Published:Updated:

உலக சாம்பியன் யார்?!

உலக சாம்பியன் யார்?!
பிரீமியம் ஸ்டோரி
உலக சாம்பியன் யார்?!

உலக சாம்பியன் யார்?!

உலக சாம்பியன் யார்?!

உலக சாம்பியன் யார்?!

Published:Updated:
உலக சாம்பியன் யார்?!
பிரீமியம் ஸ்டோரி
உலக சாம்பியன் யார்?!

லகக் கோப்பை தொடங்கி இரண்டு வாரங்கள் முடிந்துவிட்டது. உலகக் கோப்பைக்கே உரிய டிராமாக்களுக்கு இந்தமுறையும் பஞ்சமில்லை. ரன்மழை பொழியும் என எதிர்பார்க்கப்பட்ட போட்டிகளில் பெளலர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஆர்ச்சர், பும்ரா, ரபாடா, போல்ட் ஆகிய பெளலர்கள் சூப்பர் ஹீரோக்களாக உருவெடுத்துள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணியும் ஃபேவரிட்ஸ் பட்டியலில் இணைந்துவிட்டது. பரபரப்பான போட்டிகள், பட்டையைக் கிளப்பும் பர்ஃபாமன்ஸ்களுக்கு நடுவே மழையும் ஆட்டம் காட்டிவருகிறது. ஒவ்வொரு போட்டியும் சவாலாக இருப்பதால், யார் சாம்பியன் என்ற சுவாரஸ்யம் நீள்கிறது.

உலக சாம்பியன் யார்?!

யார் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம்!

வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், வங்கதேசம் ஆடிய ஆட்டம்தான் இந்த உலகக் கோப்பையின் சிறப்பே! ஆஸ்திரேலியாவை கடைசிவரை கதறவிட்ட வெஸ்ட் இண்டீஸின் பௌலிங், இங்கிலாந்தை வீழ்த்திய பாகிஸ்தானின் அதிரடி, தென்னாப்பிரிக்காவைச் சாய்த்த வங்கதேசத்தின் ஆல் ரவுண்ட் பர்ஃபாமன்ஸ் என எல்லா உலகக் கோப்பைகளையும் போல் அதிரடி முடிவுகளை அள்ளிக்கொடுக்கத் தொடங்கியிருக்கிறது இந்தத் தொடர். பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் இப்படி ஆடலாம் என்பது பல வல்லுநர்களும் சொன்னதுதான். வங்கதேசம்தான் கொஞ்சம் அவுட் ஆஃப் சிலபஸ். பலரும் அந்த வெற்றியால் ஆடிப்போனார்கள். ஆனால், உண்மையில் அதிர்ச்சியடையவோ, ஆச்சர்யப்படவோ அந்த வெற்றியில் ஒன்றும் இல்லை. ஏனெனில் இனிமேலும் வங்கதேசம் கத்துக்குட்டி இல்லை!

மார்ச் 19, 2011, டாகா. உலகக் கோப்பை தொடரில், வங்கதேசத்தின் கடைசி லீக் போட்டி. அதற்கு முன் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 58 ரன்களில் ஆல் அவுட் ஆகியிருந்தார்கள். அடுத்த போட்டியில், இங்கிலாந்தை வீழ்த்தியிருந்தார்கள். கடந்த சில ஆண்டுகளாக கத்துக்குட்டி அணிகள் அதிர்ச்சி வெற்றிகளைப் பதிவு செய்ததால், அப்படியொரு முடிவு மீண்டும் கிடைக்கும் என எல்லோரும் எதிர்பார்த்தார்கள். அந்த கடைசி லீக் போட்டியில், தென்னாப்பிரிக்காவை வீழ்த்தினால், காலிறுதிக்குள் நுழைந்துவிடலாம். மொத்த டாகாவும் கனவில் மிதந்தது. ஸ்டெய்ன், மோர்னே மோர்க்கல், டி வில்லியர்ஸ் ஆகியோருக்குக் கொடுக்கப்பட்ட ஓய்வு, அந்தக் கனவுக்குள் உயிர் பாய்ச்சியது. தென்னாப்பிரிக்கா 284 ரன்கள். கொஞ்சம் கடினமான இலக்குதான். ஆனால், 78 ரன்களுக்கே ஆல் அவுட் ஆகி, வெளியேறியது வங்கதேசம். 206 ரன்களில் தோல்வி. ‘கத்துக்குட்டி எப்பவுமே கத்துக்குட்டிதான்' என்றார்கள் ரசிகர்கள். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உலக சாம்பியன் யார்?!

அந்த உலகக் கோப்பைக்குப் பிறகு, வங்கதேச அணி பயணித்த தூரம் அதிகம். அந்தத் தொடருக்கும், இந்த உலகக் கோப்பைக்கும் இடையே அவர்கள் பங்கேற்ற 117 ஒருநாள் போட்டிகளில் 54 வெற்றிகளை (7 போட்டிகளில் முடிவு இல்லை) பதிவு செய்துள்ளனர். இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் (வைட் வாஷ்), நியூசிலாந்து (வைட் வாஷ்), வெஸ்ட் இண்டீஸ் போன்ற பெரிய அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்களை வென்றிருக்கிறார்கள். நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகள் கலந்துகொண்ட முத்தரப்புத் தொடர்களில் சாம்பியனாகியிருக்கிறார்கள். ஆசிய கோப்பை ஃபைனலுக்கு இருமுறை முன்னேறியிருக்கிறார்கள். சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிக்குள்ளும் நுழைந்திருக்கிறார்கள்.

அதற்கு முன்புவரை அவ்வப்போது மட்டுமே பெரிய அணிகளை வீழ்த்திக்கொண்டிருந்தவர்கள், இந்தக் கால்கட்டத்தில் ஏறக்குறைய அத்தனை அணிகளுக்கு எதிராகவும் வெற்றி பெற்றுள்ளனர். இந்த 8 ஆண்டுகளில், கிட்டத்தட்ட 50 சதவிகிதப் போட்டிகளில் வென்ற ஒரு அணியை நாம் கத்துக்குட்டி என்று சொல்லிவிட முடியாது. இந்த உலகக் கோப்பையில் இந்திய அணியிடமே இல்லாத சில ப்ளஸ் பாயின்ட் வங்கதேச அணியிடம் இருக்கிறது. இந்த அணியின் நம்பர் 9 பேட்ஸ்மேன் மெஹதி ஹசன் மிராஜ், ஒருநாள் போட்டிகளில் வைத்திருக்கும் சராசரி 18.80. ஸ்டிரைக் ரேட் 106.84! ஒன்பதாவது பேட்ஸ்மேன்வரை ரன் அடிக்ககூடியவர்கள். நம் அணியில் ஹர்திக்தான் ஐந்தாவது பௌலர். ஆனால், வங்கதேசத்தின் ஆறாவது பௌலரே, 250 விக்கெட்டுகள் எடுத்திருக்கும் ஷகிப்! 

உலக சாம்பியன் யார்?!

இப்படியொரு முழுமையான அணி, முன்னேற்றம் கண்டுள்ளதில் ஆச்சர்யம் என்ன இருக்கிறது? இவர்களிடம் தென்னாப்பிரிக்கா தோற்றதால் அதிர்ச்சியடைய என்ன இருக்கிறது? மீண்டும் மீண்டும் வங்கதேசம் சொல்வது இதுதான் - "நாங்கள் கத்துக்குட்டிகள் அல்ல!".

ஃபுல் ஃபார்மில் இந்தியா

இந்திய அணியைப் பொறுத்தவரை, மிகச் சிறப்பான பர்ஃபாமன்ஸைக் கொடுத்து வருகிறது. முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களைப் பந்தாடியவர்கள், அடுத்து ஆஸ்திரேலிய பௌலர்களைப் புரட்டி எடுத்தனர். முதல் போட்டியில் ரோஹித் சதமடிக்க, தன் பங்குக்கு அடுத்த ஆட்டத்தில் சதமடித்தார் தவான். கோலியும் 8 உலகக் கோப்பை இன்னிங்ஸுக்குப் பிறகு அரைசதம் அடித்துவிட்டார். தோனி, பாண்டியா இருவரும் ஐ.பி.எல் அதிரடியை இங்கிலாந்திலும் தொடர்ந்தனர்.

உலக சாம்பியன் யார்?!

பந்துவீச்சில் பும்ரா, புவி ஜோடி மிரட்டுகின்றனர். தென்னாப்பிரிக்காவை, தன் முதல் ஸ்பெல்லில் பும்ரா காலி செய்ய, ஆஸி பேட்ஸ்மேன்களை டெத் ஓவர்களில் போட்டுத் தள்ளினார் புவி. இவர்களை ஓரளவு சமாளித்தாலும் மிடில் ஓவர்களில் லெக் ஸ்பின்னால் காலை வாருகிறார் சஹால். அவரைச் சமாளிப்பது எதிரணி பேட்ஸ்மேன்களுக்குப் பெரும் பாடாக இருக்கிறது. குல்தீப் மட்டும் பழைய ஃபார்மை எட்டிவிட்டால் இன்னும் மிரட்டல்தான்! இதே ஃபார்மில் ஆடினால், நிச்சயம் இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துவிடும். சிறு பிசகும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

மழையோ மழை!

இந்த உலகக் கோப்பையில், எதிரணிகளைச் சமாளிப்பதைவிட மழையைச் சமாளிப்பதே ஒவ்வொரு அணிக்கும் பெரிய சவாலாக இருக்கிறது. பிரிஸ்டல், நாட்டிங்ஹம், கார்டிஃப், சௌதாம்ப்டன் எனச் செல்லும் இடமெல்லாம் கொட்டித் தீர்த்தது மழை. முதல் 17 போட்டிகளில், 3 போட்டிகள் மழையால் முழுமையாகத் தடைபட்டன. அதில் 2 போட்டிகளில் டாஸ் போடப்படவேயில்லை. இந்த மழையால் தப்பிப் பிழைத்தது என்னவோ இலங்கை அணிதான். வங்கதேசம், பாகிஸ்தான் அணிகளுடனான இலங்கையின் போட்டிகள் மழையால் தடைபட்டன. எப்படியும் அவர்கள் இருந்த ஃபார்முக்கு இரண்டிலுமே தோற்றிருப்பார்கள். நல்லவேளையாக மழையின் புண்ணியத்தில் இரண்டு புள்ளிகள் கிடைத்துவிட்டது.

மு.பிரதீப் கிருஷ்ணா  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism