Published:Updated:

`அவர் போராளி மட்டுமல்ல, வெற்றியாளரும்கூட; தவறு செஞ்சிட்டீங்க!'- ரிசப் பன்ட் குறித்து பாண்டிங் வருத்தம்

`அவர் போராளி மட்டுமல்ல, வெற்றியாளரும்கூட; தவறு செஞ்சிட்டீங்க!'-  ரிசப் பன்ட் குறித்து பாண்டிங் வருத்தம்
`அவர் போராளி மட்டுமல்ல, வெற்றியாளரும்கூட; தவறு செஞ்சிட்டீங்க!'- ரிசப் பன்ட் குறித்து பாண்டிங் வருத்தம்

ரிசப் பன்ட் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேசியுள்ளார்.

உலகக்கோப்பைக்கான இந்திய அணி, கடந்த 15-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அன்று முதல் சர்ச்சைகள் வந்தவண்ணம் இருக்கின்றன. ரிசப் பன்ட், அம்பதி ராயுடு ஆகியோர், அணிக்குத் தேர்வுசெய்யப்படாதது குறித்து முன்னாள், இந்நாள் வீரர்கள் மத்தியில் விவாதம் போய்க் கொண்டே இருக்கிறது. சிலர் ரிசப் பன்ட், அம்பதி ராயுடுவுக்கு ஆதரவாகவும், சிலர் தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் தேர்வுக்கு ஆதரவாகவும் கருத்துகள் தெரிவித்துவருகின்றனர். இதற்கிடையே, இந்த விவகாரம்குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும், இந்நாள் டெல்லி அணியின் பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங் பேசியுள்ளார். 

அதில், ``உலகக்கோப்பைக்கு  ஆட முடியாமல்போனது குறித்து பன்ட் நிச்சயம் விரக்தி அடைவார். எனது பார்வையில், ரிசப்பை எடுக்காதது ஒரு தவறான முடிவு என்றே நினைக்கிறேன். இந்த விஷயத்தில் இந்தியா தவறு செய்துவிட்டது. இங்கிலாந்து நாட்டு சூழ்நிலைகளை, பிட்சுக்களைப் பொறுத்தவரை ரிசப் இருந்திருந்தால் மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தியிருப்பார். உலகக்கோப்பை போட்டிகளில் அவர் ஆட்டங்களைப் பார்க்கலாம் என விரும்பினேன். ஆனால், அவர் தேர்வுசெய்யப்படவில்லை எனத் தெரிந்தபோது, அவரிடம் சென்று `உடம்பை ஃபிட்டாக வைத்திருந்தால், மூன்று அல்லது நான்கு உலகக்கோப்பைகளில் விளையாடக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன’ எனக் கூறினேன்.

பிரித்திவி ஷா, ஸ்ரேயாஸ் அய்யர் இருவரும் அற்புதத் திறமை உள்ள இளைஞர்கள். ரிசப் தன்னை தானே வேறு தளத்துக்கு எடுத்துக்கொண்டு செல்கிறார். போராட்ட சூழ்நிலைகளில் இறங்கி விளையாடுவது இவருக்கு பிடித்தமான ஒன்றாக உள்ளது. உண்மையிலேயே அவர் போராளி மட்டுமல்ல, வெற்றியாளரும்கூட" என ரிக்கி பாண்டிங் புகழ்ந்துள்ளார்.