Published:Updated:

மரண பயத்தை காட்டிட்டாங்க பரமா! - சென்னை vs பஞ்சாப் மேட்ச் ரிப்போர்ட் #KXIPvsCSK

மரண பயத்தை காட்டிட்டாங்க பரமா! - சென்னை vs பஞ்சாப் மேட்ச் ரிப்போர்ட் #KXIPvsCSK
News
மரண பயத்தை காட்டிட்டாங்க பரமா! - சென்னை vs பஞ்சாப் மேட்ச் ரிப்போர்ட் #KXIPvsCSK

``இவன் எப்படிப் போட்டாலும் அடிக்குறான்டா" என ஹர்பஜன் கண்ணீர் வடிக்க, ``அதுக்காக பேபி கட்டா வாங்க முடியும். சீக்கிரம் ஓவரை முடிச்சுவிடு பாஜி" எனக் கடுப்பானார் தோனி. ``இந்தப் பந்தை நீ ஃபோர் அடிக்க முடியாதுடா" என நான்காவது பந்தைவீச, ``ஆமாம் ஃபோர் அடிக்க முடியாது. ஆனால், சிக்ஸ் அடிப்பேன்" என எக்ஸ்ட்ரா கவரில் அற்புதமான இன்சைடு அவுட் ஷாட் அடித்தார்.

ந்த ஐ.பி.எல்-ன் 55-வது ஆட்டம், கிங்ஸ் Vs கிங்ஸ்! `தோனிக்கு மீண்டும் காய்ச்சல் வந்து, வான்கடே மைதானமே இடிந்துபோய், ஷ்ரேயாஸ் ஐயரின் சீப்பை யாராவது ஒளித்துவைத்து, நாமும் இந்த மேட்சை ஜெயித்தால் ப்ளே ஆஃப்க்குள் நுழையலாம்' என நம்பிக்கையோடு காத்திருந்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப். ``வார்ம் அப் மேட்ச் விளையாடலாம், இந்த சூனாபானா பஞ்சாப் வரைக்கும் வரவேண்டியிருக்கு. இருக்கட்டும், ஃபைனல்ல அம்புட்டு பேரையும் செமிச்சுப்புடுறேன்" என உக்கிரமாய் இருந்தது சென்னை சூப்பர் கிங்ஸ். நேற்று மொகாலியில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் ஜெயித்து பெளலிங்கைத் தேர்ந்தெடுத்தார் அஸ்வின்.

மரண பயத்தை காட்டிட்டாங்க பரமா! - சென்னை vs பஞ்சாப் மேட்ச் ரிப்போர்ட் #KXIPvsCSK

இந்த சீஸனில் ஒருமுறைகூட தொடர்ந்து இரண்டு ஆட்டங்களில் ஒரே லெவன்ஸோடு ஆடியதில்லை அஸ்வின். அதாம்லே அன்பிரெடிக்ட்டபிளு! நேற்று நடந்த போட்டியிலும், அர்ஸ்தீப் சிங்குக்குப் பதிலாக ஹர்ப்ரீத் ப்ராரை களமிறக்கினார். சென்னை அணி அப்படியே பஞ்சாபுக்கு நேரெதிர். யாருக்காவது காய்ச்சலோ, கக்குவான் இருமலோ வந்தால்தான் விடுப்புகொடுப்பார்கள். ஆக, நேற்றைய போட்டியில் எந்தவித மாற்றமுமின்றி களமிறங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வழக்கம்போல் வாட்சனும் டு ப்ளெஸ்ஸியும் சென்னையின் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். சுழற்பந்து வீச்சாளர் ஹர்ப்ரீத் ப்ரார், முதல் ஓவரை வீசினார். முதல் பந்தில் ஒரு சிங்கிளைத் தட்டிவிட்டு, மொய் வைக்கத் தொடங்கினார் டு ப்ளெஸ்ஸி. கடைசிப் பந்தில் ஒரு பவுண்டரியைத் தட்டிவிட்டு, வாட்சனும் ஆட்டத்துக்குள் வந்தார். இரண்டாவது ஓவரை வீசினார் ஷமி. முதல் பந்தை, லெக் திசை பவுண்டரிக்கு ஃப்ளிக் செய்தார். மூன்றாவது ஓவரை சாம் கரண் வீச வந்தார். ஸ்ரூவ்வ்வ்! இந்த ஓவரின் முதல் பந்தை, லாங் ஆஃப் திசையில் பவுண்டரிக்கு அனுப்பிவைத்தார் டு ப்ளெஸ்ஸி. ஷமி வீசிய நான்காவது ஓவரின் கடைசிப் பந்தில், இன்னொரு பவுண்டரியும் அடித்தார். ஓவருக்கு ஒரு பவுண்டரி, தொட்டுக்கக் கொஞ்சம் சிங்கிள் என நிதானமாய் ஆடிக்கொண்டிருந்தது சி.எஸ்.கே!

மரண பயத்தை காட்டிட்டாங்க பரமா! - சென்னை vs பஞ்சாப் மேட்ச் ரிப்போர்ட் #KXIPvsCSK

``என்ன வாட்சன், நாலு ஓவர் நின்னுட்டாப்ல. தப்பாச்சே!" எனச் சென்னை ரசிகர்கள் டவுட்டாகத் தொடங்கியதும், சாம் கரண் பந்தில் பவுல்டாகி பெவிலியனுக்கு நடையைக்கட்டினார் வாட்சன். ``ஆங், இதுதான் நம்ம வாட்டு" எனச் சென்னை ரசிகர்கள் மகிழ்ச்சியடைய, முரளி விஜய் கடுப்பில் அமர்ந்திருந்தார். அடுத்ததாக உள்ளே வந்தார் மிஸ்டர் ஐ.பி.எல், சின்ன தல ரெய்னா! அதே ஓவரின் ஐந்தாவது பந்தை பவுண்டரிக்கு விரட்டி, கொஞ்சம் பிரஷ்ஷரைக் குறைத்தார் டு ப்ளெஸ்ஸி. ஆட்டத்தின் ஆறாவது ஓவரை வீச வந்தார் மானத்தமிழ்ப் பிள்ளை அஸ்வின்! ரெய்னாவுக்கு ஒரு பவுண்டரி கிடைத்தது. பவர் ப்ளேயின் முடிவில் 42-1 என, மெதுவாக  ஆக்ஸிலேட்டரை ரைஸ் பண்ணிக்கொண்டிருந்தது சி.எஸ்.கே! 

ஏழாவது ஓவரை வீச வந்தார் ஹர்ப்ரீத் ப்ரார். ஓவரின் 4-வது பந்தை, பிட்சான இடத்துக்கு இறங்கிவந்து லாங் ஆன் திசையில் கொடியேற்றினார் ரெய்னா. ஆட்டத்தின் முதல் சிக்ஸ்! ரெய்னா, அஸ்வின் வீசிய 8-வது ஓவரின் முதல் பந்தை, தேர்டு மேன் திசை பவுண்டரிக்குத் தொட்டுவிட்டார். ப்ரார் வீசிய அடுத்த ஓவரில், மீண்டும் ஒரு சிக்ஸரையும் விளாசினார். டைம் -அவுட்! ``ஓவருக்கு ஒரு பவுண்டரிதான் அடிப்பேன்" என ஒற்றைக்காலில் நின்று, அதைச் செயல்படுத்தியும் வந்தார்கள் சென்னை அணியினர்! ``நல்லாத்தான் அடிக்குறாய்ங்க. ஆனா, ரன் அப்படியே இருக்கே" என்ற குழப்பத்தில் இருந்தார்கள் சென்னை ரசிகர்கள். 

மரண பயத்தை காட்டிட்டாங்க பரமா! - சென்னை vs பஞ்சாப் மேட்ச் ரிப்போர்ட் #KXIPvsCSK

11-வது ஓவரை வீச வந்தார், முப்பாட்டனின் பெயர்கொண்ட மானத்தமிழ்ப் பிள்ளை முருகன் அஸ்வின். ஓவரின் மூன்றாவது பந்தை, நேராகத் தூக்கி அடித்தார் டு ப்ளெஸ்ஸி. ஜஸ்ட் மிஸ், நூலிழையில் மிஸ்ஸாயிடுத்து சிக்ஸர். ``சரி, இந்த ஓவருக்கான பவுண்டரி கோட்டா முடிஞ்சது" என, 5-வது பந்தை சிங்கிளுக்குத்தான் தட்டினார் டு ப்ளெஸ்ஸி. என்ன மாயமோ, மந்திரமோ... அதை கே.எல்.ராகுல் கால்வாய்விட, முதல்முறையாக இந்த ஓவரில் இரண்டு பவுண்டரிகள் கிடைத்தன. ``ச்சே...  இரண்டு பவுண்டரி போயிடுச்சே" என ராகுலின் மீது கடுப்பானார் டு பிளெஸ்ஸி. போன சீஸனில் பர்ப்பிள் கேப் வாங்கியவர் டை! அந்த பர்ப்பிள் கலர் பிடிக்கவில்லையோ என்னவோ, இந்த சீஸனில் சொதப்பலாய்ப் பந்து வீசிவருகிறார். ஆனால், அவரின் முதல் ஓவரிலும் ஒரே ஒரு பவுண்டரிதான் அடித்தார்கள் இந்தச் சென்னை பயபுள்ளைகள்.

முருகன் அஸ்வின் வீசிய 13-வது ஓவரில், அந்த ஒரு பவுண்டரிகூட கிடைக்கவில்லை. ஆனால், டு ப்ளெஸ்ஸிக்கு அரைசதம் கிடைத்தது. முருகனின் முந்தைய ஓவரில் கிடைத்த எக்ஸ்ட்ரா பவுண்டரியை, இந்த ஓவரில் டேலி செய்துவிட்டார்கள். ச்சை! அடுத்து அஸ்வின் வீசிய 14-வது ஓவரிலும், எந்த பவுண்டரியும் கிட்டவில்லை. சென்னை அணி காண்டானது. உள்ளுக்குள் உறங்கிக்கிடக்கும் காண்டாமிருகத்தைத் தட்டி எழுப்பிவிடலாம் என முடிவுசெய்தது. மாட்டிக்கொண்டார் முருகன் அஸ்வின்! 15-வது ஓவரில் ரெய்னா ஒரு பவுண்டரியும் டு ப்ளெஸ்ஸி ஒரு பவுண்டரியும், ஒரு சிக்ஸரும் விளாசினர். அந்த பவுண்டரியின் மூலம் அரைசதத்தை நிறைவுசெய்தார் ரெய்னா. டை வீசிய 16-வது ஓவரில் லாங் ஆஃபில் ஒரு பவுண்டரி, ஸ்கொயரில் ஒரு பவுண்டரி, லாங் ஆனில் ஒரு சிக்ஸர் அடித்தார் டு ப்ளெஸ்ஸி. ``இன்னைக்கு ஒரு சென்சூரி இருக்குடோய்" எனக் குஷியானார்கள் சென்னை மக்கள். 

மரண பயத்தை காட்டிட்டாங்க பரமா! - சென்னை vs பஞ்சாப் மேட்ச் ரிப்போர்ட் #KXIPvsCSK

மீண்டும் வந்தார் சாம் கரண். ஸ்ரூவ்வ்வ்! டு ப்ளெஸ்ஸிக்கு ஒரு சிக்ஸரைக் கொடுத்துவிட்டு, ``ஸ்கெட்ச் சேகருக்கு இல்லை சௌந்தரு... உனக்குத்தான்" என ரெய்னாவின் விக்கெட்டைத் தூக்கினார். ஷார்ட் ஃபைன் லெக்கில் ஷமியை நிப்பாட்டி கேட்ச் எடுக்கவைத்தார் சாம். `தல' தோனி வந்தார், உருட்டி உருட்டி ஹாக்கி விளையாடிக்கொண்டிருந்தார். அஸ்வின் வீசிய 18-வது ஓவரில் வெறும் 4 ரன்கள் மட்டுமே கிடைத்தன. மீண்டும் சாம் கரண் வந்தார், டு ப்ளெஸ்ஸிக்கு ஒரு சிக்ஸரைக் கொடுத்துவிட்டு ``இந்த முறை ஸ்கெட்ச் உனக்குத்தான் சேகரு" என டு ப்ளெஸ்ஸியை க்ளீன் போல்டாக்கினார். காலுக்குள் வந்த யார்க்கரால், சதம் கையைவிட்டுப்போனது! 55 பந்துகளில் 96 ரன்கள். பிரமாதம் டு ப்ளெஸ்ஸி! இன்னிங்ஸின் கடைசி ஓவரை வீசினார் ஷமி, 1 ரன்னில் ராயுடு காலி. கேதார் ஜாதவுக்கும் தகதக தங்கமுட்டை! கடைசி ஓவரில் வெறும் 5 ரன்கள் மட்டுமே கிடைத்தன. 20 ஓவரின் முடிவில் 170 ரன்கள் எடுத்திருந்தது சி.எஸ்.கே. 3 ஓவருக்கு 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்களைச் சாய்த்திருந்தார் ஷமி. சாம் கரண், 4 ஓவருக்கு 35 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களைக் கழற்றியிருந்தார். 

மரண பயத்தை காட்டிட்டாங்க பரமா! - சென்னை vs பஞ்சாப் மேட்ச் ரிப்போர்ட் #KXIPvsCSK

171 ரன்கள் எடுத்தால் வெற்றி! இந்த இலக்கை 14.3 ஓவருக்குள் எட்டிப்பிடித்தால், சென்னையை மூன்றாவது இடத்துக்குத் தள்ளலாம். இது ஒன்றுதான் அஸ்வினின் மனதில் ஓடியிருக்கும். பஞ்சாபின் தொட்டுத்தொடரும் பேட்டிங் பாரம்பர்யப்படி கெயில்-கே.எல் ஜோடி இன்னிங்ஸை ஓப்பன் செய்தது. சென்னையின் தொட்டுத்தொடரும் பெளலிங் பாரம்பர்யப்படி சஹார், முதல் ஓவரை வீசினார். முதல் ஐந்து பந்துகளும் டாட். கடைசிப் பந்தை சிக்ஸருக்கு விளாசினார் கே.எல்.ராகுல். கெயில் விக்கெட்டைத் தூக்குவதற்காகவே, ஹர்பஜனைக் கூட்டிவந்தார் தோனி. ஆனால், அவர் ஓவரைத்தான் கரைவைத்து வெளுத்தது இந்த ஜோடி. முதல் பந்திலேயே பவுண்டரி. அதே ஓவரில் கே.எல்.ராகுலும் தொடர்ந்து இரண்டு சிக்ஸர்களை வெளுத்துவிட்டார். சாஹர் வீசிய 3-வது ஓவரில் இன்னும் இரண்டு பவுண்டரிகளை விரட்டினார் கே.எல்.

``மாப்ள, இவிய்ங்க ஒரு முடிவோடத்தான் வந்திருக்காய்ங்க" என திகிலானார்கள் சென்னை ரசிகர்கள். ஆனால், தோனி திகிலானதுபோல் தெரியவில்லை. மீண்டும் ஹர்பஜனிடமே பந்தைக் கொடுத்தார். முதல் பந்து, லாங் ஆஃப் திசையில் ஒரு பவுண்டரி. இரண்டாவது பந்து, டீப் மிட் விக்கெட்டுக்கும் பேக்வார்டு ஸ்கொயர் லெக்குக்கும் இடையே ஒரு பவுண்டரி. மூன்றாவது பந்து, லாங் ஆனில் ஒரு பவுண்டரி. ``இவன் எப்படிப் போட்டாலும் அடிக்குறான்டா" என ஹர்பஜன் கண்ணீர் வடிக்க, ``அதுக்காக பேபி கட்டா வாங்க முடியும். சீக்கிரம் ஓவரை முடிச்சுவிடு பாஜி" எனக் கடுப்பானார் தோனி. ``இந்தப் பந்தை நீ ஃபோர் அடிக்க முடியாதுடா" என நான்காவது பந்தைவீச, ``ஆமாம் ஃபோர் அடிக்க முடியாது. ஆனால், சிக்ஸ் அடிப்பேன்" என எக்ஸ்ட்ரா கவரில் அற்புதமான இன்சைடு அவுட் ஷாட் அடித்தார். அடுத்த பந்து, திருவள்ளுவரின் புண்ணியத்தில் டாட். கடைசிப்பந்தையும் வெறிகொண்டு வீச, அதையும் மனசாட்சியே இல்லாமல் சிக்ஸருக்கு ஃப்ளைட் ஏற்றி அனுப்பிவைத்தார் கே.எல்.ராகுல்! 19 பந்தில் 50. பவர் ப்ளேயின் முடிவில் 68-0 என கெத்தாக நின்றுகொண்டிருந்தது பஞ்சாப். ``இங்க பாருங்க, உங்க மனசுல மரணபீதி இருக்கிறது கண்ணாடி மாதிரி எனக்கு அப்படியே தெரியுது. அட்டாக் அதிமாகும்போது ஒரு முடிவு எடுத்துக்குவோம். இடையில, கேப்டனை அத்துவிட்டுலாம் ஓடக்கூடாது" என அட்வைஸ் வழங்கிக்கொண்டிருந்தார் தோனி.

மரண பயத்தை காட்டிட்டாங்க பரமா! - சென்னை vs பஞ்சாப் மேட்ச் ரிப்போர்ட் #KXIPvsCSK

இந்த ஜோடி தாஹிரையும் விட்டுவைக்கவில்லை. அவர் ஓவரில் ஒரு பவுண்டரி, இரண்டு சிக்ஸரை வெளுத்துவிட்டார் கெய்ல். இவர் வேறு பார்ப்பதற்கு, `ப்ரிடேட்டர்' ஹேர்ஸ்டைலில் பிட்சுக்குள் சுற்றித்திரிய, சென்னை பெளலர்கள் பயந்துபோய் கிடந்தார்கள். தோனி கூப்பிட்டுவைத்து வேப்பிலை அடித்தும் எதுவும் வேலைக்காகவில்லை. பிராவோ மட்டும் ஏதோ செய்துகொண்டிருந்தார். பஞ்சாப் ஜெயித்துவிடும் என்பது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது, 14 ஓவருக்குள் ஜெயிப்பார்கள் என்பதுதான் மேட்டர். மீண்டும் ஹர்பஜனைக் கூட்டிவந்தார் தோனி. `இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண ஏதாவது செஞ்சுவிட்ரு' எனத் திருவள்ளுவர் சொன்னதற்கேற்ப, ஓப்பனர்கள் இருவரையும் ஒரே ஓவரில் அவுட்டாக்கினார் திருக்குறள் சிங். 

அதன் பிறகு, ஹைவேயில் பரபர வேகத்தில் வந்துகொண்டிருக்கும் பஸ், பெருங்களத்தூரை நெருங்கியது மாதிரி, பஞ்சாபின் வேகம் குறையத் தொடங்கியது. 13-வது ஓவரில் மயங் அகர்வால் விக்கெட்டைக் கழற்றினார் ஹர்பஜன். தாஹிரும் இன்னொருபுறம் கட்டுப்படுத்தினார். ஆனால், இந்தப் பூரனை மட்டும் சென்னையால் ஒன்றும் செய்ய முடியவில்லை. 22 பந்தில் 36 ரன்கள் எடுத்து, 17-வது ஓவரில் ஜடேஜாவின் பந்தில் அவுட்டானார். 18-வது ஓவரில் மேட்சும் முடிந்தது.

மரண பயத்தை காட்டிட்டாங்க பரமா! - சென்னை vs பஞ்சாப் மேட்ச் ரிப்போர்ட் #KXIPvsCSK

சென்னை, குவாலிஃபயர் 1-ல் ஆடப்போவதை உறுதிசெய்தது. ``நான் குட்டி கோலி இல்லடா. நான் கே.எல்.ராகுல்டா" என கே.எல்.ராகுலும் தன்னை நிரூபித்தார். அவருக்கே மேன் ஆஃப் தி மேட்ச் விருதும் வழங்கப்பட்டது. குவாலிஃபயர் ஆட அன்புடென்னுக்கு வரும் வாட்சனை அழைத்துப்போய், ரோஸ்மில்க், ஜிகர்தண்டா என கூலிங் அயிட்டமாய் வாங்கிக்கொடுத்து, காய்ச்சல் வரசெய்யவேண்டியதுதான் முரளி விஜய்யின் மிஷன்! அதே சமயம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என பயோட்டேட்டாவில் மட்டும் பெயர்கொண்டிருந்த கேதார் ஜாதவ் காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறி இருக்கிறார். அவர் உலகக்கோப்பைக்குள் குணமாகிவிடவேண்டும் என்பதுதான் அணிச்சார்பில்லாத அனைவரின் ஆசையும்!