Published:Updated:

'சோக்கர்ஸ்...' அவப்பெயரை அழிக்குமா தென்னாப்பிரிக்கா? உலகக் கோப்பை அணிகள் ஒரு பார்வை #CWC19

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
'சோக்கர்ஸ்...' அவப்பெயரை அழிக்குமா தென்னாப்பிரிக்கா? உலகக் கோப்பை அணிகள் ஒரு பார்வை #CWC19
'சோக்கர்ஸ்...' அவப்பெயரை அழிக்குமா தென்னாப்பிரிக்கா? உலகக் கோப்பை அணிகள் ஒரு பார்வை #CWC19

ஓர் உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி என்றால், அடுத்த தொடரில் அதற்கு முன்பே வேளியேறுவதான் தென்னாப்பிரிக்க அணியின் வழக்கம். அந்த லாஜிக்படிப் பார்த்தால், இந்த முறை குரூப் சுற்றோடு நடையைக்கட்டக்கூடும்.

கேப்டன் : ஃபாஃப் டுப்ளெஸ்ஸி

பயிற்சியாளர் : ஒட்டிஸ் கிப்சன்

ஐ.சி.சி ஒருநாள் ரேங்கிங் : 4

உலகக் கோப்பையில் இதுவரை :

உலகக் கோப்பை பெர்ஃபாமன்ஸ்
1992 அரையிறுதி
1996 குரூப் சுற்று
1999 அரையிறுதி
2003 குரூப் சுற்று
2007 அரையிறுதி
2011 காலிறுதி
2015 அரையிறுதி

ஒவ்வொருமுறையும் அரையிறுதி வரை சென்று வெளியேறுவதே வாடிக்கையாகிவிட்ட நிலையில், இம்முறை 'சோக்கர்ஸ்' என்ற அவப்பெயரைத் துடைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது தென்னாப்பிரிக்க அணி. அணியின் தூண் டி வில்லியர்ஸ் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், இந்த முறை அரையிறுதிக்கே முன்னேறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

'சோக்கர்ஸ்...' அவப்பெயரை அழிக்குமா தென்னாப்பிரிக்கா? உலகக் கோப்பை அணிகள் ஒரு பார்வை #CWC19

மிஸ்டர் 360 டிகிரியின் ஓய்வுக்குப் பிறகு, அவர்களின் பேட்டிங் ஆர்டர் கவலையளிப்பதாகவே இருக்கிறது. டு பிளெஸ்ஸி, டி காக் தவிர்த்து பெரிதாக யாரும் கைகொடுப்பதில்லை. டுமினி, மில்லர், மார்க்ரம் என யாரிடமும் கன்சிஸ்டென்சி இல்லை. அம்லா சுத்தமாக ஃபார்மில் இல்லை. அனுபவ வீரர் என்பதால் மட்டுமே அவரை உலகக் கோப்பை அணியில் சேர்த்திருக்கிறார்கள். அவருக்குப் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைப்பது சந்தேம் என்றுதான் தெரிகிறது. வேன் டர் டூசன் சில நல்ல இன்னிங்ஸ்கள் ஆடலாம்.

பேட்ஸ்மேன்களின் ஃபார்ம், கன்சிஸ்டன்சி, டி காக், ஃபாஃப் இருவர் மீதான நெருக்கடியை அதிகரிக்கும். டி காக்கின் பலமே, எதைப்பற்றியும் கவலைப்படாமல் தன் கேமை ஆடுவதுதான். ஆனால், இப்போது அவரால் அப்படி ஆட முடியுமா தெரியவில்லை. இந்த உலகக் கோப்பையில் ஆடும் அனைத்து பேட்ஸ்மேன்களையும்விட அதிக நெருக்கடியைச் சுமக்கப்போவது டுப்ளெஸ்ஸிதான். 'சோக்கர்ஸ்' என்று விமர்சிக்கப்படும் அணியை வழிநடத்த வேண்டும், ஃபார்மில் இல்லாத பேட்டிங் ஆர்டரை நிலைநிறுத்த வேண்டும், அதையும் தாண்டி டி வில்லியர்ஸ் என்ற மகத்தான வீரரின் இடத்தை நிரப்ப வேண்டும்.

'சோக்கர்ஸ்...' அவப்பெயரை அழிக்குமா தென்னாப்பிரிக்கா? உலகக் கோப்பை அணிகள் ஒரு பார்வை #CWC19

ஃபாஃப் தோள்களில் மிகப்பெரிய பாரம் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதைப் பாகுபலியைப்போல் அசால்டாக டீல் செய்யும் திறன் கொண்டவர் இவர். ஏ.பி-யின் ஓய்வுக்குப் பிறகு, ஒவ்வொரு முறை களத்தில் இறங்கும்போதும், அவர் ஏற்படுத்திய ஓட்டையை அடைத்துக்கொண்டே இருக்கிறார் ஃபாஃப்... சந்திரமுகி கோவாலு போல் தனியாகவே! இங்கிலாந்தில் அதை இன்னும் சிறப்பாகச் செய்வார் என்று எதிர்பார்க்கலாம்.

பேட்டிங்தான் சுமார் என்றால், ஆல் ரவுண்டர் ஏரியாவும் அப்படித்தான் இருக்கிறது. குளூஸ்னர், காலிஸ் போன்ற ஆல்ரவுண்டர்களோடு களமிறங்கியவர்களுக்கு இப்போது எஞ்சியிருப்பது ஃபெலுக்வாயோ, பிரடோரியஸ்! ஏன்ரிச் நார்டேவின் காயத்தால், இப்போது கிறிஸ் மோரிஸ் சேர்க்கப்பட்டிருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மோரிஸுக்கும், இப்போது இருப்பவருக்கும் ஓராயிரம் வித்தியாசங்கள் இருக்கின்றன. பேட்டிங், பௌலிங் என இரண்டுமே படு சுமார். இந்த ஐபிஎல் சீஸனில், 9 போட்டிகளில் விளையாடி 32 ரன்கள் (சராசரி : 5.33) மட்டுமே அடித்தார். 13 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தாலும், ரன்களை வாரி வழங்கினார் (எகானமி : 9.27) மோரிஸ். முழு ஆல்ரவுண்டராகத் திரும்பிவருவது அவசியம்.

'சோக்கர்ஸ்...' அவப்பெயரை அழிக்குமா தென்னாப்பிரிக்கா? உலகக் கோப்பை அணிகள் ஒரு பார்வை #CWC19

பௌலிங் யூனிட்தான் அந்த அணியின் ஒரே நம்பிக்கை. ககிசோ ரபாடா, லுங்கி எங்கிடி, டேல் ஸ்டெய்ன் அடங்கிய வேகப்பந்துவீச்சுக் கூட்டணி எதிரணிகளின் சொப்பனமாக விளங்கும். தன் முழுத் திறனையும், இந்த ஐபிஎல் தொடரில் நிரூபித்தார் ரபாடா. பெங்களூரு அணிக்காகக் கம்பேக் கொடுத்து, தான் இன்னும் மிரட்டல் பௌலர்தான் என்பதை நிரூபித்தார் ஸ்டெய்ன். முதல் பவர் ப்ளே, மிடில் ஓவர்கள், டெத் ஓவர்கள் என எந்தச் சூழ்நிலையிலும் இந்தக் கூட்டணி விக்கெட் வேட்டை நடத்தும்!

'சோக்கர்ஸ்...' அவப்பெயரை அழிக்குமா தென்னாப்பிரிக்கா? உலகக் கோப்பை அணிகள் ஒரு பார்வை #CWC19

என்ன கொடுமையெனில், இவர்கள் மூவருமே காயம் காரணமாக ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேறியவர்கள்! உலகக் கோப்பை தொடங்கும் முன் முழு உடற்தகுதியோடு அவர்கள் மீண்டு வருவது முக்கியம். இல்லையேல், தென்னாப்பிரிக்காவின் நிலை இன்னும் மோசமாகிவிடும். வேகப்பந்துவீச்சு மிரட்டல் என்றால், சுழல் ஏரியாவில் ஒற்றை ஆயுதமாக நிற்கிறார் இம்ரான் தாஹிர். இந்த ஐ.பி.எல் சீஸனில் 26 விக்கெட்டுகள் வீழ்த்தி பர்ப்பிள் கேப் வென்று அசத்தியுள்ளார். விக்கெட் வீழ்த்தினால், எப்படியும் இங்கிலாந்து முதல் அயர்லாந்து வரை ஓடியே கடந்துவிடுவார்.

டுமினி, தாஹிர் ஆகியோர் இந்த உலகக் கோப்பையோடு ஓய்வு பெறவுள்ளதால், அவர்களிடம் பெரிய பங்களிப்பை எதிர்பார்க்கலாம். கடந்த உலகக் கோப்பையில் 5-வது விக்கெட்டுக்கு உலக சாதனை பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த டுமினி, பந்துவீச்சிலும் ஒரு கை பார்த்து ஹாட்ரிக் வீழ்த்தி அசத்தினார். அந்த உலகக் கோப்பையில் செய்ததுபோல், சில ஆச்சர்ய பெர்ஃபாமன்ஸ்களைக் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

'சோக்கர்ஸ்...' அவப்பெயரை அழிக்குமா தென்னாப்பிரிக்கா? உலகக் கோப்பை அணிகள் ஒரு பார்வை #CWC19

மொத்தத்தில் பேட்டிங் ஆர்டர் எப்படிச் செயல்படுகிறதோ, அதைப் பொறுத்துத்தான் தென்னாப்பிரிக்காவின் அரையிறுதி வாய்ப்பு அமையும். ஓர் உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி என்றால், அடுத்த தொடரில் அதற்கு முன்பே வேளியேறுவதான் தென்னாப்பிரிக்க அணியின் வழக்கம். அந்த லாஜிக் படிப் பார்த்தால், இந்த முறை குரூப் சுற்றோடு நடையைக்கட்டக்கூடும். உண்மையில், அந்த லாஜிக் இல்லாமல் பார்த்தாலும்கூட, தென்னாப்பிரிக்கா முதல் சுற்றோடு வெளியேறவே வாய்ப்புகள் அதிகம்.

தென்னாப்பிரிக்க அணியின் அட்டவணை

தேதி நேரம் போட்டி மைதானம்
மே 30 மாலை 3 மணி இங்கிலாந்து vs தென்னாப்பிரிக்கா கென்னிங்டன் ஓவல், லண்டன்
ஜூன் 2 மாலை 3 மணி தென்னாப்பிரிக்கா vs வங்கதேசம் கென்னிங்டன் ஓவல், லண்டன்
ஜூன் 5 மாலை 3 மணி தென்னாப்பிரிக்கா vs இந்தியா ரோஸ் பௌல், சௌதாம்ப்டன்
ஜூன் 10 மாலை 3 மணி தென்னாப்பிரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ் ரோஸ் பௌல், சௌதாம்ப்டன்
ஜூன் 15 மாலை 6 மணி தென்னாப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் சோஃபியா கார்டன்ஸ், கார்டிஃப்
ஜூன் 19 மாலை 3 மணி நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா எட்பாஸ்டன், பிர்மிங்ஹம்
ஜூன் 23 மாலை 3 மணி பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா லார்ட்ஸ், லண்டன்
ஜூன் 28 மாலை 3 மணி இலங்கை - தென்னாப்பிரிக்கா ரிவர்சைட் மைதானம், செஸ்டர் லீ ஸ்ட்ரீட்
ஜூலை 6 மாலை 6 மணி ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா ஓல்டு டிராஃபோர்ட், மான்செஸ்டர்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு