Published:Updated:

ஷிகர் தவனின் டைமிங் ஃபார்ம்... ஈடனை கைப்பற்றிய டெல்லி கேபிடல்ஸ் #KKRvsDC

ஷிகர் தவனின் டைமிங் ஃபார்ம்... ஈடனை கைப்பற்றிய டெல்லி கேபிடல்ஸ் #KKRvsDC
News
ஷிகர் தவனின் டைமிங் ஃபார்ம்... ஈடனை கைப்பற்றிய டெல்லி கேபிடல்ஸ் #KKRvsDC

ஷிகர் தவனின் டைமிங் ஃபார்ம்... ஈடனை கைப்பற்றிய டெல்லி கேபிடல்ஸ் #KKRvsDC

ந்த ஐ.பி.எல் சீஸனில், ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற #KKRvsDC அணிகளுக்கு இடையிலான போட்டி டை ஆனது. சூப்பர் ஓவர் முடிவில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றிபெற்றது. அந்த இரண்டு அணிகளும் ஈடன் கார்டனில் நேற்று களம் கண்டன. சொந்த மண்ணில் எளிதில் வென்றுவிடலாம் என்று கே.கே.ஆர் நினைத்திருக்கும். ஆனால், ஷிகர் தவானின் ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் எடுத்து அணியை வெற்றிபெறச் செய்தார். உலகக் கோப்பைக்கு முன் அவர் ஃபார்முக்குத் திரும்பியது, இரண்டு லெக்கிலும் கொல்கத்தாவை வீழ்த்தியது என டெல்லி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 

டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ், ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. ஜோ டென்லி, சுபம் கில் இணை கொல்கத்தாவுக்கு ஓப்பனிங் இறங்கியது. போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட்! இஷாந்த் ஷர்மா வீசிய ஃபுல் டாஸ் பந்தில் க்ளீன் பவுல்டான ஜோ டென்லி, வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். தொடக்கத்திலேயே தடுமாறிய கொல்கத்தாவுக்கு, உத்தப்பா - கில் ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவிப்பில் ஈடுபட்டது. கீமோ பால் வீசிய 6-வது ஓவரில்தான் கொல்கத்தாவின் முதல் சிக்ஸ்ரை அடித்தார் உத்தப்பா. மறுபுறம், பவுண்டரிகளை விளாசிக் கொண்டிருந்த சுபம் கில், 34 பந்துகளில் அரை சதம் கடந்தார். 8-வது ஓவர் வரை தாக்குப்பிடித்த இந்தக் கூட்டணியை ரபாடா பிரித்தார். ஹூக் ஷாட் அடிக்க நினைத்தபோது, பந்து தலைக்கு மேல் எகிறிச் சென்று விக்கெட் கீப்பர் பண்ட்டின் கைகளை எட்டியது. உத்தப்பா அவுட். அடுத்து கொல்கத்தாவின் நம்பிக்கையான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ராணா களமிறங்கினார். ஆனால், நீண்ட நேரம் நீடிக்காத ராணா, மோரிஸின் யார்க்கர் பந்தில் போல்டானார். 13 ஓவர் முடிவில் கொல்கத்தா அணியின் ஸ்கோர் 93/3.

150+ ஸ்கோரை டார்கெட் செய்த கொல்கத்தா அணிக்கு, கேப்டன் தினேஷ் கார்த்திக் கைகொடுக்கவில்லை. 2 ரன்களுக்கு அவுட்டான அவரைத் தொடர்ந்து ரஸல் களமிறங்கினார். இந்தப் போட்டியிலும் ரஸல் 40+ ரன்கள். தனக்கே உரிதான வழக்கமான பாணியில் 4 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் என 21 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து, டிரிம் லெவனில் தன்னை கேப்டனாகத் தேர்ந்தெடுத்தவர்களின் நெஞ்சில் பால் வார்த்தார். 10 பந்துகள் மீதமிருந்த நிலையில், மோரிஸின் பந்துவீச்சில் ரஸல் கேட்ச் கொடுத்து அவுட்டானார். டெத் ஓவரில் ரஸலின் அதிரடி தடுக்கப்பட்டதால், 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 178 ரன்கள் எடுத்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதிரடியாகத் தொடங்கிய சேஸிங்கில், ப்ரித்வி ஷா, தவான் இணை ரன் குவிப்பில் ஈடுபட்டது. கொல்கத்தாவுக்கு எதிரான முந்தைய போட்டியில், 1 ரன்னில் சதத்தை நழுவவிட்ட ஷா, இந்தப் போட்டியில் அடித்து விளாசுவார் என்று எதிர்பார்த்தபோது, 3-வது ஓவரிலேயே கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்து பேட்டிங் வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, 5 ஓவர்கள் முடிவில் 57/2 எடுத்திருந்தது டெல்லி கேப்பிடல்ஸ்.

மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்தது தவான் - பண்ட் கூட்டணி. அடுத்த 10 ஓவர்களுக்கு, டெல்லி கேபிடல்ஸின் ரன் ரேட் 8-ல் இருந்து குறையவில்லை. பவுண்டரிகள், சிக்ஸர்களைத் தாண்டி, ஒவ்வொரு ஓவரிலும் சிங்கிள்ஸ், டபுள்ஸ் ஓடி ரன் சேர்த்து இன்னிங்ஸ் பில்ட் செய்தனர்.

20 பந்துகளில் 21 ரன்கள் தேவை என்றபோது, 17-வது ஓவரை ரஸல் வீசினார். பண்ட் அடித்த ஒரு பவுண்டரி, சிக்சரால் போட்டி டெல்லி பக்கம் சாய்ந்தது. பந்துகள் அதிகமாக, வெற்றிக்குத் தேவையான ரன்கள் குறைந்தன. தவான் - பண்ட் கூட்டணி ஒரு சிறப்பான இன்னிங்ஸை விளையாடியது. இதே ஜோடி போட்டியை முடித்து வைக்குமா என்றிருந்தபோது, 11-வது ஓவரில் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த ராணாவை 17-வது ஓவரை வீசத் தேர்ந்தெடுத்தார் தினேஷ் கார்த்திக். ஸ்பின்னால் பலன். பண்ட் விளாசிய முதல் பந்தை பவுண்டரி லைனில் கேட்ச் பிடித்தார் குல்தீப் யாதவ். 100 ரன் பார்ட்னர்ஷிப் முடிவுக்கு வந்தது, போட்டி மேலும் விறுவிறுப்பானது. வெற்றிபெற 122 ரன்கள் தேவை என்றபோது ஜோடி சேர்ந்த பண்ட் - தவான், 17 ரன்கள் தேவை என்ற வரையில் களத்தில் நின்றது. 17-வது ஓவரில் இங்ராம், தவான் சிங்கிள்ஸ் எடுக்க, 12 பந்துகளில் 12 ரன்கள் தேவைப்பட்டன.

ஐபிஎல் தொடரில், தவான் தனது முதல் சதத்தை நிறைவு செய்வார் என்று எதிர்பார்த்தபோது, ஸ்ட்ரைக்கிங் எண்டில் இருந்த இங்ராம் ஃபினிஷிங் சிக்ஸர் அடித்து போட்டியை நிறைவு செய்தார்.  97 நாட்-அவுட் எடுத்திருந்த தவான், ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். வின்னிங் சிக்ஸர் அடிக்கும்போது டக்அவுட்டில் இருந்த பாண்டிங்கும் கங்குலியும் கைதட்டி வெற்றியை வரவேற்று மகிழ்ந்தனர்.

“கொல்கத்தாவுக்கு எதிரான 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. நாட்டின் சிறந்த மைதானங்களில் ஒன்றான ஈடன், சிறந்த பிட்சை கொண்டது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது சிறப்பான ஒன்று. ஐபிஎல் தொடரின் முக்கிய கட்டத்தில் தவானின் இந்த ஆட்டம் தேவையான ஒன்று. உலகக் கோப்பையில் தவான் சிறப்பாக விளையாடுவார்” என்றார் கங்குலி. விளையாடியுள்ள 7 போட்டிகளில், டெல்லி, கொல்கத்தா இரு அணிகளும் தலா 4 போட்டிகளில் வெற்றிபெற்று ஃப்ளே-ஆஃப் வாய்ப்பைத் தக்கவைத்துள்ளனர்.