Published:Updated:

இது வெற்றிகரமான தோல்வி... அடுத்தமுறை இன்னும் பெரிய விசில் அடிப்போம்! #MIvsCSK

இது வெற்றிகரமான தோல்வி... அடுத்தமுறை இன்னும் பெரிய விசில் அடிப்போம்! #MIvsCSK

கடைசி 2 பந்து, 4 ரன்கள் என்ற நிலை. முதல் பந்தில் டபுள்ஸ் எடுத்தார் ஷ்ரதுல் தாக்கூர். கடைசிப் பந்து, சிங்கிள் எடுத்தால் சூப்பர் ஓவர். டபுள்ஸ் எடுத்தால் வெற்றி! மைதானம் பிரார்த்தனைக் கூடமானது.

இது வெற்றிகரமான தோல்வி... அடுத்தமுறை இன்னும் பெரிய விசில் அடிப்போம்! #MIvsCSK

கடைசி 2 பந்து, 4 ரன்கள் என்ற நிலை. முதல் பந்தில் டபுள்ஸ் எடுத்தார் ஷ்ரதுல் தாக்கூர். கடைசிப் பந்து, சிங்கிள் எடுத்தால் சூப்பர் ஓவர். டபுள்ஸ் எடுத்தால் வெற்றி! மைதானம் பிரார்த்தனைக் கூடமானது.

Published:Updated:
இது வெற்றிகரமான தோல்வி... அடுத்தமுறை இன்னும் பெரிய விசில் அடிப்போம்! #MIvsCSK

சென்னை வெர்சஸ் மும்பை மேட்ச், பார்க்கவே இதயம் படபடக்கும். இதில் ஃபைனல் வேறு, இதயத்தோடு சேர்ந்து ஈரல், மாங்கா, குடல், கிட்னி எல்லாம் கிடுகிடுத்தன. இந்த சீஸனில் மட்டும் மும்பையிடம் மூன்றுமுறை மூச்சுக்குத்து வாங்கியிருக்கிறது சென்னை அணி. அதை மொத்தமாகத் திருப்பித் தர, சிரித்த முகத்தோடு ஹைதராபாத் வந்திறங்கியது. ``ஊருக்கு வேணா நீ தீப்பொறித் திருமுகமா இருக்கலாம். எனக்கு நீ ரத்தத் திருமுகம்தான்" என சென்னையைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தது மும்பை அணி. இரு அணியின் ரசிகர்களோ, சமூக வலைதளங்களைக் கலவர பூமியாக்கினர். அதில் காற்று வாங்க வந்த ஆர்.சி.பி ரசிகர்களை இடையில் இழுத்துப்போட்டுக் கும்மிக்கொண்டிருந்தனர். இப்படிப் பல அமளிதுமளிகளுக்கு நடுவே, ஒரு கையில் ரிமோட்டும் இன்னொரு கையில் பிபி மாத்திரையுமாக மேட்ச் பார்க்க அமர்ந்தான் அந்த ஏழை ஐ.பி.எல் ரசிகன். பிழைக்கத்தெரிஞ்ச புள்ள!

இது வெற்றிகரமான தோல்வி... அடுத்தமுறை இன்னும் பெரிய விசில் அடிப்போம்! #MIvsCSK

சென்னை அணியில் யாருக்கும் காய்ச்சல், கக்குவான் இருமல் ஏதும் வராததால், வழக்கம்போல் அதே லெவன்ஸோடு களமிறங்கியது சூப்பர் கிங்ஸ். மும்பை அணியில் ஜெயந்த் யாதவுக்குப் பதிலாக மெக்லனகன் சேர்க்கப்பட்டார். நைஸ் மூவ் நண்பா! டாஸ் வென்ற மும்பை அணி, பேட்டிங்கைத் தேர்வுசெய்தது. பால்பாயசம் கிண்டுவதற்கு சாமான் வாங்க கடைக்குப் புறப்பட்டார் மாலதி சஹார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வழக்கம்போல் `மீசை வைத்த அமுல்பேபி' குயின்டன் டி காக்கும் `தாடி வைத்த மிர்ச்சி சிவா' ரோகித்தும் மும்பையின் இன்னிங்ஸை ஓப்பன் செய்ய, ஆட்டத்தின் முதல் ஓவரை வீச வந்தார் `டாட் பால் பிஸ்தா' தீபக் சஹார். முதல் ஓவரில் வெறும் இரண்டு ரன்கள் மட்டுமே மும்பைக்குக் கிடைத்தன. ``என் மானம் போச்சு, மரியாதைப் போச்சு" என அலற ஆரம்பித்தார்கள் மும்பை ரசிகர்கள். இரண்டாவது ஓவரை வீச வந்தார் தானைத்தலைவன் தாக்கூர். ஓவரின் 5-வது பந்தில் டீப் ஸ்கொயர் திசையில் ஒரு சிக்ஸரை விளாசினார் ரோகித். அவரின் ஃபேவரைட் ஷாட்டான புல் ஷாட்! தாக்கூரைத் தட்டிக்கொடுத்துவிட்டு, மூன்றாவது ஓவரை வீச வந்தார் தீபக் சஹார். முதல் பந்தையே மிட் விக்கெட் திசையில் `மடாரெ'ன ஒரு சிக்ஸர் அடித்தார் குயின்டன் டி காக். மூன்றாவது பந்தில் எக்ஸ்ட்ரா கவர் திசையில் இன்னொரு சிக்ஸர். அப்படியே, ஐந்தாவது பந்தையும் மிட் ஆஃப் திசையில் சிக்ஸருக்கு விளாசிவிட்டு, சஹாருக்கு பஸ் காசு கொடுத்து அனுப்பிவைத்தார் டி காக். 

