Published:Updated:

வாஜ்பாய் செம... மம்தா ஓகே... மோடி மோசம்... அஃப்ரிடியின் அரசியல் சிக்ஸர்ஸ் #GameChanger

வாஜ்பாய் செம... மம்தா ஓகே... மோடி மோசம்... அஃப்ரிடியின் அரசியல் சிக்ஸர்ஸ் #GameChanger

"இரு நாடுகளுக்கும் இன்னமும் ஒற்றுமையாய் இருக்கும் ஒரு விஷயம் என்பது கிரிக்கெட்தான். இரு நாடுகளுக்கான தூதுவன் கிரிக்கெட்தான். கடந்த காலத்தில் அது உதவியிருக்கிறது. அவ்வளவு வீரியம் மிகுந்த ஒரு பொக்கிஷத்தை ஏன் சீரழிக்கிறீர்கள் என்று கேட்பேன்."

வாஜ்பாய் செம... மம்தா ஓகே... மோடி மோசம்... அஃப்ரிடியின் அரசியல் சிக்ஸர்ஸ் #GameChanger

"இரு நாடுகளுக்கும் இன்னமும் ஒற்றுமையாய் இருக்கும் ஒரு விஷயம் என்பது கிரிக்கெட்தான். இரு நாடுகளுக்கான தூதுவன் கிரிக்கெட்தான். கடந்த காலத்தில் அது உதவியிருக்கிறது. அவ்வளவு வீரியம் மிகுந்த ஒரு பொக்கிஷத்தை ஏன் சீரழிக்கிறீர்கள் என்று கேட்பேன்."

Published:Updated:
வாஜ்பாய் செம... மம்தா ஓகே... மோடி மோசம்... அஃப்ரிடியின் அரசியல் சிக்ஸர்ஸ் #GameChanger

பாகிஸ்தான் முன்னாள் வீரர் அஃப்ரிடியின் `கேம் சேஞ்சர்’ புத்தகம் வெளிவந்ததிலிருந்தே ஓராயிரம் சர்ச்சைகள். அணியில் விளையாடும்போதுதான், ஓய்வுக்கே ஓய்வுகொடுக்கும் அளவுக்கு ஓய்வு அறிவிப்புகளைக் கொடுத்துக் கடுப்பேற்றிக்கொண்டிருந்தார். புத்தகத்தில் அதையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட்டார். பிறந்த ஆண்டை மாற்றி எழுதியதிலிருந்து எல்லாமே அடேங்கப்பா சர்ச்சைகள்தான். #GameChanger. மேலும், புத்தகத்தில் மிகவும் தர்க்கபூர்வமாக சில விஷயங்களையும் அணுகியிருக்கிறார். சச்சின், அஃப்ரிடி இருவரது ஜெர்ஸி எண்ணும் `10' என்பது ஒரு சுவாரஸ்ய முரண். இந்தியா-பாகிஸ்தானின் கிரிக்கெட் குறித்த தற்போதைய நிலை, அவரை உண்மையில் வருத்தமடையச் செய்கிறது.

அஃப்ரிடியின் கருத்தைத் தெரிந்துகொள்ளும் முன்னர் ஒரு சின்ன ஃபிளாஷ்பேக்

ஜூன் 16-ம் தேதி, இந்தியா-பாகிஸ்தானை உலகக்கோப்பையில் எதிர்கொள்ள இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாஜ்பாய் செம... மம்தா ஓகே... மோடி மோசம்... அஃப்ரிடியின் அரசியல் சிக்ஸர்ஸ் #GameChanger

`இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள், ஏன் போருக்கும் நிகரான பதற்றம்கொள்ளச் செய்கின்றன? ஏன் பாகிஸ்தானிடம் தோற்பதை இந்தியாவும், இந்தியாவிடம் தோற்பதை பாகிஸ்தானும் பூதாகரமாக்குகிறது?' எனச் சில கேள்விகள், சமயங்களில் நமக்குள் எழலாம். ஒரு விளையாட்டை நாம் என்றுமே விளையாட்டாய்ப் பார்த்ததில்லை. அது ஒரு எமோஷன். அது பாகிஸ்தானுடனான போட்டி எனும்போது பன்மடங்காகிறது. 400 ஆண்டுக்காலம் அடிமைபட்டுக் கிடந்த இங்கிலாந்தை வெல்லும்போது வராத ஒரு மகிழ்ச்சி, ஏன் 75 ஆண்டுகளுக்கு முன்னர் உடனிருந்த ஒரு மக்களை வெல்லும்போது வருகிறது?

இங்கு ஒரு விளையாட்டை எப்படி ஒரு பிராண்டாகக் கட்டமைக்கிறார்கள் என்பதையும் ஆராயவேண்டியிருக்கிறது. `மௌக்கா மௌக்கா’ என்பது, வெறும் `மௌக்கா மௌக்கா’ அல்ல. சயித் அன்வர் சென்னையில் 194 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்தபோது, அந்தப் போட்டியில் சயித் அன்வருக்கு பை ரன்னராக இருக்கிறார் அஃப்ரிடி. இந்தியா-பாகிஸ்தான் சச்சரவுகளையெல்லாம் கடந்து, சென்னையின் 50,000 ரசிகர்களும் எழுந்து நின்று சயித் அன்வருக்கு வாழ்த்து தெரிவிக்கிறார்கள். அதுதான் இந்தியா... இந்தியர்கள்! ஆனால், இப்போதைய அரசியல் சூழல் நம்மை எந்த அளவுக்கு மாற்றியிருக்கிறது என்பதை இங்குக் கருத்தில்கொள்ள வேண்டும்.

வாஜ்பாய் செம... மம்தா ஓகே... மோடி மோசம்... அஃப்ரிடியின் அரசியல் சிக்ஸர்ஸ் #GameChanger

1990-களின் இறுதியில்தான் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுத சோதனைகளில் தொடர்ச்சியாக ஈடுபடுகிறார்கள். அப்போதும் இந்தியாவும் பாகிஸ்தானும் கிரிக்கெட் ஆடிகொண்டுதான் இருந்தார்கள். அதில் எந்தப் பிரச்னையும் இருந்ததில்லை.

2000-ம் ஆண்டு தாக்காவில் ஆசிய அணியும், Rest of world அணிகளும் மோதிக்கொண்டன. சச்சின், கங்குலி, அஜய் ஜடேஜாவுடன் மொயீன் கான், வாசிம் அக்ரம், அப்துல் ரசாக் விளையாடுகிறார்கள். அணியின் கேப்டன் வாசிம் அக்ரம். அப்போதும் பாகிஸ்தானின் கொள்கைகள் நமக்கு எதிரானதுதான். இங்கு அந்த அரசின் செயல்பாடுகள்தான் எதிரியே தவிர, அங்கு இருக்கும் மக்கள் அல்ல.

2005-ம் ஆண்டு மெல்போர்னில் நடைபெற்ற போட்டிக்கு, கங்குலி கேப்டன். சேவாக், டிராவிட், அணில் கும்ப்ளேவுடன், அப்துல் ரஸாக்கும், மொஹமது யூசுஃபும் ஆடவே செய்கிறார்கள். ஐபிஎல்-லின் ஆரம்பக்கால சீஸன்களில்கூட சோயப் மாலிக், அக்தர், அஃப்ரிடி போன்ற வீரர்கள் விளையாடி இருக்கிறார்கள்.

புல்வாமா தாக்குதலுக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கும் என்ன சம்பந்தம் இருக்கும் என யாராலும் யூகிக்க முடியாது. ஆனால், இந்திய அணியின் தலைசிறந்த வீரர்கள் சிலரின் கருத்துகள் இவ்வாறாக வந்து விழுகின்றன.

கோலி : இந்திய அரசும் கிரிக்கெட் போர்டும் என்ன சொல்கின்றனவோ அதைச் செய்ய, தயாராக இருக்கிறோம்.

கங்குலி : புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுடனான எந்தத் தொடருக்கும் இனி வாய்ப்பில்லை.

சச்சின் : உலகக்கோப்பையில் இந்தியா, பாகிஸ்தானை எப்போதுமே வீழ்த்தியிருக்கிறது. இரண்டு புள்ளிகள் இலவசமாகக் கொடுத்து, அவர்களுக்கு உதவ விரும்பவில்லை. எனினும், இந்திய அரசின் முடிவுக்குக் கட்டுப்படுகிறேன்.

வாஜ்பாய் செம... மம்தா ஓகே... மோடி மோசம்... அஃப்ரிடியின் அரசியல் சிக்ஸர்ஸ் #GameChanger

இதில் சச்சின் பதிலில் மட்டும்தான் கிரிக்கெட் பற்றிய நேசிப்பு சற்றேனும் இருக்கிறது. பாகிஸ்தானில் இருக்கும் பயங்கரவாதம்தான் நமக்கு எதிரி. அதற்கு ஏன் பாகிஸ்தானை எதிர்க்க வேண்டும்? சரி, பயங்கரவாத நாடுகளை நாம் சேர்க்க மாட்டோம் என்பது நம் கருத்தாயின், நாம் ஏன் ஆப்கானிஸ்தானுக்கு அத்தனை வாய்ப்புகள் வழங்குகிறோம்? இந்தியாவில் ஆப்கானிஸ்தானுக்கு கிரிக்கெட் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தியாவில் ஆப்கான் அதன் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடுகிறது. ஆப்கானிஸ்தான் தோற்றாலும், அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொள்கிறோம். இந்த மாதம் ஆரம்பிக்க இருக்கும் உலகக்கோப்பையில் இந்திய நிறுவனமான அமுல்தான் ஆப்கானிஸ்தான் அணியின் அதிகாரபூர்வ ஸ்பான்ஸர். அரசியலுக்குள் செல்லாமல், கிரிக்கெட்டைப் பற்றி மட்டும் பேசுவோம்.

வாஜ்பாய் செம... மம்தா ஓகே... மோடி மோசம்... அஃப்ரிடியின் அரசியல் சிக்ஸர்ஸ் #GameChanger

இந்தியாவில் இருக்கும் அரசியல் குறித்தும், பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவில் நடத்தப்படுவது குறித்தும் `கேம் சேஞ்சர்’ புத்தகத்தில் பேசியிருக்கிறார் அஃப்ரிடி. ``முன்பெல்லாம் நாங்கள் இந்தியா வந்தால் பால் தாக்கரேவின் சிவ சேனா மட்டுமே எங்களை அச்சுறுத்தும். அதை ஆளுங்கட்சி பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால், தற்போது பிரதமர் மோடியின் கீழ் இயங்கும் பா.ஜ.க அரசு, அதன் இந்துத்வ அரசியலை, தொடர்ந்து பாகிஸ்தான் மீதும், பாகிஸ்தான் கிரிக்கெட் குழுவினர் மீதும் பாய்ச்சுகிறது. அது எங்களைக் காயப்படுத்துகிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சோஷியல் மீடியா, அரசியல் தலைவர்கள் என எல்லோரிடத்திலும் இது பரவியிருக்கிறது. அது ஒரு கட்டமைக்கப்பட்ட தாக்குதலாகவே இருக்கிறது.

இந்தியர்கள் எப்போதும் அருமையானவர்கள். இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கான பிரச்னையால், நாம் நண்பர்களாக இருக்க முடியாது என்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், ஓர் அண்டை வீட்டுக்காரராகவாவது இருக்க முடியும் என நம்புகிறேன். பாகிஸ்தானிலும் ஓராயிரம் பிரச்னைகள் இருக்கின்றன, மறுப்பதற்கில்லை. ஆனால், பாகிஸ்தான் அரசியல்வாதிகள் இந்தியாவை ஓராயிரம் துண்டுகளாக்குவேன் என எங்கும் பேசுவதில்லை. ஆனால், மோடி தொடர்ந்து `பாகிஸ்தானுக்குப் பாடம் புகட்டுவேன்' என்கிறார். பசுவைக் காரணம் காட்டி மனிதர்களைக் கொல்கிறார்கள். போலி மதச் சாயம் பூசும் `பாஜிராவ் மஸ்தானி', `பத்மாவத்' போன்று படங்களின் மூலம் தொடர்ந்து அரசியல் செய்கிறார்கள்.

வாஜ்பாய் செம... மம்தா ஓகே... மோடி மோசம்... அஃப்ரிடியின் அரசியல் சிக்ஸர்ஸ் #GameChanger

ஒரு பாகிஸ்தானிய கிரிக்கெட்டராக இந்தியாவைப் பற்றி நான் பேசியாக வேண்டும். பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியர்களின் வன்மம் பன்மடங்கு பெருகியிருக்கிறது. முன்னர் எப்போதும் இல்லாத அளவுக்குப் பெருகியிருக்கிறது. இப்போதைய சூழலோடு ஒப்பிடும்போது அடல் பிஹாரி வாஜ்பாயின் காலம் ஒரு பொற்காலம். (வாஜ்பாயை `ஷாஹிப்' என்றே அழைக்கிறார் அஃப்ரிடி). அதுவும் பாஜக ஆட்சிதான். இந்தியாவின் அரசியல் ஜனநாயகம் என்பதை மடைமாற்றி பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை ருசிபார்க்க ஆரம்பித்திருக்கிறது.

நான் பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தால், இதை நிச்சயம் செய்திருப்பேன். இந்தியாவுக்குச் சென்று தேசிய ஊடகங்களை அமைதியாக இருக்கச் சொல்வேன். கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என்று சொல்வேன். தேசிய ஊடகங்கள் பொய் சொல்கின்றன; பெரிதுபடுத்துகின்றன; வன்மம் கக்குகின்றன. அது கிரிக்கெட்டைப் பாழாக்குகிறது. இரு நாடுகளுக்கும் இன்னமும் ஒற்றுமையாய் இருக்கும் ஒரு விஷயம் என்பது கிரிக்கெட்தான். இரு நாடுகளுக்கான தூதுவன் கிரிக்கெட்தான். கடந்த காலத்தில் அது உதவியிருக்கிறது. அவ்வளவு வீரியம் மிகுந்த ஒரு பொக்கிஷத்தை ஏன் சீரழிக்கிறீர்கள் என்று கேட்பேன்.

ஒற்றர்கள் உளவு பார்க்கட்டும், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தட்டும்; இன்னும் ஆயிரம் முறையில் இரு நாடுகளையும் பிளவுபடுத்த அவர்கள் போராடட்டும். ஆனால், ஒற்றை பின் சாளரத்தை நாம் திறந்து வைக்க வேண்டுமே. அந்தச் சாளரம் கிரிக்கெட் என்பேன்.

வாஜ்பாய் செம... மம்தா ஓகே... மோடி மோசம்... அஃப்ரிடியின் அரசியல் சிக்ஸர்ஸ் #GameChanger

`பாகிஸ்தான் ரசிகர்களைவிடவும், இந்திய ரசிகர்கள் எங்கள் மீது அதிக அன்பு செலுத்துகிறார்கள்' என நான் பேசியதை எப்படியெல்லாம் திரிக்க முடியுமோ திரித்துப் பெரிதாக்கினார்கள். இந்திய தேசிய ஊடகங்கள், நான் பாகிஸ்தானை வெறுப்பதாகவும், இந்தியாவை நேசிப்பதாகவும் திருத்தி எழுதினார்கள். இரு நாட்டுக்குமான தூதுவனாக நான் பேசிய ஒன்றுக்கு, மசாலா சாயம் பூசி அதில் ரேட்டிங் பெற்று என்ன சாதிக்கப்போகிறார்கள்?

நான் சொன்னதை வரவேற்றுப் பேசிய ஒரே நபர் மம்தா பேனர்ஜி மட்டுமே. நான் சொன்னதைப் புரிந்துகொண்டு எனக்கு நன்றி தெரிவித்தார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமான ஒற்றுமையை விளையாட்டுகள் மூலம் மட்டுமே பெற முடியும். பாகிஸ்தானில் இருக்கும் பல அரசியல் தலைவர்களிடம் நான் இதைப் பேசி இருக்கிறேன். ஆனால், இந்தியாவின் தலைமை தற்போது சரியாக இல்லாதபோது, யார் என்ன செய்ய முடியும்?

வாஜ்பாய் செம... மம்தா ஓகே... மோடி மோசம்... அஃப்ரிடியின் அரசியல் சிக்ஸர்ஸ் #GameChanger

வாஜ்பாய் அன்பான, தீர்க்கமாக முடிவெடுக்கக்கூடிய தலைவர். எங்களுடன் பேசியிருக்கிறார். பாகிஸ்தான் பற்றி பாகிஸ்தானியர்கள் பற்றி அவ்வளவு ஆர்வமாக எங்களிடம் கேட்டறிவார். மன்மோகன் சிங் அமைதியானவர். வாஜ்பாயைப்போல் நல்லவர். மோடியை நான் சந்தித்ததாக நினைவில்லை. எனவே, அவரைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் இருப்பதே நல்லது என நினைக்கிறேன்.

இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மை மக்கள் நல்லவர்கள். பாலிவுட்டில் இருக்கும் ஷாரூக், அமீர் உட்பட பலரும் அவ்வளவு எளிமையாகப் பழகுகிறார்கள். இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாடாமல் இருப்பது அவர்களுக்கு வருத்தமே. அவர்களுக்கு இரு நாட்டின் மக்களும் வருங்காலமும் முக்கியம். தேசிய ஊடகங்களும் சில அரசியல்வாதிகளும் மட்டுமே இதை வைத்து ஆதாயம் தேடுகிறார்கள்.

