Published:Updated:

ஐபிஎல் சூதாட்டம்; ஜெய்ப்பூர் நகை கடைகளில் 8 கோடி ரூபாய் நகை, பணம் பறிமுதல்

ஜெய்ப்பூர்: ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட தரகர்களுடன் தொடர்பு வைத்திருந்த ஜெய்ப்பூர் நகைக்கடை உரிமையாளர்களின் கடைகளில் நடத்திய சோதனையில், ரூ.92 கோடி மதிப்புள்ள கணக்கில் வராத சொத்துக்களும், 3 கோடி ரூபாய் பணமும், 5 கோடி ரூபாய் நகைகளும் வருமான வரித் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக மும்பை மற்றும் டெல்லி காவல்துறையினர் நடத்தி வரும் விசாரணையில், பல்வேறு சூதாட்டத் தரகர்களுடன் நகைக் கடை அதிபர்கள் தொடர்பு வைத்திருந்ததும், அவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து இன்று ஜெய்ப்பூரில் உள்ள 4 நகைக் கடைகளில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.92 கோடி சொத்துக்களும், 5 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளும், 3 கோடி ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

##~~##
மேலும் சூதாட்டத்தில் ஈடுபடும் வீரர்களுக்கு விலை உயர்ந்த பரிசு பொருட்களை வழங்க இந்த நகைக்கடை அதிபர்கள் உதவியிருப்பதும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து வருமான வரித்துறையினர் சூதாட்ட தரகர்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறதோ அந்தந்த இடங்களில் எல்லாம் நேரடியாக சென்று சோதனை நடத்த உள்ளனர்.

இந்தியாவில் ஐ.பி.எல். போட்டிகள் நடந்த முக்கிய நகரங்களில் சோதனைகள் நடக்கும் என்று வருமான வரித்துறை  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.