இது வெற்றிகரமான தோல்வி... அடுத்தமுறை இன்னும் பெரிய விசில் அடிப்போம்! #MIvsCSK

நான்காவது ஓவரை வீச வந்தார் பஜன் சிங்! ``நீர் முதுகில் குத்தியதோ மூன்றுமுறை. மும்பையே, இது எங்கள் முறை" என முணுமுணுத்துக்கொண்டே அவர்  வீசிய கடைசிப் பந்தை ஸ்வீப் ஆடி, ஷார்ட் ஃபைன் திசை பவுண்டரிக்கு அனுப்பிவைத்தார் ரோகித் சர்மா. மீண்டும் வந்தார், மீண்டு வந்தார் தானைத்தலைவன் தாக்கூர்! ஓவரின் நான்காவது பந்தை சிக்ஸருக்குப் பறக்கவிட்ட டி காக்கை, ஐந்தாவது பந்தில் பெவிலியனுக்கு பார்சல் கட்டினார் தாக்கூர். விக்கெட் எடுத்த சந்தோஷத்தில், டி காக்கிடம் ஒற்றைவிரலைக் காட்டி ``நிக்கல் நிக்கல் சல்தேரே..." என தாக்கூர் வெறியாக, அதைப் பார்த்து ரோகித் கொலைவெறியாக, ஆட்டம் மெல்ல சூடுபிடிக்கத் தொடங்கியது. சாஹர் வீசிய அடுத்த ஓவரிலேயே அவுட்டானார் ரோகித். ``போடு தகிடத்தகிட" என இறங்கிக் குத்தினார்கள் சென்னை ரசிகர்கள். பவர் ப்ளேவின் கடைசி ஓவர், விக்கெட் மெய்டனானது.

இது வெற்றிகரமான தோல்வி... அடுத்தமுறை இன்னும் பெரிய விசில் அடிப்போம்! #MIvsCSK

ஓப்பனர்கள் ரோகித்தும் டி காக்கும் சீக்கிரமே கிளம்பிவிட, மும்பையின் வேகம் மந்தமானது. மூன்று ஓவர் கழித்து, பிராவோ வீசிய பத்தாவது ஓவரில்தான் இரண்டு பவுண்டரிகள் கிடைத்தன. மிட் ஆன் மற்றும் பிஹைண்டு ஸ்கொயர் திசைகளில் இரண்டு பவுண்டரிகளை விளாசினார் `காந்தக் கண்ணழகன்' இஷான் கிஷன். ஹர்பஜன் வீசிய அடுத்த ஓவரில், கிஷனுக்கு ஒரு பவுண்டரியும் சூர்யகுமார் யாதவுக்கு ஒரு பவுண்டரியும் கிடைத்தது. ``நேரம் வந்துடுச்சு" என, தாஹிரைத் திறந்துவிட்டார் தோனி. ஓவரின் இரண்டாவது பந்திலேயே சூர்யகுமாரின் விக்கெட்டைக் கழற்றிவிட்டு, NSS-ல் பனிஷ்மென்ட் வாங்கிய ஸ்டூடன்ட் கணக்காக கிரவுண்டை ரவுண்டடித்துக்கொண்டிருந்தார். தானைத்தலைவன் தாக்கூர், மீண்டும் வந்தார். குர்னாலின் விக்கெட்டைக் கழட்டிவிட்டு மும்பைக்குப் புளிப்புக்காட்டினார்! செம கேட்ச் ஷ்ரதுல். மும்பை ரசிகர்களின் முகத்தில், மரண பீதி குடிகொண்டிருந்தது. 

இது வெற்றிகரமான தோல்வி... அடுத்தமுறை இன்னும் பெரிய விசில் அடிப்போம்! #MIvsCSK

தாஹிர் வீசிய 15-வது ஓவரில் பொல்லார்ட் ஒரேயொரு சிக்ஸரை அடிக்க, அதே ஓவரில் இஷான் கிஷன் விக்கெட்டைக் கழட்டிவிட்டு முந்தைய ரவுண்டுக்கு எதிர்த்திசையில் ஒரு ரவுண்டடித்துவிட்டு வந்தார் தாஹிர். அவர் ஆடிய ஆட்டத்துக்கும் ஓடிய ஓட்டத்துக்கும் பலனாக பர்ப்பிள் கேப் கிடைத்தது. சென்னை ரசிகர்கள் இதைப் பெருமையாகச் சொல்லிக்கொள்ளலாம். பிறகு, ஜடேஜா ஓவரில் ஒரு பவுண்டரியும், தாஹிர் ஓவரில் மீண்டும் ஒரு சிக்ஸரும் அடித்தார் பொல்லார்ட். தலைவன் தாக்கூர் வீசிய 18-வது ஓவரில், `நவீன ஹெலிகாப்டர்' ஹர்திக் பாண்டியா கொடுத்த கேட்ச் வாய்ப்பைக் கோட்டைவிட்டார் `சின்னதல' ரெய்னா! ``சின்ன தல, என்ன தல!" என விரக்தியாகினர் சென்னை ரசிகர்கள். ``ரெய்னாலாம் கேட்ச் விடுறதைப் பார்த்தால், நம்ம பக்கம் நாலாம் நம்பர்ல காத்து வீசுதுடோய்" எனக் குதூகலமானார்கள் மும்பை ரசிகர்கள். அதே ஓவரில் பொல்லார்டு ஒரு சிக்ஸரும் ஹர்திக் ஒரு சிக்ஸரும் அடித்து விளையாட, கேமராமேனோ ரெய்னாவின் முகத்தை க்ளோஸ் அப்பில் காட்டிக் காட்டி ரெய்னாவின் வாழ்க்கையில் விளையாடிக்கொண்டிருந்தார். 

இது வெற்றிகரமான தோல்வி... அடுத்தமுறை இன்னும் பெரிய விசில் அடிப்போம்! #MIvsCSK

19-வது ஓவரில் ஹர்திக்கின் விக்கெட்டை, சாஹர் தூக்கியதும்தான் கேமராமேனுக்கு ஆத்திரம் அடங்கியது. அதே ஓவரில், தனது உடன்பிறப்பு ராகுல் சாஹரின் விக்கெட்டைக் கழட்டிவிட்டு இன்முகத்தோடு `டாட்டா' காட்டினார் தீபக் சாஹர். வீடு திரும்பிய மாலதி சாஹர், அடுப்பைப் பற்றவைத்தார். 20-வது ஓவரை வீச வந்தார் `சாம்பியன்' பிராவோ. முதல் மூன்று பந்துகளை அவுட் சைட் ஆஃப் திசையில் குறிவைத்து வீசினார். அதில் மூன்றாவது பந்து அகலப்பந்து, அம்பயர் அமைதியாய் நிற்கிறார் எனக் கடுப்பான பொல்லார்டு, கையில் இருந்த பேட்டை கபாலத்துக்கு மேல் செங்குத்தாகத் தூக்கிப்போட்டுப் பிடித்தார். அதுமட்டுமல்லாது, எப்படியும் இங்கேதான் போடப்போற என ஒயிட் லைனில் போய் நின்றுவிட்டார். ``தம்பி, திடீர்னு ஆர்ம்ஸ முறுக்கிக் காட்டுறது, நெஞ்சை நிமிர்த்திக்காட்டுறது, பேட்ல கேட்ச் அண்டு கேட்ச் விளையாடி குரங்குச்சேட்டை காட்றதெல்லாம் இங்கே கூடாது" என சைலன்டாக வார்னிங்கைப் போட்டது அம்பயர் குழு. இன்னிங்ஸின் கடைசி இரண்டு பந்துகளை பொல்லார்ட் பவுண்டரிக்கு விளாச, 149-8 என இன்னிங்ஸை முடித்துக்கொண்டது மும்பை.

இது வெற்றிகரமான தோல்வி... அடுத்தமுறை இன்னும் பெரிய விசில் அடிப்போம்! #MIvsCSK

``சி.எஸ்.கே-னா சென்னை சூப்பர் கிங்ஸ் இல்லடா, சேஸிங் சூப்பர் கிங்ஸ்டா" என இன்னிங்ஸை ஆரம்பித்தது சென்னை அணி. டு ப்ளெஸ்ஸியும் வாட்சனும் ஓப்பன் செய்ய, முதல் ஓவரை வீசினார் மெக்லனகன். ஓவரின் மூன்றாவது பந்து. டு ப்ளெஸ்ஸி அடிப்பதற்கென்ற அளவெடுத்துச் செய்தாற்போல் ஒரு பந்து, எக்ஸ்ட்ரா கவர் திசையில் முதல் பவுண்டரியை விரட்டினார். குர்னால் வீசிய இரண்டாவது ஓவரில், அதே எக்ஸ்ட்ரா கவர் திசையில் வாட்சன் ஒரு பவுண்டரி. மலிங்கா வீசிய மூன்றாவது ஓவரின் கடைசிப் பந்தில், ஓவர் த்ரோவின் உதவியால் 5 ரன்கள் கிடைத்தன. மீண்டும் பந்து வீச வந்தார் குர்னால். மிட் ஆனில் ஒரு பவுண்டரி, லாங் ஆனில் ஒரு சிக்ஸர், பாயின்டில் ஒரு பவுண்டரியைப் பறக்கவிட்டார் மனிதர். ``பந்தை பேட்டுக்குப் போட்டாதானே அடிப்ப, இப்போ என்ன பண்ணுவ?" என வொயிடாய்த் தூக்கிவீச, டு ப்ளெஸ்ஸி பேட்டை வீச, பிடித்து ஸ்டெம்பிங் செய்துவிட்டார் டி காக். ப்ச்ச்..!

இது வெற்றிகரமான தோல்வி... அடுத்தமுறை இன்னும் பெரிய விசில் அடிப்போம்! #MIvsCSK

ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரை வீசி, வெறும் 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார் `பூம் பூம் பும்ரா'. ஆறாவது ஓவரை வீச வந்த மலிங்காவை, ஊமைக்குத்தாகக் குத்தி அனுப்பினார் வாட்சன். ஒரே ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸர் கிடைத்தது. ரெய்னாவோ, அரைத்தூக்கத்தில் எழுப்பிவிட்டு ஆறாம் வாய்ப்பாடு கேட்டதுபோல் திணறிக்கொண்டிருந்தார். ரிவ்யூவியின் உதவியால் மறுவாழ்க்கை கிடைத்தும், அதைப் பயன்படுத்தாமல் பாழாக்கினார் `சின்ன தல.' இன்னொரு பக்கம், கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கிக்கொண்டிருந்தார் ராகுல் சாஹர். அவர் வீசிய எட்டாவது ஓவரில், வெறும் மூன்று ரன்கள் மட்டுமே கிடைத்தன. சென்னை அணியின் வேகமும் குறைந்தது. 

ஆட்டத்தின் பத்தாவது ஓவர், ராகுல் சாஹரின் பந்தில் எல்.பி.டபிள்யு ஆனார் ரெய்னா. போதாதற்கு இருந்த ஒரு ரிவ்யூவையும் வீணாக்கிவிட்டார். என்னடா இது மிஸ்டர் ஐ.பி.எல்-லுக்கு வந்த சோதனை! ராயுடுவை ப்ளேயிங் லெவன்ஸ் எடுக்கச் சொன்னால், ராயுடுவே ராயுடுவை எடுக்க மாட்டார். ஆனால், தோனி என்ன நினைத்தார் எனத் தெரியவில்லை. அது ராயுடுவுக்கும் கடைசி வரை புரியவில்லை. ஒரு ரன், ஒரே ஒரு ரன் மட்டும் எடுத்துவிட்டு பும்ராவின் பந்தில் நடையைக் கட்டினார். `தல' தோனி உள்ளே வந்தார். தங்களது ஒட்டுமொத்த நம்பிக்கையையும் தலயின் தலைமேல் ஏற்றிவைத்தனர் சென்னை ரசிகர்கள். தோனியும் ரொம்ப நிதானமாகத் தொடங்கினார். 

இது வெற்றிகரமான தோல்வி... அடுத்தமுறை இன்னும் பெரிய விசில் அடிப்போம்! #MIvsCSK

13-வது ஓவரில்தான் அந்தச் சம்பவம் நடந்தது. ஹர்திக் பாண்டியா வீசிய பந்தை, ஷார்ட் ஃபைன் ஃபீல்டருக்கு தட்டிவிட்டு சிங்கிள் எடுக்க முயன்றனர் வாட்சனும் தோனியும். பந்தை எடுத்த மலிங்கா, பெளலரின் ஸ்டெம்பை நோக்கி வீச, அது ஓவர் த்ரோ ஆனது. இந்தக் கேப்பில் இரண்டாவது ரன் எடுக்கப் போக, தோனி பக்கம் இருந்த ஸ்டெம்ப்பை எகிறவைத்தார் இஷான் கிஷன். இரண்டு மில்லிமீட்டர் அளவு பேட் உள்ளே இருந்திருந்தால் அது நாட்-அவுட் ஆகியிருக்கும். இந்தத் தருணம்தான் மேட்சையே மாற்றிப்போட்டது.

அடுத்த இரண்டு ஓவர்களில் பவுண்டரி எதுவும் சென்னைக்குக் கிடைக்கவில்லை. 16-வது ஓவர் வீச வந்த மலிங்காவை, மீண்டும் ஒருமுறை வச்சு செய்தார் வாட்சன். ஒரே ஓவரில் ஒரு சிக்ஸர், மூன்று பவுண்டரிகள் என மொத்தம் 20 ரன்கள் சென்னை அணிக்குக் கிடைத்தன. வாட்சனுக்கு ஹாட்ரிக் பவுண்டரி. 17-வது ஓவரை வீசினார் பும்ரா, வெறும் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். குர்னால் வீசிய 18-வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை வெளுத்தார் வாட்சன். மேட்ச் தங்கள் கையைவிட்டுப் போனதாக இடிந்துபோனார்கள் மும்பை ரசிகர்கள். ``விட்றாத வாட்டூ..." எனக் கண்கள் கலங்கினர் சென்னை ரசிகர்கள். மீண்டும் பும்ரா வந்தார், ப்ராவோவின் விக்கெட்டைக் கழற்றினார். ஓவரின் கடைசிப் பந்து, டி காக்கின் கைகளுக்குச் சிக்காமல்தான் பவுண்டரிக்கு விரைந்தது. பட்டாசான டெத் ஓவர் பெளலிங் பும்ராவிடமிருந்து, 19-வது ஓவரில் வெறும் 9 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 

இது வெற்றிகரமான தோல்வி... அடுத்தமுறை இன்னும் பெரிய விசில் அடிப்போம்! #MIvsCSK

6 பந்துகளுக்கு 13 ரன்கள் வேண்டும் என்கிற நிலை. வாட்சன் இருந்த வேகத்துக்கு விரட்டிப் பிடித்துவிடலாம் என நம்பிக்கையாக இருந்தனர் சென்னை ரசிகர்கள். ``பாண்டியாகிட்ட கொடுக்காம, மலிங்காகிட்ட ஏன் கொடுக்கணும்?" எனக் கடுப்பானார்கள் மும்பை ரசிகர்கள். முதல் மூன்று பந்துகளில், வெறும் நான்கு ரன்கள். நான்காவது பந்தில் வாட்சன் ரன் அவுட்! ஆம், பிபி மாத்திரையோடு அமர்ந்தவர்கள் பிழைக்கத் தெரிந்தவர்கள். கடைசி 2 பந்து, 4 ரன்கள் என்ற நிலை. முதல் பந்தில் டபுள்ஸ் எடுத்தார் ஷ்ரதுல் தாக்கூர். கடைசிப் பந்து, சிங்கிள் எடுத்தால் சூப்பர் ஓவர். டபுள்ஸ் எடுத்தால் வெற்றி! மைதானம் பிரார்த்தனைக்கூடமானது. எங்கும் பிரார்த்தனைகள். கடைசிப் பந்து, எல்.பி.டபிள்யூ ஆனார் ஷ்ரதுல்! பந்து, பேட்டில் பட்டிருந்தால் பறந்திருக்கும். சில சென்டிமீட்டர்கள்தான் இடைவெளி! நான்காவது முறையாக சாம்பியன் ஆனது, மும்பை அணி. ஒற்றை ரன்னில் கோப்பையைத் தவறவிட்டது சென்னை அணி.

இது வெற்றிகரமான தோல்வி... அடுத்தமுறை இன்னும் பெரிய விசில் அடிப்போம்! #MIvsCSK

இப்போ என்ன ஆச்சு, அடுத்த சீஸனில் சென்னை இன்னும் பெரிய விசிலாய் அடிக்கும், அதில் எதிரணியின் காது கிழியும்! வாழ்த்துகள் மும்பை இந்தியன்ஸ்.