Published:Updated:

 `காத்திருந்து, காத்திருந்து செய்த ஸ்டெம்பிங்’ - அறிமுக போட்டியிலே சர்ச்சைக்குள்ளான இங்கிலாந்து வீரர்

 `காத்திருந்து, காத்திருந்து செய்த ஸ்டெம்பிங்’ - அறிமுக போட்டியிலே சர்ச்சைக்குள்ளான இங்கிலாந்து வீரர்
 `காத்திருந்து, காத்திருந்து செய்த ஸ்டெம்பிங்’ - அறிமுக போட்டியிலே சர்ச்சைக்குள்ளான இங்கிலாந்து வீரர்

 `காத்திருந்து, காத்திருந்து செய்த ஸ்டெம்பிங்’ - அறிமுக போட்டியிலே சர்ச்சைக்குள்ளான இங்கிலாந்து வீரர்

 `காத்திருந்து, காத்திருந்து செய்த ஸ்டெம்பிங்’ - அறிமுக போட்டியிலே சர்ச்சைக்குள்ளான இங்கிலாந்து வீரர்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் 3 வாரங்களில் இங்கிலாந்தில் தொடங்கவுள்ளது. கிரிக்கெட்டை உலகுக்கு அறிமுகப்படுத்திய இங்கிலாந்து அணி இதுவரை ஒருமுறைகூட உலகக்கோப்பையை வென்றதில்லை. இந்த சோக வரலாறு இந்த முறையாவது மாறுமா என இங்கிலாந்து ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர். உலகக்கோப்பைக்குத் தயாராகும் விதமாக அயர்லாந்து அணியுடன் ஒருநாள் போட்டியில் நேற்று விளையாடியது. ஆர்ச்சர், பென் போக்ஸ் ஆகியோர் அறிமுக வீரர்களாகக் களமிறங்கினர்.

முதல் போட்டியிலே பென் போக்ஸ் சர்ச்சையான ஸ்டெம்பிங், அதிரடியான அரைசதம் என இருவேறு விதமாக முத்திரை பதித்தார். டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.  இந்தப்போட்டி மைதானத்தில் இருந்த ஈரப்பதம் காரணமாக தாமதமாகத் தொடங்கியது. அதனால் 45 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது. முதலில் ஆடிய அயர்லாந்து 43.1 ஓவர்களுக்கு 198 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்தப் போட்டியில் பென் போக்ஸ் கைவண்ணம் பலரின் பாராட்டையும், அதிருப்தியையும் பெற்றுள்ளது. 

டென்லி (Denly) வீசிய 25-வது ஓவரை ஆண்டி பால்பிரினி (Andy Balbirnie) எதிர்கொண்டார். முதல் இரண்டு பந்துகளில் ரன் எடுக்காதவர் வைடாக வந்த மூன்றாவது பந்தை ஸ்வீப் ஷாட் ஆட முயன்றார். பந்து பேட்டில் படாமல் விக்கெட் கீப்பரான பென் போக்ஸ் கையில் தஞ்சமானது. ஆண்டி பால்பிரினி கால்கள் கிரீஸுக்குள் இருந்ததைப் பார்த்த பென் போக்ஸ் அவர் கால்களை உயர்த்தும் வரை காத்திருந்து ஸ்டெம்பிங் செய்தார். நடுவர்களால் அவுட் கொடுக்கப்பட்டது.  பென் போக்ஸ் ஸ்டெம்பிங்கை, ``அற்புதமான யோசனை.. காத்திருந்து ஸ்டெம்பிங் செய்தார். இங்கிலாந்துக்கு திறமையான விக்கெட் கீப்பர் அடையாளம் காணப்பட்டுள்ளார்” என ஒரு தரப்பினர் புகழ்ந்து வருகிறார்கள்.

வேறு சிலரோ ``ஐபிஎல் தொடரில்  அஷ்வின் செய்த மன்கனட் அவுட்டைவிட மோசமான செயல் இது. பேட்ஸ்மேன் தடுமாறும் வரை காத்திருந்து ஸ்டெம்பிங் செய்வது என்ன வகையான ஸ்போர்ட்ஸ் ஸ்பிரிட் எனத் தெரியவில்லை என தங்களது ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளனர்.

இந்த விவாதங்களுக்கு இடையே இங்கிலாந்து அணி தனது இன்னிங்ஸை விளையாடியது. 62 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து தத்தளித்துக்கொண்டிருந்த இங்கிலாந்து அணியை தனது அதிரடி அரைசதத்தால் கரைசேர்த்தார் பென் போக்ஸ். இங்கிலாந்து அணி 42 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. பென் போக்ஸ் கடைசிவரை விக்கெட் இழக்காமல் 61 ரன்களை எடுத்தார். இந்தப் போட்டியில் அவர் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். 
 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு