Published:Updated:

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட சென்னை ஓட்டல் அதிபர் சிக்கவில்லை: சி.பி.சி.ஐ.டி தகவல்

Vikatan Correspondent
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட சென்னை ஓட்டல் அதிபர் சிக்கவில்லை: சி.பி.சி.ஐ.டி தகவல்
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட சென்னை ஓட்டல் அதிபர் சிக்கவில்லை: சி.பி.சி.ஐ.டி தகவல்

சென்னை: ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தி்ல் ஈடுபட்டு காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் சென்னை ஓட்டல் அதிபர் விக்ரம் அகர்வால் இன்னும் பிடிபடவில்லை என்றும் அவருக்கு சம்மன் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது என்றும் சி.பி.சி.ஐ.டி போலீசார் தெரிவித்துள்ளனர்.
 

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட சென்னை ஓட்டல் அதிபர் சிக்கவில்லை: சி.பி.சி.ஐ.டி தகவல்

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் சென்னை ரேடிசன் புளு ஓட்டல் சூதாட்ட புகலிடமாக இருந்துள்ளது. இந்த ஓட்டல் அதிபர் விக்ரம் அகர்வால் சூதாட்டத்துக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார்.

சி.பி.சி.ஐ.டி போலீசாரால் தேடப்பட்டு வரும் விக்ரம் அகர்வாலை நேற்று சென்னை அடையாறு வீட்டில் அவரை மும்பை போலீசார் கைது செய்ததாக தகவல் வெளியானது.

ஆனால், இதனை மும்பை போலீசும், சி.பி.சி.ஐ.டி போலீசும் மறுத்தது. இதனிடையே, விக்ரம் அகர்வாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கோரி அவரது குடும்பத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிலையில், கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட சென்னை ஓட்டல் அதிபர் விக்ரம் அகர்வாலை இன்னும் பிடிக்கவில்லை என்று சி.பி.சி.ஐ.டி போலீசார் தெரிவித்துள்ளனர்.

##~~##
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி ராஜாசீனிவாசன், தலைமறைவாக உள்ள சென்னை ஓட்டல் அதிபர் விக்ரம் அகர்வால் இன்னும் கைது செய்யப்பட்டவில்லை என்றார்.
தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர் என்றும் வரும் 30ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் கூறி சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் ராஜா சீனிவாசன் கூறினார்.
சூதாட்ட தரகர் உத்தம் ஜெயின் தம்பிகள் பிரவீண், பதீஷை காவல்துறையினர் தேடி வருவதாகவும், சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட பத்து பேரில் 5 பேரை மட்டுமே காவலில் எடுத்து விசாரித்ததாகவும் ராஜா சீனிவாசன் தெரிவித்தார்.