Published:Updated:

சென்னையில் மேலும் ஒரு சூதாட்ட தரகர் சிக்கினார்!

சென்னையில் மேலும் ஒரு சூதாட்ட தரகர் சிக்கினார்!
சென்னையில் மேலும் ஒரு சூதாட்ட தரகர் சிக்கினார்!
சென்னையில் மேலும் ஒரு சூதாட்ட தரகர் சிக்கினார்!

சென்னை: சென்னையில் மேலும் ஒரு கிரிக்கெட் சூதாட்ட தரகரை சி.பி.சி.ஐ.டி போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

சென்னையில் அண்மையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 8 இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் மேலும் கிரிக்கெட் சூதாட்டத் தரகர் ஜெஸ்ராஸ் ஜெயின் (எ) ராஜனை சி.பி.சி.ஐ.டி போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

##~~##
கைது செய்யப்பட்ட ராஜனிடம், மும்பை, டெல்லி தரகர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், நீதிமன்றத்தில் ராஜனை ஆஜர்படுத்த உள்ள காவல்துறையினர், அவரை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.
சென்னையில் தரகர் ராஜனை சேர்த்து இதுவரை 9 இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.