Published:Updated:

கிரிக்கெட் வீரருடன் தொடர்புடைய மேலும் 3 தரகர்கள் கைது!

Vikatan Correspondent
கிரிக்கெட் வீரருடன் தொடர்புடைய மேலும் 3 தரகர்கள் கைது!
கிரிக்கெட் வீரருடன் தொடர்புடைய மேலும் 3 தரகர்கள் கைது!
கிரிக்கெட் வீரருடன் தொடர்புடைய மேலும் 3 தரகர்கள் கைது!

புதுடெல்லி: கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர் அஜித் சண்டிலாவுடன் தொடர்புடைய மேலும் 3 சூதாட்ட தரகர்கள் கைது செய்யப்பட்டனர்.

புபேந்தர் நகர் என்பவர் கிரேட்டர் நொய்டாவிலும், சயிது துரேஸ் அகமது, சுனில் சக்சேனா ஆகியோர் ஹைதராபாத்திலும் கைது செய்யப்பட்டனர்.

##~~##
மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அஜித் சண்டிலா, 4 சூதாட்ட குழுக்களிடம் மொத்தம் ரூ.70 லட்சம் பெற்றார். அதில், மேற்கண்ட 3 தரகர்கள் அடங்கிய குழுவிடம் ரூ.21 லட்சம் பெற்றதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இவர்களுடன் சேர்த்து டெல்லி போலீசார் இதுவரை 22 பேரை கைது செய்துள்ளனர்.