Published:Updated:

`அப்னா டைம் ஆயேகா...!’ – இது சென்னைக்கா, டெல்லிக்கா?! #IPL

`அப்னா டைம் ஆயேகா...!’ – இது சென்னைக்கா, டெல்லிக்கா?! #IPL
`அப்னா டைம் ஆயேகா...!’ – இது சென்னைக்கா, டெல்லிக்கா?! #IPL

``டெல்லியோ, சென்னையோ, வி ஆர் வெயிட்டிங்" என மும்பை அணி காத்திருக்க, விசாகப்பட்டினத்தில் போட்டியை வென்று ஹைதராபாத்துக்கு ஃப்ளைட் ஏறப்போவது யார் என்பதை கமென்டில் பதியவும்.

வ்வொரு ஐபிஎல் ப்ளே ஆஃபிலும் விளையாடிப் பழக்கப்பட்ட ஓர் அணியும், 6 ஆண்டுக்கால தவத்திற்குப் பிறகு ப்ளே ஆஃப்பில் இடத்தைப் பிடித்திருக்கும் மற்றோற் அணியும் நடப்பு ஐபிஎல் தொடரின் குவாலிஃபையரில் மோதுகின்றன. மஞ்சள் ஆர்மிக்கு நாடெங்கிலும் ரசிகர்கள் அதிகம் என்றாலும், பெயர் மாற்றப்பட்ட அணிக்கும் இந்த சீசனில் எக்கச்சக்க ரசிகர்கள். எந்த அணி ஜெயிக்கும், எப்படி ஜெயிக்கும் என்பதை எல்லாம் தாண்டி, சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் மோதும் இந்த குவாலிஃபையரில் ஒரு முழுமையான கிரிக்கெட் அனுபவம் கிடைக்கும் என்பதில் நோ டவுட். #IPLPlayoffs

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கடைசி இடத்தில் நிறைவு செய்த டெல்லி கேப்பிடல்ஸ், இந்த சீசனில் ப்ளே ஆஃப் வரை முன்னேறியதில் ஆச்சர்யமில்லை. காரணம், ரிக்கி பான்டிங் பயிற்சி அளிக்க, கங்குலி ஆலோசனை வழங்க டெல்லியின் இளம் வீரர்கள் ஒவ்வொரு போட்டியிலும் தங்களை மெருகேற்றிக் கொண்டே வந்தனர். ``ஒருத்தரால ஜெயிக்கிற அணியில்ல, ஒவ்வொருத்தராலும் ஜெயிக்கிற அணி" என்று மொத்த அணியும் இந்த சீசனில் சிறப்பாக விளையாடியதே கோப்பையை வெல்வதற்கான ஓட்டத்தில் டெல்லியையும் டாப்பில் வைத்துள்ளது. இதற்கு நேரெதிராக, 11 பேர் கொண்ட குழுவில், பெரிய மாற்றங்கள் ஏதுமின்றி வின்னிங் அணியுடனே விளையாடிப் பழக்கப்பட்ட சென்னைக்கு, ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வீரர் வெற்றிக்குப் பங்களித்தனர். 

`அப்னா டைம் ஆயேகா...!’ – இது சென்னைக்கா, டெல்லிக்கா?! #IPL

யாருக்கு யார் பதிலடி கொடுப்பது?

சென்னைக்கு எதிரான இரண்டு லீக் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ள டெல்லி கேப்பிடல், குவாலிஃபையரில் பதிலடி கொடுக்குமா என்பதிலும், மும்பைக்கு எதிரான இரண்டு லீக் போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ள சென்னை அணி, Q2-ல் குவாலிஃபையாகி ஃபைனலில் மும்பையை வீழ்த்துமா என்பதிலும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. `Apna time aayega' என்பது சென்னைக்கா, டெல்லிக்கா என்பதற்கான பதில் நள்ளிரவு தெரிந்துவிடும். 

அனுபவம் vs வெறி

இரண்டு அணிகளைப் பொறுத்தவரை, அந்தந்த அணி வீரர்களின் வயதை வைத்தே அதிகமாக கமென்ட் செய்யப்பட்டனர். 25-க்கும் குறைவான வயதில் 10 வீரர்களைக் கொண்ட இளம் படையான கேப்பிடல்ஸ், கோப்பையை வெல்ல வேண்டும் என்ற வெறியில் விளையாடி வருகிறது. ப்ளே ஆஃப் அனுபவத்தை முதல்முறை சந்திக்கப்போகும் இந்த இளம் வீரர்கள், கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தக் காத்திருக்கிறார்கள். நடப்பு ஐபிஎல் சீசனில், எளிதாக வெற்றிபெற வேண்டிய போட்டிகளையும் கடைசி நேரத்தில் சொதப்பி முட்டிமோதி வென்ற வரலாறு டெல்லி அணிக்கு உண்டு. சாதகமாக முடியப்போகும் போட்டியை குளறுபடி செய்வதைத் தவிர்த்தால், டெத் ஓவரில் பரபரப்பைத் தவிர்க்கலாம். உதாரணத்துக்கு, ஹைதராபாத்துக்கு எதிரான கடந்த போட்டியில் ரிஷப் பன்ட் கடைசி வரை நின்று போட்டியை முடித்திருக்கலாம். 6 ரன் எடுப்பதற்குள் தூக்கிக் கொடுத்து அவுட்டாகி, டெயிலெண்டர்களை தர்மச் சங்கடத்தில் ஆழ்த்தி விட்டார். 

`அப்னா டைம் ஆயேகா...!’ – இது சென்னைக்கா, டெல்லிக்கா?! #IPL

அனுபவமே பலம்!  

`அங்கிள் ஆர்மி' எனக் கிண்டல் செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸுக்கு அனுபவமே பிளஸ். கம்பேக் சீசனில், இதே அணியை வைத்து கோப்பையை வென்ற தோனி அண்ட் கோ, இந்த சீசனிலும் ரிப்பீட் செய்யக் காத்திருக்கிறது. ஒவ்வொரு ப்ளே ஆஃபிலும் விளையாடியுள்ள கேப்டன், இந்நேரம் குவாலிஃபையரை வெல்வதற்கான யுக்திகளை செட் செய்திருப்பார். கடைசி ஓவர் வெற்றி சி.எஸ்.கே–வுக்கு கை வந்த கலை என்றாலும், சுமாராக விளையாடி வரும் பேட்ஸ்மேன்களை வைத்துக் கொண்டு குவாலிஃபையர் போன்ற முக்கியமான போட்டியில் கடைசி நிமிட மேஜிக்கை நம்பி இருப்பதைத் தவிர்த்தால் நல்லது.

2012 vs 2019

2012-ம் ஐ.பி.எல் சீசனில் சென்னை, டெல்லி அணிகள் குவாலிஃபையரில் மோதின. டெல்லி ப்ளே ஆஃப்புக்கு தகுதிபெற்ற கடைசி சீசனும் அதுவே. சென்னை சேப்பாக்கத்தில் நடந்த இந்தப் போட்டியில், 222 ரன் இலக்கை சேஸ் செய்த டெல்லி 133 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. 6 ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டு அணிகள் மீண்டும் குவாலிஃபையர் 2-ல் சந்திப்பது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. ஆனால், இந்த 6 ஆண்டுகளில் இரண்டு அணிகளிலுமே மாற்றங்கள் ஏராளம். பெயரை மாற்றி, கேப்டனை மாற்றி ``இது பழைய டெல்லி இல்ல, நியூ டெல்லி" என அதிரடி காட்டுகிறது கேப்பிடல்ஸ். லீக் போட்டிகளில் எவ்வளவு சொதப்பினாலும் ப்ளே ஆஃபில் கிங்காக இருக்கும் சென்னை அணியைப் பொறுத்தவரை, ``இந்தச் சொதப்புற சென்னை வேண்டாம், பழைய சென்னை வேண்டும்" என ரசிகர்கள் தொண்டை கிழிய கத்தி வருகின்றனர். எனவே, புது டெல்லியும், பழைய சென்னையும் மோதினால் மட்டுமே இன்றைய குவாலிஃபையரில் விறுவிறுப்புக்குப் பஞ்சமிருக்காது. 

`அப்னா டைம் ஆயேகா...!’ – இது சென்னைக்கா, டெல்லிக்கா?! #IPL

``டெல்லியோ, சென்னையோ, வி ஆர் வெயிட்டிங்" என மும்பை அணி காத்திருக்க, விசாகப்பட்டினத்தில் போட்டியை வென்று ஹைதராபாத்துக்கு ஃப்ளைட் ஏறப்போவது யார் என்பதை கமென்டில் பதியவும்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு