Published:Updated:

ராயுடு, பன்ட் எடுக்காதது சரியே... உலகக் கோப்பைக்கு இந்த இந்திய அணிதான் பெஸ்ட். ஏன்?! #CWC19

ராயுடு, பன்ட் எடுக்காதது சரியே... உலகக் கோப்பைக்கு இந்த இந்திய அணிதான் பெஸ்ட். ஏன்?! #CWC19
News
ராயுடு, பன்ட் எடுக்காதது சரியே... உலகக் கோப்பைக்கு இந்த இந்திய அணிதான் பெஸ்ட். ஏன்?! #CWC19

இப்போதே உலகக் கோப்பைக்குத் தேர்வு செய்துவிட்டு, அங்கு கொஞ்சம் சொதப்பினாலும், இன்னும் பல மடங்கு நாம் உக்கிரம் கொள்வோம். அவரது வீட்டைத் தாக்கவும் தயங்க மாட்டோம். 2007 உலகக் கோப்பையின்போது தோனியின் வீட்டையே இடித்தவர்கள் அல்லவா நாம்! ஒருவகையில் இது பன்டின் வளர்ச்சிக்கு நல்ல விஷயமே! 

2019 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், சுமார் இரண்டு மணி நேர ஆலோசனைக்குப் பிறகு, இங்கிலாந்து செல்லும் 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்ட அணியில், தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் இருவர் இடம்பெற்றுள்ளனர். கடந்த சில மாதங்களாக நம்பர் 4 பொசிஷனில் விளையாடிவந்த அம்பாதி ராயுடு, உலகக் கோப்பை அணியில் இடம்பெறவில்லை. ராயுடு, பன்ட் ஆடாதது நிச்சயம் நல்ல விஷயம்தான். ஏன்? அலசுவோம்...

கடந்த சில மாதங்களாக, உலகக் கோப்பையில் ஆடும் இந்திய அணியில் யார் விளையாடுவார்கள் என்று எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. நம்பர் 4 பொசிஷன் கடைசிவரை உறுதிசெய்யப்படாமல் இருக்க, பேக் அப் கீப்பர் யார், பேக் அப் ஆல்ரவுண்டர் யார், நான்காவது வேகப்பந்துவீச்சாளர் யார், அணியில் எத்தனை ஸ்பின்னர்கள் என எக்கச்சக்க கேள்விகள் எழுந்த நிலையில், இன்று அதற்குப் பதில் சொல்லியிருக்கிறது இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு. 

கோலி, ரோஹித், தவான், தோனி, ஜாதவ், பாண்டியா, குல்தீப், சஹால், புவி, பும்ரா, ஷமி - இந்த 11 பேரும் விளையாடுவது உறுதிசெய்யப்பட்ட நிலையில், மற்ற 4 இடங்களுக்குத்தான் பெரும் போட்டி இருந்தது. அதில், அனைவரும் அதிகம் எதிர்பார்த்தது நம்பர் 4 பொசிஷன். 2017 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப் பிறகு, ராயுடு, ரஹானே, மனீஷ் பாண்டே, ஸ்ரேயாஷ் ஐயர், கே.எல்.ராகுல், ரிசப் பன்ட் எனப் பலரையும் சோதித்துப் பார்த்தது இந்திய அணி நிர்வாகம். கேப்டன் கோலி, தோனி கூட சில போட்டிகளில் அந்த இடத்தில் விளையாடினார்கள். ஆனால், யாருடைய செயல்பாடுமே திருப்திகரமாக இல்லை. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக அம்பாதி ராயுடு, அந்தப் பொசிஷனில் அதிக வாய்ப்பு பெற்றார். 14 போட்டிகளில், சுமார் 42 என்ற சராசரி வைத்திருந்தார். அவர் கட்டாயம் அணியில் ஆடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், இன்று பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சொதப்பியது, ஐ.பி.எல் தொடரில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறியது, அவருக்குப் பாதகமாக அமைந்துவிட்டது. இப்போது நம்பர் 4 இடத்தில், விஜய் சங்கரைத் தேர்வு செய்துள்ளது இந்திய அணி நிர்வாகம். ராகுல், தினேஷ் கார்த்திக் ஆகியோர் அணியில் இருந்தாலும், சங்கர்தான் நான்காவது இடத்தில் களமிறங்குவார் என்று தெரிகிறது. 

பத்திரிகையாளர்களிடம் பேசிய தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், ``விஜய் சங்கர், அணிக்குப் பல ஆப்ஷன்கள் கொடுக்கிறார். அவரது பந்துவீச்சு, அணியின் பௌலிங் ஆப்ஷன்களை அதிகப்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல், அவர் நல்ல ஃபீல்டரும்கூட" என்று கூறினார். மேலும், ராகுல் `பேக் அப் ஓப்பனர்' என்றும், தினேஷ் கார்த்திக் `பேக் அப் கீப்பர்' என்றும் அவர்களின் ரோலை அவர் குறிப்பிட்டுச் சொன்னதிலிருந்து, விஜய் சங்கர்தான் நான்காவது வீரராக விளையாடுவார் என்று தோன்றுகிறது. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான தொடர்களில், பொறுப்பாக விளையாடிய சங்கர், தன் முதல் உலகக் கோப்பையில் விளையாடவுள்ளார். 

இன்னொரு வகையில் பார்த்தாலும், ராயுடுவை விட சங்கர் நல்ல தேர்வுதான். ராயுடு, பெரும்பாலும் நெருக்கடி இல்லாத ஆட்டங்களிலேயே சிறப்பாக ஆடியிருக்கிறார். பெரிய ஸ்கோர்களை சேஸ் செய்யும்போது, டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இல்லாவிடில், ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அமைக்க ராயுடு திணறவே செய்திருக்கிறார். ஆனால், விஜய் சங்கர் இதுவரை ஆடியுள்ள 5 ஒருநாள் இன்னிங்ஸிலுமே பொறுப்பாக விளையாடியிருக்கிறார். அதேசமயம், ஆட்டம் போகப் போக கியர்களை மாற்றி, ரன்ரேட்டைக் கூட்டுவதிலும் ராயுடுவைவிட அவரே நல்ல சாய்ஸ்! இன்னொரு குறிப்பிட்ட விஷயம், தேர்வுக்குழுத் தலைவர் சொன்னதைப்போல், விஜய் சங்கர் நல்ல ஃபீல்டரும்கூட. ஆனால், ராயுடு? கடைசிவரை இந்திய அணியோடு பயணித்த ராயுடுவுக்கு, க்ளைமாக்ஸ் எதிர்பார்த்தபடி இல்லை! 

அடுத்து பெரும்பாலானவர்கள் எழுப்பும் கேள்வி ரிசப் பன்ட் பதிலாக, தினேஷ் கார்த்திக் ஏன் என்பதுதான். ``பன்ட்டின் கீப்பிங்கைவிட, தினேஷ் கார்த்திக்கின் கீப்பிங் நம்பத் தகுந்தது. பன்ட், கார்த்திக், யாராக இருந்தாலும், தோனி காயமடைந்தால் மட்டுமே விளையாடுவார்கள். தோனியின் இடத்தை நிரப்ப நிச்சயம் அனுபவம் தேவை. தினேஷ் கார்த்திக் பல போட்டிகளில், நெருக்கடியைச் சமாளித்து சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். அதனால்தான் தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்" என்று கூறினார் பிரசாத். அதுமட்டுமல்ல, பல வகையிலும் இது சரியான தேர்வு என்றே தோன்றுகிறது. 2007 உலகக் கோப்பைக்குப் பின், இப்போது தன் இரண்டாவது உலகக் கோப்பையில் பங்கேற்கப்போகிறார் டி.கே.

பன்ட் ஆடாதது ஒருவகையில் அவருக்கே நல்லதுதான். ஏனெனில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மொஹாலி ஒருநாள் போட்டியில் கொஞ்சம் சொதப்பியதற்கே, கடும் விமர்சனத்துக்கு ஆளானார் பன்ட். களத்திலேயே அவரை கடுமையாகச் சாடினார்கள் ரசிகர்கள். ஆனால், ஒரு விஷயத்தை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். பன்ட் இன்னும் முழுமையான வீரர் இல்லை. பேட்டிங், கீப்பிங், அதைத்தாண்டி போட்டியை அணுகும் மனநிலை என எல்லா விஷயத்திலும் அவர் இன்னும் முழுமையாகவேண்டியிருக்கிறது. அதற்கு அவகாசம் தருவது முக்கியம். இப்போதே உலகக் கோப்பைக்குத் தேர்வு செய்துவிட்டு, அங்கு கொஞ்சம் சொதப்பினாலும், இன்னும் பல மடங்கு நாம் உக்கிரம் கொள்வோம். அவரது வீட்டைத் தாக்கவும் தயங்க மாட்டோம். 2007 உலகக் கோப்பையின்போது தோனியின் வீட்டையே இடித்தவர்கள் அல்லவா நாம்! ஒருவகையில் இது பன்ட்டின் வளர்ச்சிக்கு நல்ல விஷயமே! 

ஹர்டிக் பாண்டியாவின் ஃபிட்னஸ் கொஞ்சம் பிரச்னைக்குரியது என்பதால், கட்டாயம் அவருக்கு ஒரு பேக் அப் ஆல்ரவுண்டர் தேவை. விஜய் சங்கரை முழு பேட்ஸ்மேனாக மட்டுமே அணி நிர்வாகம் கருதியுள்ளது. ``விஜய் சங்கரை நாங்கள் பேட்ஸ்மேனாக மட்டுமே பார்க்கிறோம். அவர் பௌலிங் செய்யக்கூடிய பேட்ஸ்மேன்" என்று கூறினார் பிரசாத். அவர் ஆல்ரவுண்டராகக் கருதப்படாததால், அந்த இடத்தை ரவீந்திர ஜடேஜா பெற்றுவிட்டார். அதேபோல், இந்த ஐ.பி.எல் தொடரில் பட்டையைக் கிளப்பியதால், உலகக் கோப்பை அணியில் தன் இடத்தை உறுதி செய்துள்ளார் கே.எல்.ராகுல். 

மூன்று வேகப்பந்துவீச்சாளர்களை மட்டும் தேர்வு செய்ததிலிருந்தே, பிளேயிங் லெவனில் இரண்டு ஸ்பின்னர்கள் களமிறங்கப்போவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹர்டிக் பாண்டியா, விஜய் சங்கர் இருவருமே வேகப்பந்துவீச்சாளர்கள் என்பதால், நான்காவது பௌலருக்கான தேவை ஏற்படவில்லை. ஆனால், நான்கு வேகப்பந்துவீச்சாளர்கள் இந்திய அணியோடு, `பேக் அப்' வீரர்களாக இங்கிலாந்துக்குப் பயணப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பையின்போது, அணியின் நெட் பௌலர்களாகவும், காயம் ஏற்பட்டால் மாற்று வீரர்களாகவும் அவர்களை அணி நிர்வாகம் பயன்படுத்தவுள்ளது. நவ்தீப் சைனி, தீபக் சஹார், பிரசீத் கிருஷ்ணா அந்த நால்வர் பட்டியலில் இருக்க வாய்ப்புண்டு. நவ்தீப் சைனியின் பெயர், உலகக் கோப்பைக்கான அணியில் கூட ஆலோசிக்கப்பட்டதாக எம்.எஸ்.கே.பிரசாத் கூறினார். 

எந்த வகையில் பார்த்தாலும், இன்று அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணிதான் சரியான அணி. சிறந்த 15 வீரர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். ஆனால், இந்த அணியிலும் பிரச்னைகள் இல்லாமல் இல்லை. ஒரு வீரர் ஆடமுடியாமல் போனால், அவருக்கு நேரடி மாற்று என்றில்லாமல், கூடுதல் மாற்றங்களைச் செய்யவேண்டியிருக்கும்.

ரோஹித், தவான், கோலி, விஜய் சங்கர், தோனி, ஜாதவ், ஹர்டிக், ஷமி, குல்தீப், சஹால், பும்ரா - இதுதான் இந்திய அணியின் பிளேயிங் லெவனாக இருக்கும். ஒருவேளை ஹர்டிக் பாண்டியாவுக்கு ஓய்வளிக்கவேண்டுமென்றால், ஜடேஜா ஆடவேண்டியிருக்கும். ஆனால், 3 ஸ்பின்னர்களைக் களமிறக்கமுடியாது என்பதால், குல்தீப், சஹால் ஆகியோரில் ஒருவருக்குப் பதில் புவியைக் களமிறக்கவேண்டியிருக்கும். அதேபோல் ஜாதவ் காயமடைந்தாலும், ஜடேஜாவை இறக்கவேண்டிய சூழல் வரலாம். ஏனெனில், இந்தியாவின் பௌலிங் ஆப்ஷன்கள் குறைந்துவிடும். ஹர்டிக் 10 ஓவர்களையும் வீசுவாரா என்பது சந்தேகம். எனவே, மேலும் சில மாற்றங்கள் செய்யவேண்டியிருக்கும். இது மட்டும் இந்திய அணிக்குக் கொஞ்சம் பாதகமாக அமையும். ஆனால், ஒருவகையில், எல்லாச் சிக்கல்களுக்கும் பதில் சொல்லக்கூடிய வீரர்கள் இருப்பதால், நிச்சயம் இந்த அணியை நம்பலாம்!