Published:Updated:

`2003 ல் எனக்கு ஏற்பட்ட அந்த வலி...' - பழைய நினைவுகள் குறித்து வருந்தும் விவிஎஸ் லட்சுமண்!

`2003 ல் எனக்கு ஏற்பட்ட அந்த வலி...' - பழைய நினைவுகள் குறித்து வருந்தும் விவிஎஸ் லட்சுமண்!
`2003 ல் எனக்கு ஏற்பட்ட அந்த வலி...' - பழைய நினைவுகள் குறித்து வருந்தும் விவிஎஸ் லட்சுமண்!

உலகக்கோப்பை அணியில் அம்பதி ராயுடு தேர்வு செய்யப்படாதது குறித்து விவிஎஸ் லட்சுமண் பேசியுள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, மே 30-ம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி குறித்த சர்ச்சை இன்னும் அடங்கவில்லை. விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட அணியில் அம்பதி ராயுடு, ரிஷப் பன்ட்டுக்கு பதிலாக தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகியோர் இடம்பெற்றனர். இந்த விவகாரத்தில் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் வந்த வண்ணம் உள்ளன. முன்னாள் வீரர்கள் கம்பீர் அம்பதி ராயுடுவுக்கு ஆதராகப் பேச, கங்குலியோ தினேஷ் கார்த்திக், விஜய் சங்கரை அணியில் சேர்த்தது சரிதான் எனப் பேசினார். இந்நிலையில் முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமண் இந்த விவகாரம் குறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ளார். 

அதில், ``நிச்சயம் அம்பதி ராயுடுவுக்கு இது மிகப்பெரிய ஏமாற்றம் கொடுத்திருக்கும். உலகக்கோப்பை அணியில் இடம் பிடிப்பதற்கான வாய்ப்பு அவருக்கு இருந்ததாகவே நான் நினைத்தேன். 2018 ம் ஆண்டு நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரிலிருந்து 4வது வீரராகத் தொடர்ந்து சிறந்த இன்னிங்ஸை விளையாடியுள்ளார். அந்தத் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரரும் அவர்தான். இப்படி நல்ல அனுபவம் வாய்ந்த பேட்டிங் திறனை வெளிப்படுத்திய பிறகும் அவர் அணியில் எடுக்கப்படாதது ஆச்சர்யமான ஒன்றுதான்.

இது கண்டிப்பாக வலி நிறைந்த ஒன்றுதான். இதே வலி எனக்கு 2003ம் ஆண்டு ஏற்பட்டது. 2003ல் நானும் அந்த வலியை உணர்ந்தேன். ஆனால், ஒரு சர்வதேச வீரராக இதிலிருந்து வலிமையுடன் மீண்டு வர வேண்டும். இதனை ராயுடு செய்வார் என நம்பிக்கை இருக்கிறது" என 2003 ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளுக்கு விவிஎஸ் லட்சுமணுக்கு பதிலாக தினேஷ் மோங்கியா அணியில் எடுக்கப்பட்டது குறித்து பேசினார்.

அடுத்த கட்டுரைக்கு