Published:Updated:

ஒரே ஓவர்... சேப்டர் க்ளோஸ்... சி.எஸ்.கே–வைச் சந்திக்கிறது `டெலி’மினிடே்டர்! #DCvsSRH

ஒரே ஓவர்... சேப்டர் க்ளோஸ்... சி.எஸ்.கே–வைச் சந்திக்கிறது `டெலி’மினிடே்டர்!  #DCvsSRH
ஒரே ஓவர்... சேப்டர் க்ளோஸ்... சி.எஸ்.கே–வைச் சந்திக்கிறது `டெலி’மினிடே்டர்! #DCvsSRH

வாட் எ ப்யூட்டி! முன்ரோ, படேல் என அடுத்தடுத்து இரண்டு வீரர்கள் பெவிலியன் திரும்ப, ஹைதராபாத்துக்கு நம்பிக்கை பிறந்தது. அந்த நம்பிக்கையை மீண்டும் குழிதோண்டி புதைக்க வந்தார் பஸில்!

நேற்றைய போட்டியில்தான் நடப்பு ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் சுற்று சூடுபிடித்தது. சென்னை, மும்பை  மோதிய குவாலிஃபையரின் முடிவு இரண்டாவது இன்னிங்ஸின் தொடக்கத்திலேயே தெரிந்ததால், போட்டி புஸ்ஸென முடிந்தது. 6 ஆண்டுகளுக்குப் பிறகு ப்ளே ஆஃப் சுற்றுக்கு என்ட்ரியான டெல்லி, திக்குமுக்காடி 12 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் நிறைவு செய்த ஹைதராபாத் அணிகள் மோதிய எலிமினேட்டரில், வென்றது கேப்பிடல்ஸ்! #DCvsSRH

லீக் போட்டிகளைப் பொறுத்தவரை ஹோம் கிரவுண்டு என்பது ஹைதராபாத்துக்குச் சாதகம், டெல்லிக்கு அலர்ஜி. வலதும் இல்லை இடதும் இல்லை, `மையம்னு' முடிவு செய்யப்பட்டு, எலிமினேட்டர் போட்டி விசாகப்பட்டினத்தில் நடத்தப்பட்டது. இந்த சீசனில் இங்கு நடைபெறும் முதல் போட்டி இது. ``சேப்பாக்கம் மாதிரி சொதப்பிடாத ஆத்தா..." என இரு அணி வீரர்களும் குலதெய்வத்தைக் கும்பிடாமல் இல்லை. ஒரு வழியாக எந்த பாதிப்பும் இல்லாமல் எலிமினேட்டர் போட்டி விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. 

டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ``வழக்கமா செய்யுறதுதான், எந்த மாற்றமும் இல்லை" என ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். ட்ரென்ட் போல்ட் வீசிய முதல் பந்திலேயே எல்பிடபிள்யூ அப்பீல். அம்பயரும் கை தூக்கிவிட்டார். டெல்லி குஷியானது. ஆனால், ஸ்ட்ரைக்கிங் எண்டில் இருந்த சாகா, ரிவ்யூ கேட்க, மூன்றாவது அம்பயர் முடிவில் நாட்-அவுட் கொடுக்கப்பட்டது. முதல் பந்திலேயே பரபரப்பாகத் தொடங்கிய எலிமினேட்டர் இரண்டாவது இன்னிங்ஸின் கடைசி ஓவர் வரை தொடர்ந்தது.

ஒரே ஓவர்... சேப்டர் க்ளோஸ்... சி.எஸ்.கே–வைச் சந்திக்கிறது `டெலி’மினிடே்டர்!  #DCvsSRH

முதல் ஓவரில் கிடைத்த லைஃப்லைனில் தொடர்ந்து பேட்டிங் செய்த சாஹா, ``எனக்காக ஒரு ரிவ்யூ வேற பயன்படுத்திருக்காங்க. இன்னிக்கு நின்னு அடிக்கணும்" என்பதை மறந்து மூன்றாவது ஓவரிலேயே கேட்ச் கொடுத்து அவுட்டானார். மார்டின் குப்டில், மனிஷ் பாண்டே இணை பவர்ப்ளே முடியும் வரை தாக்குப்பிடித்தது. ``போன மேட்சுல அடிச்சதை இந்தப் போட்டியில எதிர்பார்க்கக் கூடாது"னு சொல்லிச் சொல்லி அநியாயத்துக்கு மொக்க போட்டார் மனிஷ் பாண்டே. 4 சிக்சர்கள், 1 பவுண்டரி என குப்டில் மட்டும் ரன் சேர்க்க, ஹைதராபாத் அணி 6 ஓவரில் 50 ரன்கள் எட்டியது. ``இன்னிக்கு அடிக்க முடியுமா, இல்லையா" என்று மனிஷ் பான்டே முடிவு செய்வதற்குள்ளே கீமோ பால் அவர் விக்கெட்டைத் தூக்கினார். 

பலமான பேட்டிங் லைன் - அப் கொண்ட டெல்லியின் சேஸிங்கை கடினமாக்க, குறைந்தது 160 ரன்களுக்கு மேல் இலக்கை நிர்ணயிக்க வேண்டிய கட்டாயத்தை ஹைதராபாத் உணர்ந்திருந்தது. பாண்டேவை அடுத்து கேப்டன் வில்லியம்சன் களமிறங்கினார். ``இனி நாம அடிக்கிற ஒவ்வொரு பந்தும் பவுண்டரி போகணும், குறைஞ்சது சிங்கிள்ஸ், டபுள்ஸ் கட்டாயம் எடுக்கணும்" என்று முடிவு செய்து விளையாடினர் ஆரஞ்ச் ஆர்மி வீரர்கள். ``இந்த முடிவெல்லாம் சரிதான். ஆனா, இஷ்டத்துக்குத் தூக்கி அடிச்சு கேட்ச் கொடுத்து அவுட்டாகாமல் இருக்கணும்னு சொல்ல மறந்துடீங்களே வில்லியம்சன்!"

ஏற்கெனவே, சாஹா, குப்தில், பாண்டே என டாப் ஆர்டர் முழுவதும் கேட்ச் கொடுத்து வெளியேறியது. இந்த டெக்னிக்கையே நாங்களும் பின்பற்றுவோம் என முடிவு செய்து, சம்பிரதாயத்துக்கு சில பவுண்டரிகளை விளாசிவிட்டு பெவிலியன் திரும்பினர் விஜய் ஷங்கரும், முகமது நபியும். வில்லியம்சன் மட்டும் இஷாந்த் ஷர்மாவின் யார்க்கரில் சிக்கி போல்டானார். அந்த கேட்ச்களைத் தவிர்த்து இன்னும் கொஞ்சம் பொறுப்பாக ஆடியிருந்தால் ஹைதராபாத் ஸ்கோர் உயர்ந்திருக்கும். ஆனால், 20 ஓவரில் முடிவில் 162/8 என்று முதல் இன்னிங்ஸை முடித்துக் கொண்டது ஆரஞ்ச் ஆர்மி.

ஒரே ஓவர்... சேப்டர் க்ளோஸ்... சி.எஸ்.கே–வைச் சந்திக்கிறது `டெலி’மினிடே்டர்!  #DCvsSRH

தவான் - ப்ரித்வி ஷா - ஸ்ரேயாஸ் ஐயர் - பன்ட். அதே நான்கு பேட்ஸ்மேன்கள். ``ஆளுக்கு 40 அடிச்சா கூட வெற்றி நிச்சயம். அதிரடி ஆட்டக்காரங்க வேற, முடிச்சிடுவாங்க" என டெல்லி ரசிகர்கள் நம்பிக்கையில் இருந்தனர். சேஸிங் தொடங்கியது. ஷா -தவான் ஓப்பனிங் களமிறங்கினர். பவர்ப்ளே முடியும்வரை விக்கெட் போகவில்லை. 7 ஓவர் முடிவில் 57/0. டெல்லிக்கு எல்லாம் சரியாகத்தான் சென்று கொண்டிருந்தது. ஹைதராபாத்துக்குத்தான் விக்கெட்டுகள் தேவைப்பட்டன. ஷா - தவான் கூட்டணியை ஹைதராபாத்தின் ஆஸ்தான பவுலர்களால் பிரிக்க முடியவில்லை என்பதை உணர்ந்த வில்லியம்சன், பார்ட் டைம் பவுலர் தீபக் ஹுடாவை இறக்கினார். கிடைத்தது பலன். பந்து மிஸ்ஸாகி சாஹாவின் கைகளுக்குப்போக, தவான் க்ரீஸைவிட்டு வெளியே வந்த கேப்பில் ஸ்டம்ப்ஸில் தட்டினார் சாஹா. இரண்டாவது இன்னிங்ஸின் முதல் விக்கெட்!

