Published:Updated:

சி.எஸ்.கே தோற்றதற்கான 5 காரணங்கள்? ஸ்போர்ட்ஸ் விகடன் மே இதழ் #SportsVikatan

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சி.எஸ்.கே தோற்றதற்கான 5 காரணங்கள்? ஸ்போர்ட்ஸ் விகடன் மே இதழ் #SportsVikatan
சி.எஸ்.கே தோற்றதற்கான 5 காரணங்கள்? ஸ்போர்ட்ஸ் விகடன் மே இதழ் #SportsVikatan

சி.எஸ்.கே தோற்றதற்கான 5 காரணங்கள்? ஸ்போர்ட்ஸ் விகடன் மே இதழ் #SportsVikatan

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஐபிஎல் ஸ்பெஷலாக உருவாகி வெளியாகியிருக்கிறது ஸ்போர்ட்ஸ் விகடன் மே மாத இதழ். நான்காவது முறையாக சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ், ஐந்தாவது முறையாக இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து கோப்பையை இழந்திருக்கிறது. 

`இது வெற்றிகரமான தோல்வி’ என ஆறுதல்பட்டுக்கொண்டாலும் 2019 சீஸன் பல கேள்விகளை எழுப்புகிறது. வரும் 2019 ஜூலையோடு 38 வயதை நிறைவு செய்கிறார் சென்னையின் கேப்டன் தோனி. ஜூன்/ஜூலையில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியோடு சர்வதேசப் போட்டிகளிலிருந்து தோனி ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேசப் போட்டிகளிலிருந்து தோனி ஓய்வுபெற்ற பிறகு இன்னும் ஒன்று அல்லது 2 ஐபிஎல் தொடர்களில் மட்டுமே விளையாடுவார் என எதிர்பார்க்கலாம். அதன் பிறகு, தோனி அணியில் இல்லை என்பது சென்னைக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும். தோனிக்குப் பதில் அணிக்குத் தலைமையேற்று நடத்தக்கூடிய திறமையான தலைவனைக் கண்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது சென்னை. அதுமட்டுமல்ல ஒட்டுமொத்த வீரர்களையுமே மாற்றியமைக்க வேண்டும்.

ஸ்போர்ட்ஸ் விகடன் மே மாத இதழை விகடன் App-ல் படிக்க: https://bit.ly/vikatanandroidapp

சி.எஸ்.கே தோற்றதற்கான 5 காரணங்கள்? ஸ்போர்ட்ஸ் விகடன் மே இதழ் #SportsVikatan

''ஓய்வூதியம் பெறும் வீரர்களின் அணி'' என்பதுதான் சென்னையைப் பற்றி சமூகவலைதளக் கேலிக் கருத்து. கிண்டலாக இருந்தாலும் அது உண்மைதான். இந்த ஐபிஎல்லில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சென்னை வீரர் இம்ரான் தாஹிரின் வயது 40. அதேபோல் வாட்ஸன், ஹர்பஜன், சுரேஷ் ரெய்னா, ஜடேஜா என முக்கிய வீரர்கள் எல்லோருமே 30 வயதைக் கடந்தவர்கள். 

2019 ஐபிஎல் சீஸனில் வீரர்கள் எவ்வளவு சொதப்பினாலும் அவர்களுக்குச் சரியான மாற்று வீரர்களைத் தோனியால் தேர்வு செய்ய முடியவில்லை என்பதே தோல்விக்கு மிகப்பெரிய காரணம். வாட்ஸன், பிராவோ, ஜடேஜா, ரெய்னா என மோசமான பர்ஃபாமர்கள் எல்லோருமே தொடர்ந்து போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்பட்டனர். ஏனென்றால் அவர்களுக்கான மாற்று வீரர்கள் அணியில் இல்லை. இதுதான் சென்னை அணியின் பிரச்னை. 

இப்போதே புதிய அதிரடி பேட்ஸ்மேன்கள், திறமையான வேகப்பந்து வீச்சாளர்கள், இளம் ஸ்பின்னர்கள், வேகமான ஃபீல்டர்கள் கொண்ட அணியைக் கட்டமைக்க வேண்டிய சூழலில் இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். அடுத்த சீஸனில் இந்தத் தவறுகள் எல்லாம் களையப்பட்டால் மட்டுமே மும்பைக்கு ஈடுகொடுத்து நான்காவது முறையாகக் கோப்பை வெல்லும் அணியாக முன்னால் நிற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ். இல்லையென்றால் பழம் பெருமை பேசும் அணியாகச் சென்னை மாறுவதற்கான எல்லா சூழல்களும் கண்முன் தெரிகின்றன!

ஸ்போர்ட்ஸ் விகடன் மே மாத இதழை விகடன் App-ல் படிக்க: https://bit.ly/vikatanandroidapp

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு