Published:Updated:

`சிறந்த ஃபீல்டிங் அணியாக என்றுமே இருந்ததில்லை!’ - சி.எஸ்.கே கேப்டன் தோனி

`சிறந்த ஃபீல்டிங் அணியாக என்றுமே இருந்ததில்லை!’ - சி.எஸ்.கே கேப்டன் தோனி
`சிறந்த ஃபீல்டிங் அணியாக என்றுமே இருந்ததில்லை!’ - சி.எஸ்.கே கேப்டன் தோனி

ஐ.பி.எல் தொடரில் பேட்டிங், ஃபீல்டிங் ஆகியவற்றில் சிறப்பாகச் செயல்பட்டாலும் ஃபீல்டிங்கில் மட்டும் சிறப்பாக செயல்பட முடியவில்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தெரிவித்திருக்கிறார். 

நடப்பு ஐ.பி.எல் தொடரில் தங்களது முதல் இரண்டு போட்டிகளிலும் வென்று புள்ளிப்பட்டியலில் கெத்தாக முதலிடம் பிடித்திருக்கிறது தோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ். டெல்லி அணிக்கெதிரான நேற்றைய போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது சி.எஸ்.கே. ஐ.பி.எல் தொடரில் நடப்புச் சாம்பியனாகக் களமிறங்கியுள்ள சி.எஸ்.கே அணியில் மூத்த வீரர்கள் பலர் இருப்பது குறித்து விமர்சனங்கள் எழுந்தன. கடந்த ஐ.பி.எல் தொடரின்போது இதே விமர்சனங்களை எதிர்கொண்ட சி.எஸ்.கே, சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. 
சி.எஸ்.கே-யில் கேப்டன் தோனிக்கு 37 வயது. அதேபோல், ஷேன் வாட்சனுக்கு 35, பிராவோவுக்கு 34 வயதாகிறது. மேலும், ஸ்டார் ஸ்பின்னர்களான இம்ரான் தாஹிர் 39 வயதானவர், ஹர்பஜன் சிங் 38 வயதுடையவர். டூப்ளசிஸுக்கு 34 வயது. ராயுடு மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோருக்கு வயது 33. 

இந்த நிலையில், டெல்லி அணிக்கெதிரான வெற்றிக்குப் பிறகு பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி, `பேட்டிங், பௌலிங் ஏரியாக்களில் நாங்கள் சிறப்பாகச் செயல்படுகிறோம். அதேநேரத்தில், எங்கள் அணி சிறந்த ஃபீல்டிங் அணியாக என்றுமே இருந்ததில்லை. நாங்கள் பாதுகாப்பாக ஃபீல்டிங் செய்யும் அணி. இதனால், ஒரு சில ரன்களை நாங்கள் விட்டுக்கொடுக்கலாம். ஆனால், எங்கள் அனுபவத்தை வைத்து பேட்டிங் மற்றும் பௌலிங்கில் அதை சமாளித்து விடுவோம்.

உங்கள் வீரர்களுக்கு அதிக அழுத்தம் கொடுத்து அவர்களைக் காயமடையவைக்க வேண்டிய அவசியமில்லை. கடைசி ஓவர்களில் நாங்கள் சிறப்பாகச் செயல்படவில்லை. இன்னும் சிறப்பாகச் செயல்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. இருப்பினும் இது நல்ல வெற்றிதான்’’ என்றார்.