ஒரே ஓவர்... சேப்டர் க்ளோஸ்... சி.எஸ்.கே–வைச் சந்திக்கிறது `டெலி’மினிடே்டர்!  #DCvsSRH

ஷா - ஸ்ரேயாஸ் ஐயர் டெல்லியைக் கரை சேர்த்துவிடுவர் என்ற போது கரைக்குப் பக்கமே நெருங்கவிடாமல் விரட்டினார் கலில் அஹமது. ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகள். தவான் அவுட்டான அதே ஸ்டைலில் ஸ்ரேயாஸ் வெளியேற, ``நானும்தான் கேட்ச் கொடுத்து அவுட்டாவேன்" என்று பின்னாடியே நடையைக் கட்டினார் ஷா. 11 ஓவர் முடிவில் 87/3. ``பயப்படாதீங்க. நான் இருக்கேன்" என பன்ட் நினைத்தாரோ என்னமோ, மொத்த டெல்லி ரசிகர்களும் பன்டை மட்டும்தான் நம்பி இருந்தனர். அந்த நம்பிக்கை இந்தப் போட்டியிலும் வீண்போகவில்லை. இரண்டாவது இன்னிங்ஸின் இரண்டாவது பாதியை பஸில் தம்பியின் ஓவர்களில் விவரித்துவிடலாம். பஸில் தம்பியின் மூன்றாவது ஓவர் அது. ஒரே ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி என முன்ரோ விளாச, 12 ரன்களை அள்ளிக்கொடுத்தார் பஸில். அடுத்த ஓவரில் அதைச் சரிக்கட்டினார் ரஷித். மெய்டன் உட்பட இரண்டு விக்கெட்டுகள். வாட் எ ப்யூட்டி! முன்ரோ, படேல் என அடுத்தடுத்து இரண்டு வீரர்கள் பெவிலியன் திரும்ப, ஹைதராபாத்துக்கு நம்பிக்கை பிறந்தது. அந்த நம்பிக்கையை மீண்டும் குழிதோண்டி புதைக்க வந்தார் பஸில்!

ஒரே ஓவர்... சேப்டர் க்ளோஸ்... சி.எஸ்.கே–வைச் சந்திக்கிறது `டெலி’மினிடே்டர்!  #DCvsSRH

பன்ட், ரூதர்ஃபோர்டு களத்தில். 18 பந்துகளில் 34 ரன்கள் தேவை. ``கவலையே வேண்டாம்" என பஸில் சொன்னது ஹைதராபாத்தைப் பார்த்து இல்லை, டெல்லியைப் பார்த்து. முதல் பந்தில் பவுண்டரி, அடுத்தது சிக்ஸ். மூன்றாவது பந்து பவுண்டரி, அடுத்தது சிக்ஸ். ``ஒரே ஓவர், சேப்டர் க்ளோஸ்". இந்த ஓவரில் டபுள் பவுண்டரி, சிக்சர்கள் அடித்த பன்டைக்கூட மறந்துவிட்டு, 22 ரன்கள் வாரி வழங்கிய `பஸில் வாழ்க’ எனக் கொண்டாடத் தொடங்கினர் டெல்லி ரசிகர்கள். இந்த ஓவர் முடிவில், 12 பந்துகள் 12 ரன்கள் தேவை என்ற நிலையை எட்டியது டெல்லி கேப்பிடல்ஸ். 49 ரன்கள் எடுத்திருந்த பன்ட், வின்னிங் ஷாட் அடித்து ஃபினிஷ் செய்வார் என்று எதிர்பார்த்தபோது சிக்ஸ் அடிக்கத் தூக்கி, கேட்ச் கொடுத்து அவுட்டானார். கடைசியில் வின்னிங் பவுண்டரி அடித்தது கீமோ பால்.  

குவாலிஃபையர் 2-க்கு ப்ரொமோட் ஆயிருக்கும் டெல்லி கேப்பிடல்ஸ், அதே விசாகப்பட்டினம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்கொள்கிறது. இந்த சீசனில் இன்னும் ஒரு போட்டியில் கூட சென்னையை வென்றிடாத டெல்லி, குவாலிஃபையரில் திருப்பிக் கொடுக்குமா?! 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு