Published:Updated:

``நானே உங்களை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறேன்!” - அஃப்ரிடி சுயசரிதைக்கு கம்பீர் பதிலடி

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி. அதிரடிக்குப் பெயர் போன இவர் ஆக்ரோஷமான கிரிக்கெட் வீரர். விளையாட்டில் மட்டுமல்லாது சில எதிரணி வீரர்களுடன் ஏற்பட்ட மோதல்களும் இதற்கு சான்று. கிரிக்கெட் போட்டிகளில் வீரர்களுக்குள் நடக்கும் மோதல்கள் பல இருந்தாலும் இந்திய - பாகிஸ்தான் வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் அஃப்ரிடி - கம்பீர் மோதல் இருநாட்டு ரசிகர்களாலும் மறக்க முடியாது. இந்த மோதல் தொடர்பாக அவர் எழுதிய `கேம் சேஞ்சர்’ சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார். கம்பீர் தொடர்பாக அவர் எழுதியிருக்கும் கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

``நானே உங்களை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறேன்!” - அஃப்ரிடி சுயசரிதைக்கு கம்பீர் பதிலடி

மைதானத்தில் நடக்கும் மோதல்கள் குறித்து தனது சுயசரிதையில் அஃப்ரிடி, ``சில மோதல்கள் தொழில்சார்ந்து இருக்கும். ஆனால் சில, தனிப்பட்ட மோதல்களாக அமைந்துவிடுகிறது. இந்த இடத்தில் கம்பீர் குறித்துச் சொல்ல வேண்டும். அவரது ஆட்டிடியூட்தான் பிரச்னை. எந்த ஆளுமையும் இல்லாத வீரர் அவர். அவர் காட்டும் ஆட்டிடியூட் அளவுக்கு ரெக்கார்டு இல்லாதவர்” என குறிப்பிட்டிருக்கிறார். 

ஆனால், புள்ளி விவரங்கள் வேறு விதமாக இருப்பதாக அஃப்ரிடிக்குப் பதிலடி கொடுத்து வருகின்றனர் இந்திய ரசிகர்கள். கம்பீர் அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார். ஒருநாள் கிரிக்கெட் டி20, டெஸ்ட் என ஆனைத்து வகையான சர்வதேசப் போட்டிகளையும் சேர்த்து 10,000 ரன்களுக்கு மேல் எடுத்திருக்கிறார். சராசரியும்  அஃப்ரிடியைவிட கம்பீருக்குச் சிறப்பாக இருக்கிறது. மேலும், டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் அற்புதமாகச் செயல்பட்டார். உலகக்கோப்பை இறுதிப் போட்டியை வெல்ல காரணமாக இருந்தார் என அஃப்ரிடிக்கு எதிராகக் கொதிக்கின்றனர் இந்திய ரசிகர்கள்.

``நானே உங்களை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறேன்!” - அஃப்ரிடி சுயசரிதைக்கு கம்பீர் பதிலடி

தனது சுயசரிதையில் மேலும் அஃப்ரிடி, ``டான் பிராட்மேன் மற்றும் ஜேம்ஸ் பாண்ட் ஆகியோரின் கலைவை போன்று நடந்துகொள்வார் கம்பீர். கராச்சியில் இவர் போன்ற நபர்களை `சரியல்’ (சிடுசிடுப்பான) என்று அழைப்போம். நான் பாசிட்டிவான நபர்களை விரும்புவேன். அவர்கள் ஆக்ரோஷமாக இருந்தாலும் எனக்குச் சவாலாக இருந்தாலும் விரும்புவேன். ஆனால், கம்பீர் பாசிட்டிவான நபர் கிடையாது.

2007-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில் கம்பீர் என்னுடன் மோதலில் ஈடுபட்டார். ஒரு சிங்கிள் எடுத்துவிட்டு நேராக என்னிடம் சண்டைக்கு வந்தார். அப்போது நடுவர்கள் வந்து அந்தப் பிரச்னையை முடித்து வைத்தனர். அவர்கள் முடிக்கவில்லை என்றால் நான் முடித்திருப்பேன். அன்று இருவரும் இருவீட்டுப் பெண்கள் குறித்தும் பேசி மோதிக்கொண்டோம்” என்றார். 

``நானே உங்களை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறேன்!” - அஃப்ரிடி சுயசரிதைக்கு கம்பீர் பதிலடி

அஃப்ரிடியின் கருத்து தற்போதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அவரது விமர்சனம் மோசமானதாக இருப்பதாகப் பலர் குறிப்பிடுகின்றனர். ஏற்கெனவே இவர் தனது சுயசரிதையில் உண்மையான வயதைக் குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது கம்பீர் தொடர்பான கருத்துகள் கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

``நானே உங்களை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறேன்!” - அஃப்ரிடி சுயசரிதைக்கு கம்பீர் பதிலடி

இந்நிலையில் அஃப்ரிடியின் கருத்துக்கு கம்பீர் பதிலடி கொடுத்திருக்கிறார். இதுதொடர்பாக ட்விட்டரில், ``நாங்கள் இன்னமும் பாகிஸ்தானியர்களுக்கு மருத்துவத்துக்கான விசா வழங்கி வருகிறோம். நானே தனிப்பட்ட முறையில் உங்களை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறேன்” எனக் கூறியுள்ளார். 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு