Election bannerElection banner
Published:Updated:

`மரண அடி என்பது யாதெனில்’ - வரலாற்றுச் சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்!

அயர்லாந்து அணிக்கு எதிரான சர்வதேச ஒருநாள் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் பார்ட்னர்ஷிப் மிரளவைத்துள்ளது. ஜான் கேம்பல், சாய் ஹோப் இணை, வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளது.

`மரண அடி என்பது யாதெனில்’ - வரலாற்றுச் சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்!

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையேயான சர்வதேச  ஒருநாள் போட்டி, டப்லீனில் உள்ள குலோன்டரஃப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி, பௌலிங்கைத்  தேர்வுசெய்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு  ஜான் கேம்பல், சாய் ஹோப் இணை துவக்கம் கொடுத்தது. இந்த பார்ட்னர்ஷிப், வரலாற்றுச் சாதனை படைக்கும் என்று அப்போது யாரும் நினைத்திருக்க வாய்ப்பில்லை. பவுண்டரிகளும் சிக்ஸர்களும், சகிதமாக அடித்துக்கொண்டிருந்தனர்.

`மரண அடி என்பது யாதெனில்’ - வரலாற்றுச் சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்!

`எப்போதான் அவுட் ஆவார்கள்’ என்ற மனநிலைக்குச் சென்றுவிட்டனர் அயர்லாந்து ரசிகர்கள். மேலும், தொடக்கத்தில் உற்சாகத்துடன் பந்துகளை வீசிய பௌலர்களையும் இந்த இணை டயர்டாக்கியது. அவர்களை அசைத்துப்பார்க்க முடியவில்லை. மாற்றி மாற்றி வீசிய பந்துவீச்சாளர்களுக்கு தடுப்பு அரணாக இருந்து அணியின் ஸ்கோரை ஏற்றினர், ஜான் கேம்பலும் சாய் ஹோப்பும். இவர்கள் ஏதோ உலக சாதனையை நோக்கித்தான் நகர்கிறார்கள் என்பதை 30 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் ரசிகர்கள் கணிக்கத்தொடங்கினர். அடித்து வெளுத்து வாங்கிய இந்த பார்ட்னர்ஷிப்பை பேரி மேக்கர்தியின் பந்து முடிவுக்குக் கொண்டுவந்தது.

`மரண அடி என்பது யாதெனில்’ - வரலாற்றுச் சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்!

அவர் வீசிய 47-வது ஓவரின் முதல் பந்தில், ஜான் கேம்பலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். `இனி அவுட்டானா என்ன, இல்லைனா என்ன’ என்ற மூடுக்கு சென்றுவிட்டனர் அயர்லாந்து ரசிகர்கள். தொடர்ந்து, அதே ஓவரில் சாய் ஹோப்பும் பெவிலியனுக்குத் திரும்பினார். அடுத்து வந்த வீரர்கள் அடிப்பதற்குள் ஓவர் முடிந்துவிட்டது. இன்னிங்ஸின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 381 ரன்களைக் குவித்தது. ஜான் கேம்பல், சாய் ஹோப் பார்ட்னர்ஷிப் 365. ஜான் கேம்பெல் 179 ரன்களும், சாய் ஹோப் 170 ரன்களையும் சேர்த்தனர். இந்த இமலாய இலக்கை எட்ட களமிறங்கிய அயர்லாந்து அணியை 184 ரன்களிலே சுருட்டியது வெஸ்ட் இண்டீஸ்.

`மரண அடி என்பது யாதெனில்’ - வரலாற்றுச் சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்!

சர்வதேச ஒருநாள் போட்டிகளில், ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பைப் பொறுத்தவரை 365 ரன்களைச் சேர்ந்து ஜான்கேம்பெல் மற்றும் சாய் ஹோப் இணை, முதல் இடத்தைப் பிடித்து வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்து. இரண்டாவது இடத்தில், ஓப்பனிங்கில் 320 ரன்களைச் சேர்த்து இந்தியப் பெண்கள் அணியைச் சேர்ந்த பூனம் ராட், தீப்தி ஷர்மா இணை உள்ளது. 304 ரன்களுடன் பாகிஸ்தானைச் சேர்ந்த இமாமுல் ஹக் - பக்ஹர் ஜமான் இணை 3-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 
Vikatan
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு