Published:Updated:

மார்கஸ் ஸ்டோய்னிஸ் - டெத் பேட்டிங், டெத் பௌலிங்... இரண்டிலுமே மாஸ்டர்! #CWC19 #PlayerBio

மார்கஸ் ஸ்டோய்னிஸ் - டெத் பேட்டிங், டெத் பௌலிங்... இரண்டிலுமே மாஸ்டர்! #CWC19 #PlayerBio
மார்கஸ் ஸ்டோய்னிஸ் - டெத் பேட்டிங், டெத் பௌலிங்... இரண்டிலுமே மாஸ்டர்! #CWC19 #PlayerBio

டெத் ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசக்கூடியவர். ஒரே வகையான பௌலிங் ஸ்டைல் அவருக்கு இல்லை. ஒரு ஓவரில் அதிக வெரைட்டி காட்டுவார். முக்கியமாக இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியின் கடைசி ஓவரில் யார்கர், ஷார்ட் பால் என பேட்ஸ்மேன்களைக் குழம்பச் செய்து, வெறும் 9 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து அணியை வெற்றி பெறச் செய்தார்.

பெயர்: மார்க்கஸ் பீட்டர் ஸ்டோய்னிஸ்
பிறந்த தேதி: 16.08.1989
பிறந்த இடம்: ஆஸ்திரேலியா
பேட்டிங்: ரைட் ஹேண்டட்
பௌலிங்: ரைட் ஆர்ம் மீடியம்
சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகம்: 31.08.2015
செல்லப்பெயர்: ஸ்டோய்னியா

ப்ளேயிங் ஸ்டைல்

மேக்ஸ்வெல் தவிர சரியான ஆல்ரவுண்டர் இல்லாமல் ஒருநாள் போட்டிகளிலும், டி20 போட்டிகளிலும் தவித்த ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டோய்னிஸ் ஒரு சிறப்பான வருகை. எந்த மாதிரியான பந்துகள் வந்தாலும் கண்ணை மூடிக்கொண்டு சுற்றாமல் டெக்கனிக்கல் ஷாட்ஸ் அடிப்பதில் கைதேர்ந்தவர். தனக்கு வந்த ஷார்ட் பால்களை எல்லாம் சிக்சர்களுக்கு திருப்புவதில் கில்லாடி. லோயர் ஆர்டரில் இறங்கினாலும் அணியின் இக்கட்டான சுழ்நிலை அறிந்து அடித்து ஆடக்கூடியவர். ஆனால், எப்போதுமே களமிறங்கியவுடன் அடித்து ஆடமாட்டார். கிறிஸ் கெய்ல்போல், செட்டில் ஆவதற்கு சில பந்துகள் எடுத்துக்கொள்வார். களத்தில் நன்றாகச் செட்டிலாகிவிட்டால், அந்த டாட் பால்களுக்கும் சேர்த்து மொத்தமாக அடித்துவிடுவார். 

மார்கஸ் ஸ்டோய்னிஸ் - டெத் பேட்டிங், டெத் பௌலிங்... இரண்டிலுமே மாஸ்டர்! #CWC19 #PlayerBio

டெத் ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசக்கூடியவர். ஒரே வகையான பௌலிங் ஸ்டைல் அவருக்கு இல்லை. ஒரு ஓவரில் அதிக வெரைட்டி காட்டுவார். முக்கியமாக இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியின் கடைசி ஓவரில் யார்கர், ஷார்ட் பால் என பேட்ஸ்மேன்களைக் குழம்பச் செய்து, வெறும் 9 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து அணியை வெற்றி பெறச் செய்தார்.

கிரிக்கெட் பயணம் 

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் பிறந்த இவர் மேற்கு ஆஸ்திரேலிய அணிக்காக 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட அணிகளில் ஆடினார். 2008-ம் ஆண்டு நடைபெற்ற இளையோர் உலகக் கோப்பையிலும் ஆடிய அவரால் பெரிய அளவு சோபிக்க முடியவில்லை. பின்னர், 2008-09-சீஸனில் மேற்கு ஆஸ்திரேலியாவுக்காக முதல்தர போட்டிகளில் ஆடத் தொடங்கினார். 2009-10 சீஸனில் ஷெஃபீல்டு ஷீல்டு கோப்பையிலும் ஃபோர்டு ரேஞ்சர் கோப்பையிலும் தொடர்ந்து ஆடினார். ஆனாலும், ஆஸ்திரேலிய அணியில் அவரால் இடம் பிடிக்க முடியவில்லை. 

மார்கஸ் ஸ்டோய்னிஸ் - டெத் பேட்டிங், டெத் பௌலிங்... இரண்டிலுமே மாஸ்டர்! #CWC19 #PlayerBio

2012-ல் நார்த்தம்டன் ப்ரீமியர் லீக் தொடரில் ஆடியபோது ஒரு போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். 2012-13 பிக் பேஷ் சீஸனுக்காக பெர்த் அணியில் சேர்க்கப்பட்டார். 2015 ஐ.பி.எல் தொடரில் டெல்லி அணிக்காக ஆடினார். அதன் பின் ஒருவழியாக  2015 ஆகஸ்ட்டில் ஆஸ்திரேலிய டி20 அணியில் அறிமுகமானார். பின்னர், அதே ஆண்டு செப்டம்பரில் ஒரு நாள் அணியிலும் அறிமுகமான ஸ்டோய்னிஸ், 2017-ல் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு அதிகம் போராடினார். ஆனால், அப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோற்றாலும் இவரின் இன்னிங்ஸ் ஆஸ்திரேலிய அணியினர் மட்டுமல்லாது அனைவராலும் மறக்க இயலாததாக இருந்தது‌. அதன்பின் ஆஸ்திரேலிய அணியில் ஸ்டோனிஸ்க்கான இடம் நிரந்தரமானது.

