Published:Updated:

கூடுதல் பந்துவீச்சாளர்களுடன் இந்தியா - டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு

கூடுதல் பந்துவீச்சாளர்களுடன் இந்தியா - டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு
கூடுதல் பந்துவீச்சாளர்களுடன் இந்தியா - டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு

ஆஸ்திரேலியா இந்தியா அணிகள் மோதும் 5 -வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். 

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. இந்தியாவில் நடைபெறும் தொடரில் ஆஸ்திரேலியா டி20 தொடரைக் கைப்பற்றியது இந்திய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

அதன் பின்னர் தொடங்கிய ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டியில் வெற்றிபெற்ற இந்தியா 2-0 என முன்னிலை வகித்தது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் அடுத்த இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றிபெற்று 2-2 எனத் தொடர் சமநிலையில் இருக்கும் நிலையில், தொடர் யாருக்கு என்பதை முடிவு செய்யும் 5 -வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று தலைநகர் டெல்லி மைதானத்தில் நடைபெறவுள்ளது. 


கடைசி இரு போட்டிகளில் இந்திய அணியின் தோல்விக்கு கோலி, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் இருக்கும் பனியின் தாக்கத்தைச் சரியாக கணிக்காமல் எடுத்த முடிவும், அணி தேர்வில் நடக்கும் சொதப்பல்களும் காரணங்களாகச் சொல்லப்பட்டது. உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இந்தத் தொடர் நடைபெறுவதால் இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் முக்கியமானது. உலகக்கோப்பைதொடருக்கு முன்னதாக தவான் ரோகித் ஆகியோர் ஃபார்முக்கு வந்தது ஆறுதலான விஷயம்.     

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஷமி மற்றும் ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ராகுல் மற்றும் சஹால் நீக்கப்பட்டுள்ளனர். 

பொதுவாகத் தொடர் யாருக்கு என்பதை முடிவு செய்யும் போட்டிகளில் இந்தியா சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. தொடர் யாருக்கு என்பதை முடிவு செய்யும் முக்கியப் போட்டியில் கடந்த 8 தொடர்களில் 6 -ல் இந்தியா வெற்றிபெற்றுள்ளது. அதேபோன்று 2015 -ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை இழக்கவில்லை. அந்தச் சாதனை இன்றும் தொடரும் என்று நம்புவோம்