Published:Updated:

நேவி ஸ்கூல் டு கிரிக்கெட்... பாகிஸ்தானின் மிரட்டல் ஓப்பனர் ஃபகர் ஜமான்! #CWC19 #PlayerBio

ராம் கார்த்திகேயன் கி ர

2017 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் எல்லோரும் இந்தியா வென்றுவிடும் என நினைத்திருந்த சமயத்தில் இவர் ஆடிய ஆட்டம் அதை அப்படியே புரட்டிப்போட்டது. எந்த ஒரு ஃபைனலில் ஆடுவது என்றாலும் பதற்றம் இருக்கத்தான் செய்யும். ஆனால் அதையும் மீறி சிறப்பாகச் செயல்படுவதிலேயே ஒரு வீரனின் திறமை உள்ளது. அன்று இவர் அடித்த சதம் அத்தகைய திறமையின் வெளிபாடுதான்.

நேவி ஸ்கூல் டு கிரிக்கெட்... பாகிஸ்தானின் மிரட்டல் ஓப்பனர் ஃபகர் ஜமான்! #CWC19 #PlayerBio
நேவி ஸ்கூல் டு கிரிக்கெட்... பாகிஸ்தானின் மிரட்டல் ஓப்பனர் ஃபகர் ஜமான்! #CWC19 #PlayerBio

பாகிஸ்தானின் மிரட்டல் இடது கை ஓப்பனர்கள் வரிசையில், இப்போதைய சென்சேஷன் ஃபகர் ஜமான். பேட்டிங்குக்குச் சாதகமான இங்கிலாந்து ஆடுகளங்களில், இரட்டைச் சதமடிக்கக் காத்திருக்கும் அவரைப் பற்றிய ஒரு குட்டி ரவுண்ட் அப்!

பெயர் : ஃபகர் ஜமான்

பிறந்த தேதி : 10-4-1990

ஊர் : மர்டன், பாகிஸ்தான்

ரோல் : பேட்ஸ்மேன் 

பேட்டிங் ஸ்டைல் : இடது கை பேட்ஸ்மேன்  

சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகம் : 30-4-2017

செல்லப்பெயர் : ஃபெளஜி (Soldier)

நேவி ஸ்கூல் டு கிரிக்கெட்... பாகிஸ்தானின் மிரட்டல் ஓப்பனர் ஃபகர் ஜமான்! #CWC19 #PlayerBio

பிளேயிங் ஸ்டைல்

அதிரடியாக விளையாடக்கூடிய வீரர்களில் பெரும்பாலானவர்கள் டைமிங்கை விட பலத்தைத்தான் அதிகம் பயன்படுத்துவார்கள். ஒரு சிலர் மட்டும்தான் நல்ல ஸ்ட்ரோக் ப்ளே மூலம் அதிரடி காட்டுவர். ஃபகார் ஜமான் அப்படி ஒருவர். ஒருநாள் போட்டிகளில் ஸ்ட்ரைக் ரேட் 95–க்கு மேல் வைத்திருக்கும் ஃபகரின் ஆட்டத்தைப் பார்த்தால் ஹார்ட் ஹிட்டிங் ஷாட்கள் மட்டுமே இருக்காது, டைமிங் ஷாட்களாலும்  பந்து பெளண்டரியைச் சென்றடைந்திருக்கும். கவர் டிரைவ், புல் ஷாட், ஸ்வீப் ஷாட், ஸ்கொயர் கட் என அத்தனை ஷாட்களும் ஆடக்கூடியவர். முக்கியமாக `பேஸ்' மற்றும் `ஸ்பின்' அட்டாக் எதுவாக இருந்தாலும் நிதானமாக கையாளக்கூடியவர். ஓப்பனிங் பேட்ஸ்மேனான ஜமான், புதிய பந்தின் ஸ்விங்கைச் சமாளித்து ஆட்டத்தைக் கட்டமைக்கும் ஆற்றல் பெற்றவர். கன்சிஸ்டென்சி அவரின் பெரிய பலம்.

நேவி ஸ்கூல் டு கிரிக்கெட்... பாகிஸ்தானின் மிரட்டல் ஓப்பனர் ஃபகர் ஜமான்! #CWC19 #PlayerBio

கிரிக்கெட் என்ட்ரி

பாகிஸ்தான் நேவி பள்ளியில் சேர்ந்து கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த போது ஜமானுக்கு வயது 16. முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தி பயிற்சியாளர் அசாத் கானின் கவனத்தைப் பெற்றார். அவர் மூலம் பாகிஸ்தானின் 19 வயதுக்குட்பட்டோர் அணியில் இடம் கிடைக்க, அங்கேயும் அசத்தல் ஆட்டம் தொடர்ந்து. முழுநேரமும் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தத் தொடங்கியவர், 2016 பாகிஸ்தான் கோப்பையில் கைபர் பக்துன்க்வா அணிக்கு விளையாடினார். அந்த சீசனில் 5 போட்டிகளில் 297 ரன்கள் அடித்து, அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தார். ஆனால் அதைத் தொடர்ந்து நடந்த குவைத் –இ –அஸாம் கோப்பைதான் இவரை உலகுக்கு அடையாளம் காட்டியது. 

நேவி ஸ்கூல் டு கிரிக்கெட்... பாகிஸ்தானின் மிரட்டல் ஓப்பனர் ஃபகர் ஜமான்! #CWC19 #PlayerBio

அந்தத் தொடரில் 661 ரன்கள் விளாசியது (சராசரி 51) அவருக்கு பாகிஸ்தான் சூப்பர் லீக்(PSL) தொடரில் லாகூர் அணிக்கு விளையாடும் வாய்ப்பைப் பெற்றுத்தந்தது. கராச்சி அணிக்காக இவர் 56(33) ரன்கள் விளாச, அது பாகிஸ்தான் ஜெர்சியை இவருக்குப் பெற்றுத்தந்தது. 2017 சாம்பியன்ஸ் டிராபியில் தொடங்கிய அவரின் ஒருநாள் போட்டி பயணம், ஸ்பீட் ப்ரேக்கரே இல்லாமல் சென்றுகொண்டிருக்கிறது. பாகிஸ்தான் அந்தக் கோப்பையை வெல்வதற்கு முக்கியக் காரணிகளில் இவரின் பங்களிப்பு (நான்கு போட்டிகளில் 252 ரன்கள்) அபாரமானது. அதைத் தொடர்ந்து நடந்த முத்தரப்பு தொடர்களிலும் சதம், இரட்டைச் சதம் என விளாசி ரன்களை வாரிகுவித்தார். ஒருநாள் போட்டிகளில் சராசரி 50க்கு மேல் வைத்துள்ள ஃபகர், அந்த அணியின் மிகமுக்கியப் புள்ளியாகத் திகழ்கிறார். 

சிறந்த பர்ஃபாமன்ஸ்

* 2017 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் எல்லோரும் இந்தியா வென்றுவிடும் என நினைத்திருந்த சமயத்தில் இவர் ஆடிய ஆட்டம் அப்படியே புரட்டிப்போட்டது. எந்த ஒரு ஃபைனலில் ஆடுவது என்றாலும் பதற்றம் இருக்கத்தான் செய்யும். ஆனால் அதையும் மீறி சிறப்பாகச் செயல்படுவதிலேயே ஒரு வீரனின் திறமை உள்ளது. அன்று இவர் அடித்த சதம் அத்தகைய திறமையின் வெளிப்பாடுதான். நேர்த்தியாக, அதே சமயம் ரன்ரேட்டையும் குறையவிடாமல் ஆடி சதம் அடித்தது இவரின் பக்குவத்தின் வெளிப்பாடு. அந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்றவரும் இவர்தான்.

நேவி ஸ்கூல் டு கிரிக்கெட்... பாகிஸ்தானின் மிரட்டல் ஓப்பனர் ஃபகர் ஜமான்! #CWC19 #PlayerBio

* 2018-ம் ஆண்டு ஜிம்பாப்வே அணியுடனான நான்காவது ஒருநாள் போட்டியில் 210 ரன்கள் விளாசி ,ஒருநாள் போட்டிகளில் இரட்டைச் சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் இவரும் இடம்பெற்றார். அழகான ஸ்ட்ரோக் ப்ளே மூலமாகவே அதிரடி காட்ட முடியும் என்பதை அந்த ஆட்டத்தின் மூலமும் நிரூபித்தார் ஃபகர்.

ஃபகர் ஸ்பெஷல்

குறைந்த இன்னிங்ஸில் ஒரு நாள் போட்டிகளில் 1000 ரன்களை கடந்தவர்.

ஐசிசி நடத்தும் தொடரின் ஃபைனலில் சதம் அடித்த முதல் பாகிஸ்தான் வீரர்.

பாகிஸ்தான் வீரர்களில் முதல் இரட்டைச் சதம் அடித்த வீரர்.

ரோல் மாடல் – யூனஸ் கான்

2007-ம் ஆண்டு பாகிஸ்தான் கடற்படையில் மாலுமியாக இணைந்தார்.


“நேவி பின்னணியிலிருந்து வந்து கிரிக்கெட்டின் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வது சவாலான காரியம். ஆனால், அதை ஜமான் எளிதாக கற்றுக்கொள்ள காரணம், அவர் இயற்கையிலேயே நன்றாக கிரிக்கெட் விளையாடக்கூடிய வீரர். அதை வெளிக்கொண்டு வருவதுதான் என் வேலை “

 - க்ராண்ட் ஃப்ளவர்              
 

Vikatan