பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

அலறவிட்ட ஆப்கன் பாய்ஸ்!

அலறவிட்ட ஆப்கன் பாய்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
அலறவிட்ட ஆப்கன் பாய்ஸ்!

அலறவிட்ட ஆப்கன் பாய்ஸ்!

சென்ற வாரம் மழையோ மழை... இந்த வாரம் அதிர்ச்சியோ அதிர்ச்சி... உலகக் கோப்பை 2019-ல் இந்த வாரம் பரபரப்புக்குக் குறைவேயில்லை.

ஆ...  

``பாவம் இலங்கை... இங்கிலாந்துகிட்ட  என்ன அடி வாங்கப்போகுதோ” என்று நினைத்தால், சிங்கத்தை அதன் குகையிலேயே வைத்துச் சின்னாபின்னமாக்கிவிட்டனர் லங்கன் லயன்ஸ். இதுதான் இந்தத் தொடரின் மிகப்பெரிய அதிர்ச்சி என்று நினைத்தால்... அடுத்த நாளே `உள்ளேன் ஐயா’ போட்டனர் ஆப்கன் பாய்ஸ்!

இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரைக் குலைத்து, 49-வது ஓவர் வரை இலக்கை நெருங்கி மொத்த இந்திய ரசிகர்களின் வயிற்றிலும் புளியைக் கரைத்தது அந்தக் கத்துக்குட்டி அணி. ஷமியின் யார்க்கர்கள் வெற்றியைப் பறிக்கா விட்டால், சரித்திரம் படைத்திருக்கும் ஆப்கானிஸ்தான்.

‘நீங்களெல்லாம் அப்செட் பண்ணினா அப்போ நாங்க யாரு’ எனக் கிளம்பியது வெஸ்ட் இண்டீஸ்.

அலறவிட்ட ஆப்கன் பாய்ஸ்!

கரீபியன் புயல்  

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 286 என்ற இலக்கைத் துரத்திய வெஸ்ட் இண்டீஸ், 164 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இனி டெயிலென்டர்ஸ் வந்து என்ன பண்ணப்போகிறார்கள்... ஆஃப் பண்ணுங்கடா டீவியை என்று நினைத்தபோது, தனி ஒருவனாக பட்டையைக் கிளப்பினார் பிராத்வெயிட். மான்செஸ்டர் மைதானத்தின் நாலாபுறமும் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்க விட்டார். மெல்ல மெல்ல இலக்கை நெருங்க நியூசிலாந்து வீரர்களுக்கு இதயம் வாய்வழியே எட்டிப்பார்த்திருக்கும். 3 ஓவர்களுக்கு 33 ரன்கள் தேவை என்றபோது, மாட் ஹென்றியின் ஒரே ஓவரில் 25 ரன்கள் எடுத்து மொத்த உலகையும் மிரளவைத்தார் பிராத்வெயிட்.

2016 டி20 இறுதிப்போட்டியில், ஸ்டோக்ஸுக்கு எதிராகத் தொடர்ந்து 4 சிக்ஸர்கள் அடித்ததுதான் எல்லோருக்கும் நினைவில் வந்தது. மீண்டும் அதைச் செய்துவிடுவார் என்று நினைத்தபோது பவுண்டரி லைனில் கேட்சாகிவிட்டார். 5 ரன்களில் தோற்றது வெஸ்ட் இண்டீஸ். சில அங்குலங்கள் பந்து தள்ளிப் போயிருந்தால் போட்டியின் முடிவு மாறியிருக்கும். போட்டியின் முடிவு சாதகமாக இல்லையென்றாலும், இந்தப் போராட்டத்தின் மதிப்பு குறையப்போவதில்லை. அவரது இந்த இன்னிங்ஸ் நிச்சயமாக இந்த உலகக் கோப்பையின் பெஸ்ட் பேட்டிங் பர்ஃபாமென்ஸாக நினைவுகூரப்படும்.

அலறவிட்ட ஆப்கன் பாய்ஸ்!

ஸ்ஸ்ஸ்லிங்கா...   

இலங்கை இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றிபெறும் என்று யாரும் நினைக்கவில்லை. அதுவும் 232 ரன்னுக்கு ஆல் அவுட் ஆன பின், 1 சதவிகிதம்கூட அவர்களுக்கு வெற்றிவாய்ப்பு இல்லை என்றே எல்லோரும் கணித்தனர். ஆனால், தன் அனுபவத்தால் மொத்த மேட்ச்சையும் புரோட்டாவாகப் புரட்டிப் போட்டார் மலிங்கா. முதல் பவர்பிளேவில் விக்கெட், மிடில் ஓவரில் விக்கெட், கடைசி ஸ்பெல்லிலும் விக்கெட் என அணிக்குத் தேவையான நேரங்களிலெல்லாம் ஸ்டம்புகளைச் சிதறடித்தார். இந்த விக்கெட்டுகளையெல்லாம் தாண்டி, அவருடைய யார்க்கர்கள்தான் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களைத் திணறடித்தன. ஓவருக்கு மூன்று அல்லது நான்கு பந்துகள் துல்லியமான யார்க்கர்களாக வீசினார். இன்ச்டேப் வைத்து அளந்துபார்த்தால் மில்லிமீட்டர் பிசகாத துல்லியம். இலங்கைக்கு எல்லாம் ஓவர்... ஓவர்... என்று நினைத்த இடத்தில் அவரது இந்தச் செயல்பாடு ஒட்டுமொத்த இலங்கை அணிக்கு மட்டுமல்ல அந்த நாட்டுக்கே கிடைத்த எனர்ஜி டானிக்!

அலறவிட்ட ஆப்கன் பாய்ஸ்!

பை...பை... ப்ரோடீஸ்!   

‘எந்த டீம் உத்வேகத்தோட ஆடினாலும், நாங்க மாறமாட்டோம். எங்க வேலை சொதப்புறது மட்டும்தான்’ என உலகக் கோப்பையின் முதல் நாளிலிருந்து ஒரே மாதிரி ஆடிக்கொண்டிருக்கிறது தென்னாப்பிரிக்கா. ஏதோ நடுவில் ஆப்கானிஸ்தானிடம் ஜெயித்த வர்கள் மீண்டும் தோற்கத் தொடங்கி விட்டனர். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வழக்கம் போல் விளையாடித் தோல்வியடைந்த அந்த அணி, உலகக் கோப்பையிலிருந்தும் வெளியேறி யுள்ளது. `இதுக்கெல்லாம் காரணம் ஐபிஎல்தான். அதனால்தான் எங்கள் ப்ளேயர்ஸ் சரியாக ஆடவில்லை’ என மொத்தப் பழியையும் இப்போது ஐபிஎல் மேல் போட ஆரம்பித்திருக்கிறது அணி நிர்வாகம். சரி, ஏதாவது காரணம் சொல்லித்தானே ஆகணும்.

கெயிலாட்டம்!   

இங்கேயும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்தான்! நமக்குக் கன்டென்ட் கொடுக்காவிட்டால் இவர்களுக்குத் தூக்கம் வராதுபோல. இந்த வாரம் ரணகளம் செய்தது வேறு யாருமில்லை, கிறிஸ் கெய்ல். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ராஸ் டெய்லர் விக்கெட்டை வீழ்த்திய கெய்ல், சந்தோஷத்தில் எகிறிக்குதித்துக் கொண்டாடினார். குதிக்கும்போது கையில் பலமாக வெற்றிக்குறி போட்டவருக்கு, லேண்ட் ஆனதும் தோள் பட்டையில் வலி எடுக்கத் தொடங்கிவிட்டது. ‘கிரிக்கெட்ல இதெல்லாம் சகஜமப்பா’ என வழக்கம்போல் அப்படியே சிரித்துச் சமாளித்துவிட்டார் யுனிவர்சல் பாஸ்.

-மு.பிரதீப்கிருஷ்ணா