரி அடித்தார். 

Vikatan
பின் செல்ல