Published:Updated:

``உலகக் கோப்பை தொடரில் இந்தியா இவரை மிஸ் செய்யும்!” - சவுரவ் கங்குலி

``உலகக் கோப்பை தொடரில் இந்தியா இவரை மிஸ் செய்யும்!” - சவுரவ் கங்குலி
``உலகக் கோப்பை தொடரில் இந்தியா இவரை மிஸ் செய்யும்!” - சவுரவ் கங்குலி

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, சமீபத்தில் முடிவுற்ற ஐபிஎல் தொடரில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஆலோசகராகச் செயல்பட்டார். அவரது ஆலோசனையிலும் பான்டிங்கின் பயிற்சியிலும் டெல்லி இளம் வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர். ஐபிஎல் வரலாற்றில், டெல்லி அணி முதல் முறையாக இந்த முறை ப்ளே ஆஃப் சுற்றில் வெற்றிபெற்றிருந்தது. சென்னை அணிக்கு எதிரான போட்டிகள் தவிர்த்து, மற்ற போட்டிகளில் டெல்லி அணி சிறப்பாக விளையாடியது. 

``உலகக் கோப்பை தொடரில் இந்தியா இவரை மிஸ் செய்யும்!” - சவுரவ் கங்குலி

டெல்லி அணியில் விளையாடிவரும் ரிஷப் பன்ட், இந்தத் தொடரில் டெல்லி அணியின் சில முக்கியமான போட்டிகளில் வெற்றிக்குக் காரணமாக இருந்தார். அவர், உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வாகாததுகுறித்துப் பலரும் பல்வேறு விதமான கருத்தைத் தெரிவித்துவந்தனர். குறிப்பாக, கங்குலி மற்றும் பாண்டிங் ஆகியோர் இந்திய அணி பன்ட்டைத் தேர்வுசெய்யாமல் தவறு செய்துவிட்டதாக, தொடர் நடைபெற்றுவரும்போதே தெரிவித்துவந்தனர். 

``உலகக் கோப்பை தொடரில் இந்தியா இவரை மிஸ் செய்யும்!” - சவுரவ் கங்குலி

இந்நிலையில், நேற்று கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த கங்குலி,  ``இந்தியா உலகக் கோப்பை தொடரில் ரிஷப் பன்ட்டை மிஸ் செய்யும். எந்த இடத்தில் மிஸ் செய்யும் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால், அவரை  இந்தியா மிஸ் செய்யும் என்பதை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்” என்றார். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய கேதர் ஜாதவ், காயம் காரணமாக தொடரின் பாதியில் விலகினார். இவர், உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பிடித்துள்ளார். மே 30 -ம் தேதி தொடங்க இருக்கும் உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக, அவர் மீண்டு வருவாரா என்பதுகுறித்தும் இன்னும் எந்தத் தகவலும் வெளியாகவில்லை. 

``உலகக் கோப்பை தொடரில் இந்தியா இவரை மிஸ் செய்யும்!” - சவுரவ் கங்குலி

இந்நிலையில், காயமடைந்துள்ள கேதர் ஜாதவ்வுக்குப் பதிலாக,  பன்ட் தேர்வுசெய்யப்படுவாரா என்று கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த கங்குலி,  ``கேதர் ஜாதவ்வுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. அவர் தகுதி பெறுவாரா என்பதுகுறித்து இன்னும் உறுதியான தகவல் எதுவும்  வெளியாகவில்லை. அதனால், இப்போது அதுகுறித்து எதுவும் கூற முடியாது. கேதர் மீண்டு வருவார் என நம்புகிறேன்” என்றார். 

``உலகக் கோப்பை தொடரில் இந்தியா இவரை மிஸ் செய்யும்!” - சவுரவ் கங்குலி

நடந்து முடிந்த ஐபிஎல் தொடர்பாகப் பேசிய அவர்,  ``இந்த ஐபிஎல் தொடரில், டெல்லி  ஓர் அணியாக சிறப்பாக விளையாடினோம். ஆனாலும், சிறந்த மற்ற இரு அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிட்டன. ஐபிஎல்-லின் சிறந்த இரு கேப்டன்கள் இறுதிப் போட்டியில் மோதிக்கொண்டனர். அதில் ஒருவர் வெற்றிபெற்றார். சென்னை மற்றும் மும்பை ஆகிய அணிகள் உண்மையில் சிறப்பான அணிகள்.  அழுத்தம் நிறைந்த போட்டிகளிலிருந்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்ள முடியும்” என்றார். 

உலகக் கோப்பை தொடரில், இந்திய அணி ரிஷப் பன்ட்டை மிஸ் செய்யுமா... உங்கள் பதிலை கமென்ட்டில் பதிவுசெய்யுங்கள்!
 

Vikatan