அரசியல்வாதிகளை விட்டுவிடலாம். அது அவர்களது வேலை. இந்திய ஊடகங்களைப்போலவே பாகிஸ்தான் ஊடகங்களிலும் பிரச்னை இல்லாமல் இல்லை. ஆனால், இந்தியாவின் தேசியச் செய்தி சேனல்கள் சினிமா நிகழ்ச்சிகளைப்போல மாறிவிட்டன. அவர்கள் நடிக்கிறார்கள்; அதீதமாக நடிக்கிறார்கள்; மிக அதிகமாகப் பொய் சொல்கிறார்கள். தொலைக்காட்சிகளின் ப்ரைம் டைமில் நடக்கும் நிகழ்ச்சிகள் ஏதோ ஸ்க்ரிப்ட்போல் இருக்கிறது. செய்திகளை பிரேக் செய்வதற்குப் பதில் தேசத்தை உடைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

வாஜ்பாய் செம... மம்தா ஓகே... மோடி மோசம்... அஃப்ரிடியின் அரசியல் சிக்ஸர்ஸ் #GameChanger

இந்தியாவும் பாகிஸ்தானும் கிரிக்கெட் விளையாடாமல் இருக்க வேண்டும் என இந்திய அரசாங்கத்தைத் தடுப்பது எது? ஆஷஸ் தொடரை விடவும் பெரிய போட்டியாக அது இருக்கும். தொலைக்காட்சி நிறுவனங்கள் ஸ்பான்சர்கள் என எல்லோருக்குமே அது நன்மை பயக்கும். ஆனாலும், அதற்கு தடை போடுகிறார்கள். அதை வைத்து அரசியல் செய்து சுகம் காண்கிறார்கள். முன்பு சிவ சேனா `பாகிஸ்தான் விளையாடும் போட்டியின்போது பாம்புகளை மைதானத்துக்குள் விடுவோம்’ என அச்சுறுத்தியது. பாம்புக்குக் காவலர்கள் போடப்பட்ட வரலாறும் உண்டு!

இந்திய வீரர்களும் சிலர் மாறிவிட்டார்கள். விரேந்திர சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான கருத்துகளைத்தான் பதிவிடுகிறார். பாகிஸ்தானில் இருக்கும் அவரின் ரசிகர்கள் இதை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பதை அவர் என்றேனும் சிந்தித்துப் பார்க்கட்டும். கோலி மிகச் சிறந்த வீரர். ஆனால், புல்வாமா தாக்குதல்களுக்குப் பிறகு அவர் தெரிவிக்கும் கருத்துகளை எல்லாம் எப்படி எடுத்துக்கொள்வது எனத் தெரியவில்லை. நாம் அரசியல்வாதிகள் அல்ல, தூதுவர்கள். கோலி, சேவாக் போன்றோருக்கு அது என்றும் புரியப்போவதுமில்லை. அசாருதீன் காலத்தில் நாங்கள் இந்திய அணியை ஒட்டுமொத்தமாக இரவு விருந்துக்கு அழைத்திருந்தோம். நாங்கள் ஒன்றாக பார்ட்டிகளுக்குச் சென்றிருக்கிறோம்.

கோலி, யுவி, ஜாஹிர், ஹர்பஜன் எனப் பலருடன் போட்டிகள் முடிந்ததும் வெளியே சென்றிருக்கிறோம். ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகள் அப்படியில்லை.

வாஜ்பாய் செம... மம்தா ஓகே... மோடி மோசம்... அஃப்ரிடியின் அரசியல் சிக்ஸர்ஸ் #GameChanger

Credits :OutlookIndia

நான் பந்து வீச அச்சம்கொள்ளும் சிறப்பான அதிரடியான அணி எப்போதும் இந்தியாதான். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமான கிரிக்கெட் எப்போதும் உச்சத்தில் இருக்கும். ஆனால், இரு நாட்டு கிரிக்கெட்டர்களும் இந்த விளையாட்டுக்கு மட்டுமான தூதுவர்கள் அல்ல; இந்த இரண்டு தேசத்துக்குமான தூதுவர்கள். அதை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்" என்கிறார் அஃப்ரிடி.

அஃப்ரிடி எல்லாம் நம்மைக் குறை சொல்கிறார் என்கிற எண்ணம் மேலோங்குகிறது. ஆனால், அஃப்ரிடியே நம்மைப் பார்த்து குறை சொல்லும் அளவுக்கு நமது நிலை இருக்கிறதா என்பதையும் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டியதிருக்கிறது.

மீண்டும் சொல்கிறேன்.

ஜூன் 16-ம் தேதி, இந்தியா-பாகிஸ்தானை உலகக்கோப்பையில் எதிர்கொள்ள இருக்கிறது.

அஃப்ரிடியின் கருத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? இந்தியா, உலகக்கோப்பையில் பாகிஸ்தானுடன் விளையாடுவதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism