Published:Updated:

கேன் வில்லியம்ஸன் மிஸ்ஸிங்; ஐபிஎல்-லின் இளம் வீரர் அறிமுகம்! - ஃபீல்டிங் தேர்வு செய்த ஆர்.சி.பி #SRHvRCB

கேன் வில்லியம்ஸன் மிஸ்ஸிங்; ஐபிஎல்-லின் இளம் வீரர் அறிமுகம்! - ஃபீல்டிங் தேர்வு செய்த ஆர்.சி.பி #SRHvRCB
கேன் வில்லியம்ஸன் மிஸ்ஸிங்; ஐபிஎல்-லின் இளம் வீரர் அறிமுகம்! - ஃபீல்டிங் தேர்வு செய்த ஆர்.சி.பி #SRHvRCB

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. 

ஹைதராபாத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 11வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆர்.சி.பி கேப்டன் விராட் கோலி ஃபீல்டிங் தேர்வு செய்தார். டாஸின்போது பேசிய விராட் கோலி, `முதல் பாதியில் பந்துகள் மெதுவாக வரும் என்று எதிர்பார்க்கிறேன். அதேபோல், இந்தப் போட்டியில் நாங்கள் கூடுதல் ஸ்பின்னர் ஒருவரை பிளேயிங் லெவனில் சேர்த்திருக்கிறோம். நவ்தீப் சைனிக்குப் பதிலாக இளம் வீரர் பிரயாஸ் ரே பர்மன் விளையாடும் வாய்ப்புப் பெற்றிருக்கிறார்’’ என்றார். 

16 ஆண்டுகள் 157 நாள்கள் வயதுகொண்ட அவர், உலக அளவிலான டி20 லீக் போட்டிகளில் விளையாடும் இளம் வீரராவார். மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த அவர், மிசோரம் அணிக்கெதிராக சமீபத்தில் நடைபெற்ற போட்டியின் மூலம் அறிமுகமானார். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் அறிமுகமான இளம் வீரர் என்ற சாதனையை தன்வசமாக்கினார். இதற்கு முன்பாக 17 ஆண்டுகள் 11 நாள்கள் வயதில் அறிமுகமான முஜிபுர் ரஹ்மானிடம் அந்த சாதனை இருந்தது. 

ஹைதராபாத் அணியில் காயம்காரணமாக கேப்டன் கேன்வில்லியம்ஸன் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக முகமது நபி பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டிருக்கிறார். வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.