Published:Updated:

கிரிக்கெட் சூதாட்ட புகலிடமாக திகழ்ந்த சென்னை நட்சத்திர ஓட்டல்!

Vikatan Correspondent
கிரிக்கெட் சூதாட்ட புகலிடமாக திகழ்ந்த சென்னை நட்சத்திர ஓட்டல்!
கிரிக்கெட் சூதாட்ட புகலிடமாக திகழ்ந்த சென்னை நட்சத்திர ஓட்டல்!
கிரிக்கெட் சூதாட்ட புகலிடமாக திகழ்ந்த சென்னை நட்சத்திர ஓட்டல்!

சென்னை: கிரிக்கெட் சூதாட்ட  புகலிடமாக சென்னை நட்சத்திர ஓட்டல் திகழ்ந்துள்ளது. இந்த நடத்திர ஓட்டல் அதிபரை சிபிசிஐடி போலீசார் மடக்கி பிடித்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிரிக்கெட் சூதாட்ட வழக்குகளை டெல்லி, மும்பை மற்றும் சென்னை, கோவை போலீசார் தனித்தனியாக விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு விசாரணையில் தினமும், திடுக்கிடும் தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. தினம், தினம் முக்கிய புள்ளிகள் கைது செய்யப்பட்ட வண்ணம் இருக்கிறார்கள்.

டெல்லி போலீசார் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 கிரிக்கெட் வீரர்களை கைது செய்தனர். மும்பை போலீசார் பிரபல இந்தி நடிகர் விண்டூ தாராசிங், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் பல தரகர்களும் கைது செய்யப்பட்டு உள்ளனர். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் 9 பேரை கைது செய்து உள்ளனர். கோவை போலீசாரிடம் 6 சூதாட்ட தரகர்கள் சிக்கியுள்ளனர்.

இந்த நிலையில், சென்னையில் நடந்த சூதாட்டத்தில் கொடி கட்டி பறந்த பிரசாந்த், கிட்டி என்ற உத்தம் ஜி ஜெயின் மற்றும் சஞ்சய் பாஃவ்னா. இவர்களில் முதல் இரண்டு பேர்களான பிரசாந்த், கிட்டி ஆகியோர் ஏற்கனவே கைதாகிவிட்டனர். 3வது நபரான சஞ்சய் பாஃவ்னா, துபாயில் இருந்து குடும்பத்துடன் நேற்று சென்னை வந்தபோது விமான நிலையத்தில் அவரை போலீசார் பிடித்தனர்.

##~~##
சென்னை கிண்டியில் உள்ள சி.பி.சி.ஐ.டி தலைமை அலுவலகத்தில் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாக சி.பி.சி.ஐ.டி செய்தித்தொடர்பாளர் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கட்ராமன் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சஞ்சய் பாஃவ்னா  சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கிரிக்கெட் சூதாட்ட புகலிடமாக திகழ்ந்த சென்னை நட்சத்திர ஓட்டல்!

இந்த நிலையில், கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக, சென்னை எழும்பூரில் உள்ள  ரேடிசன் புளு என்ற நட்சத்திர ஓட்டல் நடத்தி வரும் விக்ரம் அகர்வாலை போலீசார் பிடித்து உள்ளனர். அவரை சென்னை அடையாறில் உள்ள அவரது வீட்டில் போலீசார் மடக்கினர். சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்தில் அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. அவர் சூதாட்ட மும்மூர்த்திகளில் ஒருவரான கிட்டியிடம் நெருக்கமான உறவு வைத்திருந்தார். அவரது செல்போன் நம்பரில் அடிக்கடி பேசி உள்ளார்.

இந்த நட்சத்திர ஓட்டல் அதிபர், கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக ஏற்கனவே கைதாகியுள்ள இந்தி நடிகர் விண்டூ தராசிங்குக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பனுக்கும் இடையே பாலமாக செயல்பட்டதாக விசாரணையில் தெரியவந்து இருப்பதாக மும்பை போலீசார் தெரிவித்தனர். எனவே இந்த ஓட்டல் அதிபரும் விரைவில் கைது செய்யப்பட உள்ளார்.

படங்கள்: பா.கார்த்திக்