Published:Updated:

பராசக்தி எக்ஸ்பிரஸ் முன் தலைகீழாகக் குதித்து நசுங்கிய டெல்லி கேபிட்டல்ஸ்! #CSKvsDC

பராசக்தி எக்ஸ்பிரஸ் முன் தலைகீழாகக் குதித்து நசுங்கிய டெல்லி கேபிட்டல்ஸ்! #CSKvsDC

கடைசியாக ஏப்ரல் ஆரம்பத்தில் தோனி இங்கே பேட்டிங் செய்தார். அதன்பின் அவர் இறங்கவே இல்லை. அதனால் எக்ஸ்ட்ரா உற்சாகத்தோடு அவரை வரவேற்றார்கள் ரசிகர்கள்.

Published:Updated:

பராசக்தி எக்ஸ்பிரஸ் முன் தலைகீழாகக் குதித்து நசுங்கிய டெல்லி கேபிட்டல்ஸ்! #CSKvsDC

கடைசியாக ஏப்ரல் ஆரம்பத்தில் தோனி இங்கே பேட்டிங் செய்தார். அதன்பின் அவர் இறங்கவே இல்லை. அதனால் எக்ஸ்ட்ரா உற்சாகத்தோடு அவரை வரவேற்றார்கள் ரசிகர்கள்.

பராசக்தி எக்ஸ்பிரஸ் முன் தலைகீழாகக் குதித்து நசுங்கிய டெல்லி கேபிட்டல்ஸ்! #CSKvsDC

இழுத்துப் பிடித்து எல்லாரையும் குலதெய்வத்துக்கு மொட்டை போடுவதாக வேண்ட வைத்து கடைசியாக ப்ளே ஆஃப்புக்குள் நுழைவதுதான் சென்னையின் வழக்கம். 'ப்ளே ஆஃப்ன்னா இந்த ப்ளே ஸ்டோர்ல இருக்குற ஆப்தானே' என மொக்க காமெடி செய்வது டெல்லியின் பழக்கம். ஆனால், 2019-ன் இரண்டாவது அதிசயமாக (முதல் அதிசயம் ரவீந்திர ஜடேஜா ரன் அடிக்க ஆரம்பித்தது) இந்த இரு அணிகளும் மற்ற அணிகளை முந்தி நாக் அவுட் ஸ்டேஜுக்குள் நுழைந்தன. பொதுவாக, முதல் இரண்டு இடங்களில் இடம்பிடிக்கும் அணிகளுக்கு ஃபைனல் செல்ல அதிக வாய்ப்பு என்பதால் எப்படியாவது வெற்றிக்கோட்டை தொட வேண்டும் என்ற நினைப்போடு நேற்று களமிறங்கின இரண்டு அணிகளும்.

சேப்பாக்கத்தில் சுண்டப்படும் டாஸ் காயின்கூட தோனி சொல்படிதான் நடக்கும். நேற்று ஏனோ ஸ்ரேயாஸுக்கு அடித்தது யோகம். டாஸ் ஜெயித்த கேப்டன் இந்தத் தொடரில் 1256-வது முறையாக பீல்டிங்கைத் தேர்வு செய்தார். தோனி, டு ப்ளெஸிஸ், ஜடேஜா மீண்டும் அணிக்கு வந்ததால் விஜய், சான்ட்னர், ஷோரி மறுபடியும் பெஞ்ச்சில் உட்கார்ந்தனர். சென்னை அணியைப் பின்பற்றி மூன்று ஸ்பின்னர்களோடு களமிறங்கியது டெல்லி. 

ஓப்பனிங் இறங்கியது வாட்சனும் டு ப்ளெஸ்ஸியும். இருவருமாகச் சேர்ந்து எதையோ தேடிக்கொண்டேயிருந்தார்கள். மூன்றாவது ஓவரின் முடிவில்தான் அவர்கள் அவ்வளவு நேரமாகத் தேடியது பந்தைத்தான் என்பதே தெரிய வந்தது. ஓவருக்கு ஒரு ரன் வீதம் 3 ஓவர்களில் 3 ரன்கள். 'ம்ஹூம் இது சரிப்படாது, அடிச்சிற வேண்டியதுதான்' என ஸ்லீவையெல்லாம் சுருட்டி ஒரு இழு இழுத்தார் வாட்டோ. அங்கே பீல்டர் இருந்தால் பாவம் அவரென்ன செய்வார்? அவுட்!

பராசக்தி எக்ஸ்பிரஸ் முன் தலைகீழாகக் குதித்து நசுங்கிய டெல்லி கேபிட்டல்ஸ்! #CSKvsDC

ரெய்னாவின் கேரியரில் மோசமான ஐ.பி.எல் சீஸன் இது எனக் கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம். அது தெரிந்தோ என்னவோ தொடக்கம் முதலே அதிரடி காட்டினார் அவர். கவர் ட்ரைவ், ஸ்வீப், புல் ஷாட் என டெக்ஸ்ட்புக் ஷாட்களையெல்லாம் அடித்துக் காட்டி 'சின்ன தல' என நிரூபித்தார். பவர்ப்ளே முடிவில் 27 ரன்கள் எடுத்திருந்தது சென்னை. இந்த சீஸனில் பவர்ப்ளேயில் குறைந்த ரன்கள் எடுத்து முதல் மூன்று இடங்களைப் பிடித்திருப்பது சி.எஸ்.கே-தான்.

ஸ்பின்னர்கள் சுசித்தும் மிஸ்ராவும் அதற்குப் பின்னரும் குடைச்சல் கொடுத்தனர். அடுத்த 4 ஓவர்களில் 26 ரன்கள் எடுத்தது. ஸ்கோர் 53/1. சூர்யவம்சம் சின்ராசு குழந்தை குட்டிகளைப் பாடித் தூங்க வைப்பதைப்போல சி.எஸ்.கே பேட்ஸ்மேன்கள் ஆடித் தூங்க வைத்தார்கள். அதன்பின், அவர்களுக்குமே போரடித்திருக்குமோ என்னவோ... கொஞ்சம் கொஞ்சமாக வேகம் கூட்டினார்கள். அடுத்த மூன்று ஓவர்களில் 28 ரன்கள். கூடவே டு ப்ளெஸ்ஸியும் நடையைக் கட்டினார். 

பராசக்தி எக்ஸ்பிரஸ் முன் தலைகீழாகக் குதித்து நசுங்கிய டெல்லி கேபிட்டல்ஸ்! #CSKvsDC

கடைசியாக சென்னை ரசிகர்கள் எதிர்பார்த்த அந்தத் தருணம் வந்தேவிட்டது. ஏப்ரல் ஆரம்பத்தில் தோனி இங்கே பேட்டிங் செய்தார். அதன்பின் அவர் இறங்கவே இல்லை. அதனால் எக்ஸ்ட்ரா உற்சாகத்தோடு அவரை வரவேற்றார்கள் ரசிகர்கள். சுஷித் வீசிய 15 வது ஓவரை டார்கெட் செய்த ரெய்னா அடித்து வெளுத்த கையோடு பெவிலியன் திரும்பினார். ராயுடுவுக்குப் பதில் சர்ப்ரைஸாக இறங்கினார் ஜடேஜா! மற்றுமொரு சர்ப்ரைஸ் இந்த முறையும் ஏமாற்றாமல் ரன்களை சேர்த்தார். போல்ட்டின் பந்தை லாங் ஆனில் அவர் சிக்ஸ் அடிக்க லைட் ஹவுஸ் வெளிச்சம் பந்தின் மீது பட்டுத் திரும்பியது. பத்தே பந்துகளில் 25 ரன்கள்.

கடைசி இரண்டு ஓவர்கள் முழுக்க தோனி கையில்! 'பழக்கவழக்கமெல்லாம் பீச்சோட நிறுத்திக்கிடணும் மேட்ச்ல எல்லாம் எதிர்பார்க்கக் கூடாது' என முன்னாள் சி.எஸ்.கே ப்ளேயரான மோரிஸை முதலில் கிழித்துத் தொங்கவிட்டார். கடைசி ஓவர் ட்ரென்ட் போல்ட்! 

"யார்க்கர் போட்டா என்ன பண்ணுவ?" - ''பவுண்டரி அடிப்பேன்'', ''ஆஃப் கட்டர் போட்டா?'' - ''சிக்ஸ் அடிப்பேன்!'', ''ஷார்ட் பால்?'' - ''அதையும் போட்டுப் பொளப்பேன்'', ''அப்ப இந்தாங்க என்னோட ரெசிக்னேஷன் லெட்டர்!'' - 20வது ஓவர் முடிவில் இப்படித்தான் கிவ் அப் கொடுத்தார் போல்ட். தோனி 22 பந்துகளில் 44 ரன்கள். முதல் மூன்று ஓவர்களில் தமிழக பா.ஜ.க போல ஆக்சிஜனுக்கு ஊசலாடிக்கொண்டிருந்த ஸ்கோர் 20 ஓவர்கள் முடிவில் ஹல்க் போல பிரமாண்டமானது. டார்கெட் 180.

இந்த ஸ்கோரை டெல்லியின் முதல் நான்கு பேட்ஸ்மேன்கள் அடித்தால்தான் உண்டு. அதேபோல இரண்டாவது பந்தில் பவுண்டரி அடித்து கணக்கைத் தொடங்கினார் ஷா. ஆனால், அந்தப் பந்து கோட்டைத் தொட்டு திரும்பிவரும் முன்னரே அவுட்டாகி நடையைக் கட்டினார். இரண்டாவது ஓவர் வழக்கம்போல பாஜி. நான்கு ரன்கள். அதற்கும் சேர்த்து அடுத்த ஓவரில் 13 ரன்கள் கொடுத்தார் பாஜி. சஹாரும் கை சிவக்க சிவக்க வாரி வழங்க ஐந்தே ஓவர்களில் ஐம்பதைத் தொட்டது ஸ்கோர்.

பராசக்தி எக்ஸ்பிரஸ் முன் தலைகீழாகக் குதித்து நசுங்கிய டெல்லி கேபிட்டல்ஸ்! #CSKvsDC

ஆறாவது ஓவரில் ஸ்வீப் அடிக்க ஆசைப்பட்டு ஸ்டம்ப்பை பறிகொடுத்தார் தவான். 'ஓவருக்கு ஒரு பவுண்டரி அடிச்சா நாம ஜெயிச்சுடலாம்' என கோச் சொன்னது மைதான இரைச்சலில் பேட்ஸ்மேன்கள் காதில் தப்பாக விழுந்திருக்கும்போல! ஓவருக்கு ஒரு விக்கெட்டைக் கொடுத்தார்கள். பன்ட்டை அவுட்டாக்கிய தாஹிர் பாரீஸ் கார்னர் வரை பறக்க, ஓலா புக் பண்ணி திரும்ப அழைத்துவந்தார்கள்.

ஜடேஜாவின் சுழலில் எல்.பி.டபிள்யூ ஆனார் இங்க்ரம். ஸ்கோர் 67/4. சந்திரமுகியில் கோவாலு ஒற்றையாளாக உட்கார்ந்து வெள்ளை அடிப்பதுபோல களத்தில் கேப்டன் ஸ்ரேயாஸ் மட்டும்விடாமல் போராடிக்கொண்டிருந்தார். பத்து ஓவர்கள் முடிவில் 80 ரன்கள். 'என்னது ரெண்டு ஓவரா விக்கெட் விழலையா. இந்தாங்க பிடிங்க ஒரே ஓவர்ல ரெண்டு விக்கெட்டு' என பெருந்தன்மையாக பெவிலியன் கிளம்பினார்கள் அக்‌ஸர் படேலும் ரூதர்போர்டும். இவர்களை பேக் செய்த தாஹிர் ஓ.எம்.ஆர் ரோடுவரை ஓடி ரியல் எஸ்டேட் நிலவரங்களை எல்லாம் கேட்டுவிட்டு வந்தார்.

பராசக்தி எக்ஸ்பிரஸ் முன் தலைகீழாகக் குதித்து நசுங்கிய டெல்லி கேபிட்டல்ஸ்! #CSKvsDC

அடுத்த ஓவரில் லேசாக காலைத் தூக்கிய மோரிஸை ஸ்டம்புக்குப் பின்னாலிருந்து காலி செய்தார் தோனி. மோரிஸ் அவுட்டானதன் ரீப்ளே முடிவதற்குள், 'அட அதை என்னத்த அசிங்கமா அங்க பாத்துகிட்டு... இந்தா இப்படித்தான் அவுட்டானாப்ல' என ஸ்ரேயாஸ் ஐயர் அதை டெமோ காட்டி பை சொல்லிவிட்டுக் கிளம்பினார். 

48 பந்துகளில் 95 ரன்கள் தேவை. இரண்டு விக்கெட்கள் கைவசம். சிம்புவை யாரோ லிட்டில் சூப்பர்ஸ்டார் என நம்பவைத்திருப்பது போல அமித் மிஸ்ராவை அவர் ஒரு பேட்ஸ்மேன் என யாரோ நம்ப வைத்திருக்கிறார்கள். கட் ஷாட், ஊப்பர் கட், ஸ்லாக் ஸ்வீப் என ஏகப்பட்ட ஷாட்களை முயற்சி செய்துகொண்டிருந்தார். ஆனால், பந்து மட்டும் தப்பியும்கூட பேட்டில்படாமல் தோனியின் க்ளவுசில் தஞ்சமடைந்தது. மறுபக்கம் தேவையே இல்லாமல் சிங்கிள் ஓடப்பார்த்து ரன் அவுட்டானார் சுசித்.

பராசக்தி எக்ஸ்பிரஸ் முன் தலைகீழாகக் குதித்து நசுங்கிய டெல்லி கேபிட்டல்ஸ்! #CSKvsDC

இப்படியாக எல்லா ஷாட்களையும் காற்றில் கைவீசி ஆடிப்பார்த்த அமித் மிஸ்ரா தாஹிர் பாலில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். நான்கு விக்கெட்கள் எடுத்த குஷியில் தாஹிர் ஓடியே பஞ்சாப் பார்டர் போய்விட்டதாகவும் அடுத்த ஆட்டத்துக்காக மற்றவர்கள் நாளை கிளம்ப இருப்பதாகவும் தகவல். ஜடேஜாவுக்கு மூன்று விக்கெட்கள். ரன்ரேட்டில் செம பாய்ச்சல் போட்டு டேபிள் டாப்பராகவும் உட்கார்ந்துவிட்டது சென்னை அணி. அநேகமாக முதல் குவாலிஃபையரை சென்னை அணி ஆடுவதற்கான வாய்ப்புகள்தான் அதிகம்.

மேன் ஆஃப் தி மேட்ச் விருது வாங்கிய தோனி, 'என் பெயரைச் சொல்லி எல்லாம் யாரும் அழைப்பதில்லை. இவர்களுக்கு நான் 'தல'. தல மட்டும்தான். அப்படி அழைக்கப்படுவதில்தான் எனக்கு ரொம்பவே சந்தோஷம்' என நெகிழ்ந்தார். இதைக் கேட்டு 'எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை' பாட்டு மனதுக்குள் ஓடினால் நீங்களும் சி.எஸ்.கே ரசிகரே!