Published:Updated:

`உலகிலேயே தோனிதான் மிகச் சிறந்த கேப்டன்!'- பூரிக்கும் பிராவோ

`உலகிலேயே தோனிதான் மிகச் சிறந்த கேப்டன்!'- பூரிக்கும் பிராவோ
`உலகிலேயே தோனிதான் மிகச் சிறந்த கேப்டன்!'- பூரிக்கும் பிராவோ
`உலகிலேயே தோனிதான் மிகச் சிறந்த கேப்டன்!'- பூரிக்கும் பிராவோ

சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை ஒரு மாஸ் என்கவுன்டர் செய்தது. இப்போது ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மும்பை அணிக்கு எதிராக தோனி இல்லாமல் களமிறங்கியது சி.எஸ்.கே. அந்தப்போட்டியில் ஒரு மோசமான தோல்வி கிடைத்தது. இதற்கு அடுத்த போட்டியில் தோனி தலைமையில் ஒரு மாஸ் என்கவுன்டரை செய்தது.  ‘தோனியின் தலைமைப் பண்பு குறித்துப் பேச நிறைய இருக்கிறது. இதில் எந்த ரகசியமும் இல்லை. உலகிலேயே அவர் மிகச்சிறந்த கேப்டன்’ எனச் சென்னை வீரர் பிராவோ தெரிவித்துள்ளார்.  

மேலும் பேசிய பிராவோ, `ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் திறமையாக இளம்வீரர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது இந்திய அணிக்கு மட்டுமல்லாது சர்வேத அணிகளுக்குப் பெரும் உதவியாக இருக்கிறது. இளம்வீரர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்வதற்கு இது மிகச்சிறந்த தளமாக உள்ளது. தலைசிறந்த பயிற்சியாளர்களின் கீழ் பணிபுரியும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கிறது. சென்னை எனக்குப் பிடித்த அணிகளில் ஒன்று. இங்கு எனக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். சி.எஸ்.கே ஜெர்ஸியை விரும்பி அணிகிறேன். உலகிலேயே தோனிதான் மிகச் சிறந்த கேப்டன்” எனக் கூறியுள்ளார். 

Vikatan