Published:Updated:

கவாஸ்கரின் மாரத்தானோடு தொடங்கிய உலகக் கோப்பை எனும் 100 மீட்டர் ரேஸ்! #WorldCupMemories

கவாஸ்கரின் மாரத்தானோடு தொடங்கிய உலகக் கோப்பை எனும் 100 மீட்டர் ரேஸ்! #WorldCupMemories

Gavaskar had other ideas! ஓப்பனராகக் களமிறங்கி, 60 ஓவர்களும் நின்றார். 174 பந்துகள். ஆனால், அடித்ததோ 36 ரன்கள்... ஆம், வெறும் 36 ரன்கள்! மோடோ ஜி.பி டிராக்கில் சைக்கிள் ஓட்டினார் சன்னி!

Published:Updated:

கவாஸ்கரின் மாரத்தானோடு தொடங்கிய உலகக் கோப்பை எனும் 100 மீட்டர் ரேஸ்! #WorldCupMemories

Gavaskar had other ideas! ஓப்பனராகக் களமிறங்கி, 60 ஓவர்களும் நின்றார். 174 பந்துகள். ஆனால், அடித்ததோ 36 ரன்கள்... ஆம், வெறும் 36 ரன்கள்! மோடோ ஜி.பி டிராக்கில் சைக்கிள் ஓட்டினார் சன்னி!

கவாஸ்கரின் மாரத்தானோடு தொடங்கிய உலகக் கோப்பை எனும் 100 மீட்டர் ரேஸ்! #WorldCupMemories

இன்னும் சரியாக இரண்டு வாரங்களில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கப்போகிறது. மொத்த உலகமும் எதிர்பார்த்திருக்கும் இந்தத் தொடர், பலருக்கும் பல நினைவுகளைக் கொடுக்கும். ``இப்படித்தான் `83 உலகக் கோப்பைல கபில் அடிச்சாரு", ``இதே தப்பத்தான் `99-ல தென் ஆப்பிரிக்கா பண்ணுச்சுனு" பழைய நினைவுகளையெல்லாம் பலரும் தூசி தட்டத் தொடங்குவார்கள். இப்போது நாமும் அதைத்தான் செய்யப்போகிறோம். ஒவ்வொரு உலகக் கோப்பைத் தொடரையும், அதில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களையும் தினமும் ஒவ்வொன்றாக அசைபோடப்போகிறோம். 

6 நாடுகள் மட்டுமே தொடர்ச்சியாக விளையாடிக்கொண்டிருந்த கிரிக்கெட் எனும் விளையாட்டை, உலக அரங்குக்கு எடுத்துச் சென்றது உலகக் கோப்பை தொடர்தான். இலங்கை, கென்யா போன்ற நாடுகளில் கிரிக்கெட்டை முக்கிய விளையாட்டாக மாற்றியதிலும், இந்தியாவில் அதை மதமாகவே மாற்றியதிலும் இந்தத் தொடருக்கு முக்கியப் பங்குண்டு. 1975-ம் ஆண்டு தொடங்கப்பட்ட முதல் தொடர், வெகுஜன ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்து விஷயங்களையும் விருந்தாக்கியது. அந்தத் தொடரின் ஸ்பெஷல் விஷயங்களுள் சில இங்கே...

கவாஸ்கரின் மாரத்தானோடு தொடங்கிய உலகக் கோப்பை எனும் 100 மீட்டர் ரேஸ்! #WorldCupMemories

174 பந்துகளில் 36 ரன்கள்... கவாஸ்கரின் மாரத்தான் இன்னிங்ஸ்

உலகக் கோப்பை வரலாற்றின் முதல் போட்டி. இந்தியப் பந்துவீச்சாளர்களைப் புரட்டியெடுத்து 334 ரன்கள் குவித்தது போட்டியை நடத்திய இங்கிலாந்து. இந்திய அணியின் அதிரடி ஆட்டத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால், Gavaskar had other ideas! ஓப்பனராகக் களமிறங்கி, 60 ஓவர்களும் நின்றார். 174 பந்துகள். ஆனால், அடித்ததோ 36 ரன்கள்... ஆம், வெறும் 36 ரன்கள்! மோடோ ஜி.பி டிராக்கில் சைக்கிள் ஓட்டினார் சன்னி! வெறும் 132 ரன்கள் மட்டும் எடுத்து 202 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது இந்தியா. கவாஸ்கரின் ஆட்டத்தைப் பொறுக்கமுடியாத இந்திய ரசிகர்கள் பலமுறை கோபத்தோடு மைதானத்துக்குள் நுழைந்தனர். 

``ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு ஏதுவாக இல்லை" என்று அவர் அப்போது காரணம் சொன்னாலும், அதற்குப் பல்வேறு காரணங்கள் இன்னும் சொல்லப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. இன்று வரை, கவாஸ்கரின் கிரிக்கெட் வாழ்வின் கருப்புப் புள்ளியாகவே பார்க்கப்படுகிறது இந்த ஆட்டம். இதில் கொடுமை என்னவென்றால், தான் சந்தித்த இரண்டாவது பந்திலேயே கீப்பரிடம் கேட்சாகியுள்ளார் கவாஸ்கர். ஆனால், பௌலர், கீப்பர் யாருமே பந்து பேட்டில் பட்டதை உணரவில்லை. யாரும் அப்பீல் செய்யாததால், கவாஸ்கர் அமைதியாக நின்றுவிட்டார். ``ஒருவேளை அப்போது யோசிக்காமல் நடையைக் கட்டியிருந்தால், இப்போது அதை நினைத்து நினைத்து வருந்தவேண்டிய அவசியம் இருந்திருக்காது" என்று பின்னாளில் அவரே புலம்பியிருக்கிறார். 

கவாஸ்கரின் மாரத்தானோடு தொடங்கிய உலகக் கோப்பை எனும் 100 மீட்டர் ரேஸ்! #WorldCupMemories

வெஸ்ட் இண்டீஸைக் காப்பாற்றிய கடைசி விக்கெட் பார்ட்னர்ஷிப்!

முதல் உலகக் கோப்பையில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வெஸ்ட் இண்டீஸ் கோப்பை வென்றிருந்தது. லீக் சுற்றில் ஆஸ்திரேலியாவை அசால்டாக வீழ்த்தியவர்கள், ஃபைனலில் கொஞ்சம் கஷ்டப்பட்டார்கள். அவ்வளவுதான். அரையிறுதியில் நியூசிலாந்தையெல்லாம் எளிதாக வீழ்த்தினார்கள். ஆனால், கிளைவ் லாய்ட், சர் விவியன் ரிச்சர்ட்ஸ், கார்டன் கிரீனிட்ஜ் போன்ற பேட்ஸ்மேன்கள் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் அந்த உலகக் கோப்பை, ஒரு கடைசி விக்கெட் பார்ட்னர்ஷிப்பால் காப்பாற்றப்பட்டது தெரியுமா?!

பாகிஸ்தான் அணியுடனான லீக் போட்டி. முதலில் பேட்டிங் செய்து, 7 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்தது பாகிஸ்தான். சர்ஃபராஸ் நவாஸ் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள், பெரிய இன்னிங்ஸ் ஆடமுடியாமல் அவுட்டாகிக்கொண்டிருந்தனர். ஐந்தாவது விக்கெட்டாக ரிச்சர்ட்ஸ் வெளியேறும்போது அணியின் ஸ்கோர் 99! கேப்டன் கிளைவ் லாய்ட் கொஞ்சம் போராட, கீப்பர் டெரிக் முர்ரே அவருக்குக் கைகொடுத்தார். ஆனால், மறுபடியும் விக்கெட்டுகள் வீழ, 9 விக்கெட்டுக்கு 203 ரன்கள் எனத் தோல்வியின் விளிம்பில் இருந்தது வெஸ்ட் இண்டீஸ்.

கவாஸ்கரின் மாரத்தானோடு தொடங்கிய உலகக் கோப்பை எனும் 100 மீட்டர் ரேஸ்! #WorldCupMemories

அப்போது முர்ரேவுடன் கைகோத்தார் மிரட்டல் பௌலர் ஆண்டி ராபர்ட்ஸ். இருவரும் கடைசி விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்க்க, 2 பந்துகள் மீதமிருக்கையில் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ். அந்தப் போட்டியில் தோற்றிருந்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி அரையிறுதிக்கே தகுதி பெற்றிருக்காது. ஏனெனில், 3 லீக் போட்டிகள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 12, ஆஸ்திரேலியா 8, பாகிஸ்தான் 4 புள்ளிகளுடன் முதல் 3 இடத்தில் இருந்தன. பாகிஸ்தான் அந்த ஆட்டத்தில் வென்றிருந்தால் 3 அணிகளும் 8 புள்ளிகள் பெற்றிருக்கும். ரன்ரேட்டில் அந்த 3 அணிகளிலும் குறைவான ரன்ரேட் கொண்டிருந்த வெஸ்ட் இண்டீஸ் வெளியேற நேர்ந்திருக்கும். உலகக் கோப்பையின் வரலாறு மாற்றி எழுதப்பட்டிருக்கும்! 

ஆஸ்திரேலியாவைக் காவு வாங்கிய ரன் அவுட்கள்!

இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 291 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 274 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அணியின் 10 விக்கெட்டுகளில் 5 விக்கெட்டுகள் ரன் அவுட்டால் வீழ்ந்தவை என்பதுதான் சோகம். அதுவும் பெரும்பாலான ரன் அவுட்கள், ஃபீல்டர்கள் மிஸ்ஃபீல்ட் செய்ததால், கூடுதல் ரன் எடுக்க ஆசைப்பட்டு ஓடியபோது அவுட் ஆனதாம்! ஆலன் டர்னர், சேப்பல் சகோதரர்கள் என முன்னணி வீரர்களெல்லாம் இப்படி வெளியேற ஆஸ்திரேலியா படைக்கவேண்டிய வரலாறு மாறிப்போனது. 

கவாஸ்கரின் மாரத்தானோடு தொடங்கிய உலகக் கோப்பை எனும் 100 மீட்டர் ரேஸ்! #WorldCupMemories

வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தானுக்கு எதிராகச் செய்ததுபோல், ஆஸ்திரேலியாவும் கடைசி விக்கெட்டைக் கொண்டு இந்தப் போட்டியில் வென்றிருக்கும். ஜெஃப் தாம்சன், டெனிஸ் லில்லி ஜோடி கடைசி விக்கெட்டு 41 ரன்கள் எடுத்திருக்க, தாம்சனும் ரன் அவுட்டால் வெளியேறி ஆஸ்திரேலிய இதயங்களை நொறுக்கினார். அதிரடி மன்னன் விவியன் ரிச்சர்ட்ஸ் இந்தப் போட்டியில் 3 ரன் அவுட்கள் செய்தார். 

இந்த உலகக் கோப்பையில் இந்தியா

ஏ பிரிவில் இடம்பெற்றிருந்த இந்திய அணியைத் தமிழக வீரர் எஸ்.வெங்கட்ராகவன் வழிநடத்தினார். முதல் போட்டியில் இங்கிலாந்திடம் 202 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற இந்தியா, அடுத்த ஆட்டத்தில் கிழக்கு ஆப்பிரிக்காவை 10 விக்கெட்டுகளில் வென்றது. கடைசி லீக் போட்டியில் நியூசிலாந்தை வென்றால் அரையிறுதி என்ற நிலையில், 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து வெளியேறியது. இந்திய அணி சார்பில் கவாஸ்கர் அதிகபட்சமாக 113 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சில், பிஷன் சிங் பேடி 14 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

கவாஸ்கரின் மாரத்தானோடு தொடங்கிய உலகக் கோப்பை எனும் 100 மீட்டர் ரேஸ்! #WorldCupMemories

உகாண்டா, டான்சானியா, ஜாம்பியா - இந்த நாடுகளும் உலகக் கோப்பை ஆடியிருக்கு! 

முதல் உலகக் கோப்பையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து என ஐ.சி.சி-யின் ஆறு முழு நேர உறுப்பினர் நாடுகள் பங்கேற்றன. மேலும் அசோசியேட் அணிகளான இலங்கை மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவுக்கு உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு அழைப்பு விடுத்தது ஐ.சி.சி. அந்தத் தொடரில் ஆடிய கிழக்கு ஆப்பிரிக்க அணி கென்யா, டான்சானியா, ஜாம்பியா நாடுகளை உள்ளடக்கியது. கென்யாவைச் சேர்ந்த ஹரிலால் ஷா, அந்த அணியின் கேப்டனாக இருந்தார்.

முதல் உலகக் கோப்பையில் விளையாடிய அந்த அணி, 1979, 1982, 1986 ஆண்டுகளில் நடந்த ஐ.சி.சி டிராபி தொடரில் விளையாடின. 1981-ம் ஆண்டு கென்யா தனி அணியாக ஐ.சி.சி-யில் இணைந்தது. 1989-ல் மலாவி இணைந்ததால், அந்த அணி கிழக்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்கா என்ற பெயரில் விளையாடியது.