Published:Updated:

``அவர் மீது இருந்த நம்பிக்கையைச் சிதைத்துவிட்டார்!”- அலெக்ஸ் ஹேல்ஸ் நீக்கம் குறித்து மோர்கன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``அவர் மீது இருந்த நம்பிக்கையைச் சிதைத்துவிட்டார்!”- அலெக்ஸ் ஹேல்ஸ் நீக்கம் குறித்து மோர்கன்
``அவர் மீது இருந்த நம்பிக்கையைச் சிதைத்துவிட்டார்!”- அலெக்ஸ் ஹேல்ஸ் நீக்கம் குறித்து மோர்கன்

``அவர் மீது இருந்த நம்பிக்கையைச் சிதைத்துவிட்டார்!”- அலெக்ஸ் ஹேல்ஸ் நீக்கம் குறித்து மோர்கன்

போதைப் பொருள் விவகாரத்தில் இங்கிலாந்து அணியில் இருந்து அதிரடியாக கழற்றிவிடப்பட்டிருக்கிறார் அதிரடி வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ். 

``அவர் மீது இருந்த நம்பிக்கையைச் சிதைத்துவிட்டார்!”- அலெக்ஸ் ஹேல்ஸ் நீக்கம் குறித்து மோர்கன்

இம்மாத இறுதியில் தொடங்க இருக்கும் உலகக்கோப்பைத் தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இங்கிலாந்து அணியில் இடம் பிடித்திருந்தார் அதிரடி வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ். ஆனால், போதைப் பொருள் விவகாரத்தில் அவருக்கு எதிராக கொதித்து எழுந்துள்ளனர் இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர்கள். 

உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடி வந்த ஹேல்ஸ், மருத்துவப் பரிசோதனையின்போது போதைப் பொருள் எடுத்துக்கொண்டது தெரியவந்தது. இதன் காரணமாக அவருக்கு 21 நாள்கள் கிரிக்கெட் விளையாடுவதற்குத் தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் உலகக்கோப்பை தொடரில் நீடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. 

இந்த நிலையில், நேற்று பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன், `ஹேல்ஸ் அவர் மீது இருந்த நம்பிக்கையை அவர் இழந்துவிட்டார்' எனக் கடுமையாகச் சாடினார். இந்த விவகாரம் தொடர்பாக விரிவாகப் பேசிய மோர்கன், ``இந்த விவகாரம் தொடர்பாக பயிற்சியாளரிடம் பேசினேன். அணியில் இருக்கும் அனைத்து மூத்த வீரர்களிடம் பேசினேன். குறிப்பாக இது தொடர்பாக மூத்த வீரர்கள் ஒன்றாக அமர்ந்து பேசினோம். 

``அவர் மீது இருந்த நம்பிக்கையைச் சிதைத்துவிட்டார்!”- அலெக்ஸ் ஹேல்ஸ் நீக்கம் குறித்து மோர்கன்

இந்தக் கூட்டத்தில், இந்த விவகாரம் அணியை எப்படி எல்லாம் பாதிக்கும் என்பது குறித்துப் பேசினோம். கடந்த 18 மாதங்களாக உலகக்கோப்பை தொடருக்காக கடுமையான பயிற்சிகள் மேற்கொண்டு தயாராகி வருகிறோம். ஆனால், ஹேல்ஸ் அணியின் மதிப்பைக் குறைக்கும் விதமாகச் செயல்பட்டுள்ளார். எங்கள் அணி வீரர்கள் அவர் மீது கொண்ட நம்பிக்கையை அவர் உடைத்துவிட்டார். இந்தக் கூட்டத்தில் அனைவரின் ஒருமித்த கருத்தும் ஹேல்ஸை அணியில் இருந்தும் கழற்றிவிடுவதுதான் சரி என்பதுதான்” என்றார். ஆனாலும் யார் யார் சந்தித்துப் பேசினார்கள் என்பது குறித்து எதுவும் அவர் பேசவில்லை. 

மேலும் பேசியவர், ``ஒரு குழுவாக செயல்படும்போது அணியின் கலாசாரம் என்பது முக்கியமானது. குறிப்பாக உலகக்கோப்பை மற்றும் ஆஷஸ் மாதிரியான தொடர்கள் வரும் சூழலில் இது மிக முக்கியம். அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என நாங்கள் முடிவு செய்யவில்லை. அதை நாங்கள் செய்யவும் முடியாது. நாங்கள் இது தொடர்பாக பேச மட்டும்தான் முடியும். தேர்வுக்குழுவினர்தான் அவரை நீக்கும் முடிவை எடுத்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக அலெக்ஸ் ஹேல்ஸிடம் நான் பேசவும் செய்தேன். அவருக்கு எங்களின் ஆதரவு இருக்கும் என தெரிவித்தேன். அவர் இந்த ஆதரவைக் கொண்டு மீண்டும் நம்பிக்கையை வளரச் செய்ய வேண்டும்” என்றார்.

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு