Published:Updated:

வெஸ்ட் இண்டீஸ் அணியின் மிகப்பெரிய `ஹோப்' – ஷாய் ஹோப்! #PlayerBio #CWC19

வெஸ்ட் இண்டீஸ் அணியின் மிகப்பெரிய `ஹோப்' – ஷாய் ஹோப்! #PlayerBio #CWC19
வெஸ்ட் இண்டீஸ் அணியின் மிகப்பெரிய `ஹோப்' – ஷாய் ஹோப்! #PlayerBio #CWC19

இந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, வீரர்களின் அதிரடி அணுகுமுறையால், ஒன்று 400 அடிக்கலாம், இல்லையேல் 40 ரன்களுக்குக்கூட ஆல் அவுட் ஆகலாம். ஆனால், கடந்த சில மாதங்களாக, அந்த அணியை மிக அற்புதமாக பேலன்ஸ் செய்து, மிகப்பெரிய `ஹோப்' கொடுத்துக்கொண்டிருக்கிறார் இந்த ஷாய் ஹோப்.

கிறிஸ் கெய்ல், ஈவின் லூயிஸ், ஷிம்ரான் ஹிட்மேயர், ஆண்ட்ரே ரஸல் என ஹிட்டர்களாக நிறைந்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் உயிர்நாடி ஷாய் ஹோப்தான்! இந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, வீரர்களின் அதிரடி அணுகுமுறையால், ஒன்று 400 அடிக்கலாம், இல்லையேல் 40 ரன்களுக்குக்கூட ஆல் அவுட் ஆகலாம். ஆனால், கடந்த சில மாதங்களாக, அந்த அணியை மிக அற்புதமாக பேலன்ஸ் செய்து, மிகப்பெரிய `ஹோப்' கொடுத்துக்கொண்டிருக்கிறார் இந்த ஷாய் ஹோப். விக்கெட்டுகளை ஒரு புறம் இழுத்துப் பிடிப்பதாகட்டும், ரன் சேஸ்களை துல்லியமாகக் கணக்கிட்டு கடைசிவரை போராடுவதாகட்டும், கடந்த சில ஆண்டுகளில் எந்த வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேனிடமும் பார்க்காத சில குணங்களைக் கொண்டிருக்கிறார். அதனாலேயே, அந்த அணியின் வெற்றி வாய்ப்பு அவரைச் சுற்றியே அமையும்.

பெயர் : ஷாய் ஹோப்

பிறந்த தேதி : 10.11.1993

பிறந்த இடம் : செயின்ட் மைக்கெல்ஸ், பார்படாஸ்

பேட்டிங் : வலது கை பேட்ஸ்மேன்

ஃபீல்டிங் பொசிஷன் : கீப்பர்

சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகம் : 01.05.2015 

வெஸ்ட் இண்டீஸ் அணியின் மிகப்பெரிய `ஹோப்' – ஷாய் ஹோப்! #PlayerBio #CWC19

பிளேயிங் ஸ்டைல்

2015–ல் சர்வதேசக் களத்திற்கு வந்தார் ஹோப். ஆரம்ப காலங்களில் பெரிய அளவில் சோபிக்கவில்லை என்றாலும் அவரின் ஷாட்கள் துல்லியமாக இருக்கும். மற்ற வெஸ்ட் இண்டீஸ் வீரர்களைப் போல் முரட்டுத்தனம் இவர் ஷாட்களில் இருக்காது. முக்கியமாக கவர் ட்ரைவ் அடிப்பதில் கைதேர்ந்தவர். இடுப்பைத் தாண்டி எழும் பந்துகளை பேக் ஃபூட்டால் பவுண்டரிகளுக்கு லாகவமாகத் திருப்புவார்.  இவரது பேக் ஃபூட் ஆஃப் டிரைவ்களுக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். பவுண்டரி அடிப்பதிலும் சிக்சர் அடிப்பதிலும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கே இருக்கும் உரித்தான ஆர்வம் இவருக்கும் உண்டு. ஆனால், விக்கெட்டுகளுக்கு இடையே ஓடி ரன் எடுப்பதில் இல்லை. இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியை எளிதாக ஜெயிக்க வேண்டிய வெஸ்ட் இண்டீஸ் அணி இவர் ரன் எடுக்காமல் விட்ட டாட் பால்களினால் பரிதாபமாக தோற்றது. மற்றபடி மூன்றாவது வீரராக இறங்கி அணியை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வதில் ஹோப் ஒரு பெஸ்ட் சாய்ஸ்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் மிகப்பெரிய `ஹோப்' – ஷாய் ஹோப்! #PlayerBio #CWC19

சர்வதேச என்ட்ரி

வெஸ்ட் இண்டீஸின் பார்படாஸில் இவர் பிறந்திருந்தாலும் பள்ளிப்படிப்பை இங்கிலாந்தில் முடித்தார். அப்போது தேசிய அளவு 20 ஓவர் போட்டியின் ஃபைனலில் தோற்றாலும் அரைசதம் அடித்தார். பல வருடங்கள் இங்கிலாந்தில் இருந்ததால் இங்கிலாந்து அணியில் இடம் பெறுவதற்காகப் பல முயற்சிகள் செய்தார். இடம் கிடைக்காமல் போக, பார்படாஸ் திரும்பி, பார்படாஸ் அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளில் ஆடத் தொடங்கினார். 2013-ம் ஆண்டு விண்ட்வேர்ட் ஐல்ஸ் அணிக்கு எதிராக 211 ரன்கள் அடித்து அசத்தினார். 50 ஓவர் உள்ளூர்த் தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளில் இவர் அடித்த சதம், எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. கையோடு வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பிடித்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் மிகப்பெரிய `ஹோப்' – ஷாய் ஹோப்! #PlayerBio #CWC19

சிறந்த பர்ஃபாமன்ஸ்

* 2017-ம் ஆண்டு இங்கிலாந்துடன் நடந்த டெஸ்ட் தொடர். இரண்டாவது போட்டியில் வென்று, தொடரைச் சமன் செய்ய வேண்டிய நெருக்கடி. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 258–க்கு ஆல்அவுட்டாக, வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. ப்ராத்வொயிட்டோடு சேர்த்து ஹோப் ஆடியது கதகளி ஆட்டம். இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்கு 246 ரன்கள் எடுத்தனர். ப்ராத்வொயிட்டின் விக்கெட் இழப்புக்குப் பின், நிலைத்து ஆடிய ஹோப், 147 ரன்கள் விளாச, 427 ரன்கள் குவித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி. இரண்டாவது இன்னிங்ஸில்  இங்கிலாந்து 490 ரன்கள் வெளுக்க, வெஸ்ட் இண்டீஸின் வெற்றி இலக்காக 322 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. ப்ராத்வொயிட் தவிர வேறு யாரும் சிறப்பாக ஆடாத நிலையில் ஹோப் ஒற்றை ஆளாக, 118 ரன்கள் குவித்து அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்தார். தான் இடம்பிடிக்கப் போராடிய இங்கிலாந்து அணிக்கு எதிராகவே, அடுத்தடுத்த இன்னிங்ஸ்களில் சதமடித்து அசத்தினார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் மிகப்பெரிய `ஹோப்' – ஷாய் ஹோப்! #PlayerBio #CWC19

* கடந்த ஆண்டு வங்கதேசத்திற்கு எதிரான ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் பரிதாபமாகத் தோற்றது வெஸ்ட் இண்டீஸ்.  இரண்டாவது போட்டியில் 256 ரன்கள் இலக்கு. இதில் ஜெயித்தால் மட்டுமே தொடரை வெல்ல வாய்ப்பு என்ற இக்கட்டான சூழ்நிலையில் இறங்கியது வெஸ்ட் இண்டீஸ். ஒருபுறம் 3, 26, 14 என வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஹோப் மட்டும் ஒற்றை ஆளாகப் போராடினார். 144 பந்துகளில் 12 பவுண்டரிகள் 3 சிக்சர்களோடு தன் கேரியரின் சிறந்த ஒருநாள் ஸ்கோரான 146 ரன்களை எடுக்க, நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது வெஸ்ட் இண்டீஸ். பிராவோ, சாம்வேல்ஸ் என அனுபவ வீரர்கள் இருந்தும் ஒற்றை ஆளாகப் போராடி வென்றார் ஹோப்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் மிகப்பெரிய `ஹோப்' – ஷாய் ஹோப்! #PlayerBio #CWC19

ஹோப் ஸ்பெஷல்

* இங்கிலாந்திற்கு எதிராக ஒரே டெஸ்ட்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்த முதல் வீரர்.

* பிறந்தது வெஸ்ட் இண்டீஸாக இருந்தாலும் இங்கிலாந்தில் படித்த அவர் கிரிக்கெட் திறமையை வளர்த்துக்கொள்ள அங்குள்ள கிரிக்கெட் க்ளப்பில் இரண்டாண்டு ஸ்காலர்ஷிப் பெற்றார். அதுவே அவர் வாழ்வின் திருப்புமுனையாக அமைந்தது.

* 2018-ல் வெஸ்ட் இண்டீஸின் சிறந்த வீரர், சிறந்த ஒருநாள் வீரர், சிறந்த டெஸ்ட் வீரர் என மூன்று விருதுகளை வென்றார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் மிகப்பெரிய `ஹோப்' – ஷாய் ஹோப்! #PlayerBio #CWC19

* சமீபத்தில் அயர்லாந்து அணியுடன் நடந்த ஒருநாள் போட்டியில் ஹோப், ஜான் கேம்பெல் கூட்டணி, முதல் விக்கெட்டுக்கு 365 ரன்கள் குவித்தது. ஒருநாள் போட்டி வரலாற்றில் சிறந்த ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் இதுதான்.

"ப்ரையன் லாராவின் 400ரன்கள் சாதனையை முறியடிப்பேன், அது கடினம் என்று எனக்குத் தெரியும், இருந்தாலும், ஒருநாள் அந்தச் சாதனை என்னால் முறியடிக்கப்படும்"

                            - ஷாய் ஹோப்

Vikatan
அடுத்த கட்டுரைக்கு