2017 மார்ச்சில் ஒரு வழியாக டெஸ்ட் அணியில் காயத்தால் அவதிப்பட்ட மிட்செல் மார்ஷூக்குப் பதில் அணியில் இடம்பிடித்தாலும் அவர் ஆடவில்லை‌. அதேபோல் 2019-ல் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 15 பேர் கொண்ட அணியில் இருந்தார். ஆனால், ப்ளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. அது ஏன் என்பது ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கத்துக்கே வெளிச்சம்.

மார்கஸ் ஸ்டோய்னிஸ் - டெத் பேட்டிங், டெத் பௌலிங்... இரண்டிலுமே மாஸ்டர்! #CWC19 #PlayerBio

சிறந்த பெர்ஃபாமன்ஸ்

* 146 vs நியூசிலாந்து 2017

2017 ஆஸ்திரேலியா நியூசிலாந்துக்கு எதிரான சேப்பல் ஹேட்லி கோப்பையின் முதல் போட்டி. ஆரோன் ஃபிஞ்ச், ஹெட், ஹேண்ட்ஸ்கோம்ப், மேக்ஸ்வெல் என மொத்த டாப் ஆர்டரும் சரிந்து நியூசிலாந்தின் வெற்றி நிச்சயமாகிக் கொண்டிருந்த தருணத்தில் 7-வது விக்கெட்டுக்கு இறங்கினார் ஸ்டோய்னிஸ்‌. அவர் வந்தபோது 67/6 எனப் பரிதவித்த அணியைத் தூக்கி நிறுத்தினார். சவுத்தீ, போல்ட், சன்ட்னர் என நியூசிலாந்து பௌலர்களின் பந்துவீச்சை நாலா பக்கமும் சிதறடித்தார். நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பௌலர்களை மாற்றி மாற்றிப் பந்துவீச செய்தாலும் ஸ்டோய்னிஸ் தனது ஆட்டத்தில் நிலையாக இருந்தார்.

ஒருகட்டத்தில் ஓவருக்கு 12 ரன்கள் வீதம் அடித்துக்கொண்டிருந்தார். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் நிலைத்து ஆடினார். இறுதியாக வெற்றிக்கு 7 ரன்கள் தேவை இருந்தபோது பரிதாபமாக ஹேசில்வுட் அவுட்டாக ஆஸ்திரேலியாவின் மொத்த விக்கெட்டும் சரிந்து தோற்றது. ஸ்டோய்னிஸ் 11 சிக்சர்கள், 9 பவுண்டரிகள் உட்பட 117 பந்துகளில் 146 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய அணி தோற்றாலும் அவரது அந்த இன்னிங்ஸை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. 

மார்கஸ் ஸ்டோய்னிஸ் - டெத் பேட்டிங், டெத் பௌலிங்... இரண்டிலுமே மாஸ்டர்! #CWC19 #PlayerBio

* 2/27 vs இந்தியா

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி. ஏற்கெனவே ஒருநாள் போட்டியில் தொடரை இழந்ததற்குப் பதிலடி தரும் முனைப்பில் ஆடி, 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் (17 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட போட்டி) எடுத்தது ஆஸ்திரேலிய அணி. ஆனால், டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இந்தியாவுக்கு 17 ஓவர்களில் 174 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்தியா சார்பில் ஷிகர் தவான் அசுர ஆட்டம் ஆடி 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இந்தியாவின் வெற்றிக்குக் கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. பந்துவீச ஸ்டோய்னிஸ் வந்தார். களத்தில் குருனால் பாண்டியாவும் தினேஷ் கார்த்திக்கும் இருந்தனர். எத்தனையோ நெருக்கடி இருந்தாலும் அதைப் பெரிதும் கண்டுகொள்ளாமல் அசால்ட்டாகப் பந்துவீசினார். அடுத்தடுத்த பந்துகளிலேயே பாண்டியா மற்றும் புவனேஷ்வரின் விக்கெட்டுகளை வீழ்த்த, கடைசி பந்தில் 9 ரன்கள் தேவைப்பட்டன. அந்தப் பந்து பவுண்டரியானாலும் இந்தியா பரிதாபமாக 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. 

ஸ்டோய்னிஸ் ஸ்பெஷல்

* ஏழாவது விக்கெட்டுக்கு இறங்கி அதிக ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய வீரர் (146*)
* முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்கை தன் ஆதர்சமாகக் கொண்டவர்
* விருது - சிறந்த ஆஸ்திரேலிய ஒருநாள் வீரர் (2018-19)

Vikatan
அடுத்த கட்டுரைக்கு