Published:Updated:

பெஸ்ட் VS பெஸ்ட்

பெஸ்ட் VS பெஸ்ட்
பிரீமியம் ஸ்டோரி
பெஸ்ட் VS பெஸ்ட்

பெஸ்ட் VS பெஸ்ட்

பெஸ்ட் VS பெஸ்ட்

பெஸ்ட் VS பெஸ்ட்

Published:Updated:
பெஸ்ட் VS பெஸ்ட்
பிரீமியம் ஸ்டோரி
பெஸ்ட் VS பெஸ்ட்
பெஸ்ட் VS பெஸ்ட்

கிரிக்கெட் ஒரு குழு விளையாட்டாக இருந்தாலும், அதில் இரு தனி நபர்களுக்கான போட்டி  ஆட்டத்தை இன்னும் சுவாரசியாமாக்கும். அணிகளை விட வீரர்களுக்கு இடையே நடக்கும் போட்டியை அதிகம் எதிர்பார்க்கும் ரசிகர்கள் இங்கு அதிகம். உதாரணத்திற்கு இந்தியா-ஆஸ்திரேலியா என இரு அணிகளுக்கு இடையேயான போட்டி என்றாலும், அதில் சச்சின்- வார்னேக்கு இடையே இருக்கும் ரைவல்ரி தான் அதை இன்னும் சுவாரசியப்படுத்துகிறது. தரமான பெளலர்கள் தரமான பேட்ஸ்மேன்களை சந்திக்கும் போது பார்வையாளர்களுக்கு யார் இதில் வெற்றிபெறுவர் என்ற எதிர்பார்ப்பு கூடும். அப்படி இந்த உலக்கோப்பையில் எதிர்பார்க்கப்படும் சில ரைவல்ரிகள்…. 

பெஸ்ட் VS பெஸ்ட்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜஸ்ப்ரீத் பும்ரா  VS  ஜோஸ் பட்லர்

தான் டெத் பெளலிங்கின் ராஜா என ஒவ்வொரு முறையும் நிரூபித்துக்கொண்டே இருக்கிறார் பும்ரா. ஐ.பி.எல் ஃபைனலில் இவரது ஸ்பெல் அதற்கு ஒரு சின்ன உதாரணம். தன் பெளலிங்கில் யார்க்கர், ஷார்ட் பால், ஸ்லோ பால் என வேரியேஷன்களால், பேட்ஸ்மேன்கள் இவரின் பந்தை அடிக்க திணறுவது போக இவரின் பந்தை தொடுவதற்கே பலர் திண்டாடுகின்றனர். சமீபகாலமாக டெத் பெளலிங்கில் எப்படி பும்ரா ராஜாவாக திகழ்கிறாரோ அதேபோல் பேட்டிங்கில் பட்லர் திகழ்கிறார். கடந்த நான்கு ஆண்டுகளில் ஒருநாள் போட்டிகளில் கடைசி பத்து ஓவர்களில் இவரது ஸ்ட்ரைக் ரேட் மட்டும் 181. மத்த பேட்ஸ்மேன்களைப் போல் பும்ரா அவ்வளவு எளிதாக பட்லரை டீல் செய்ய முடியாது. ஏனென்றால் பட்லர் சாதரண கிரிக்கெட்டிங் ஷாட்கள் மூலம் மட்டும் ரன் அடிப்பவர் இல்லை. கிட்டத்தட்ட டிவில்லியர்ஸை போல் 360 டிகிரி கோணத்தில் மைதானத்தின் அனைத்துப் பக்கங்களிலும் பந்தை சிதற விடுவார். பும்ரா இவருக்கு யார்க்கர் போடும் முன் சற்று யோசிக்க வேண்டும். யார்க்கர்களை ஃபைன் லெக் திசையில் ஸ்கூப் செய்துவிடுவார் பட்லர். சிறந்த டெத் பெளலர், சிறந்த டெத் பேட்ஸ்மேன் – எப்படி ஒருவர் மற்றொருவரை ‘டீல்’ செய்யப்போகிறார்கள் என்று நினைத்தாலே எதிர்ப்பார்ப்புகள் கூடுகிறது.

பெஸ்ட் VS பெஸ்ட்

ககிசோ ரபடா  VS  கேன் வில்லியம்சன்

பெஸ்ட் VS பெஸ்ட்அக்தர் ராவல்பண்டி எல்லையிலுருந்து மூச்சுப்பிடித்து ஓடி வந்து வீசும் பந்துகளை, பிட்சையே தாண்டாதபடி ராகுல் டிராவிட் ஸ்ட்ரோக் வைப்பதை பார்ப்பது எவ்வளவு அழகு?! அந்த மாதிரி ஒரு காம்போ தான் வில்லியம்சன்- ரபடா! தன் அசூர வேகத்தால் பேட்ஸ்மேன்களை நிலைக்குளைய செய்பவர் ரபடா. தனது நேர்த்தியான ஸ்ட்ரோக் ப்ளே மூலம் பெளலர்களை வெறுத்துப்போக செய்பவர் வில்லியம்சன். ரபடா ஆக்ரோஷம் நிறைந்த வேகப்பந்து வீச்சாளர். வில்லியம்சனோ பொறுமையின் எல்லை. இப்படி முற்றிலுமாக வெவ்வேறு குணாதசியங்கள் கொண்ட இருவீரர்கள் களத்தில் சந்திப்பதை பார்க்கும் போது ஒரு அலாதி இன்பம் வரும் தானே! ரபடா 150 கி.மீ வேகத்தில் வீசும் பந்துகளை அவ்வளவு எளிதாக பேட்ஸ்மேன்களால் கையாள முடியாது. பேட்ஸ்மேன்கள் அவரின் பந்துகளை கணித்து விளையாட டைமிங் எளிதாக கிடைக்காது. ஆனால் ரபடாவின் மிரட்டலான யார்க்கர்களை சிறப்பாக எதிர்கொள்ளும் ஆற்றல் உடையவர் வில்லியம்சன். திடீரென கியரை மாற்றி அசூர வேகத்திலும் ரன்கள் சேர்ப்பார். அதீத திறமைக் கொண்ட இந்த இருவர் நேருக்குநேர் மோதிக்கொள்ளும் போது நிச்சயம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.

பெஸ்ட் VS பெஸ்ட்

ட்ரென்ட் போல்ட்  VS  கிறிஸ் கெயில்

பவர் ப்ளே ஓவர்களில் ஆஃப் சைடில் போடப்படும் பந்துகளை கெயில் பதம் பார்க்காமல் விடவே மாட்டார். அதுவும் வேகப்பந்துவீச்சு என்றால் கெயிலுக்கு இன்னும் இஷ்டம். இந்த இரண்டு பாக்ஸையுமே போல்ட் டிக்கடிக்கிறார். ஆனால் அந்த இரண்டு பாக்ஸை தவிர்த்து அவருக்கு வேண்டாத மற்றுமொரு பாக்ஸையும் போல்ட் டிக்கடிக்கிறார் என்பது தான் இந்த இருவருக்குமான போட்டியை சுவாரசியமாக்குகிறது. அது தான் லேட் அவுட் ஸ்விங்கர். அந்த ஆயுதத்தை போல்ட் பயன்படுத்தும் விதத்தில் தான் யார் என்பது உள்ளது. தன்னுடைய லென்தில் போல்ட் கொஞ்சம் தவறினாலும் பந்து பெளண்டரி எல்லையைத்தாண்டி பறக்கத்தொடங்கிவிடும். இருந்தும் இங்கிலாந்து ஆடுகளம் நிச்சயம் போல்ட் போல் பந்தை இருபக்கமும் நண்கு ஸ்விங் செய்யும் ஆற்றல் உடையவர்களுக்கு வரப்பிரசாதம். ஐந்து பந்துகள் கெயில் சிக்ஸர் அடித்தாலும் ஆறாவது பந்தில் போல்ட்டின் ஸ்விங்கில் அவுட்டாகவும் வாய்ப்பிருக்கிறது. ஸ்கில்லுக்கும் பவர் ஹிட்டிங்கிற்குமான மோதல் இது. இதில் யார் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம்.

பெஸ்ட் VS பெஸ்ட்

முஜீப் உர் ரஹ்மான்  VS  தமிம் இக்பால்

தமிம் இக்பால் வங்கதேச அணியின் மிகமுக்கியப் புள்ளி. ஓப்பனிங் இறங்கி அவர் உருவாக்கும் அடித்தளம் தான் வங்கதேச அணியின் ஸ்கோர் போர்டை பெரும்பாலான சமயம் நிர்ணயிக்கும். பவர் ப்ளே ஓவர்களில் அதிரடி காட்டி ரன்கள் எடுப்பவர்.ஆப்கானிஸ்தான் அணியின் முஜீப் உர் ரஹ்மானும் பவர் ப்ளே ஓவர்களிலே பந்து வீச வந்துவிடுவார். பவர் ப்ளேயில் அதிரடி காட்டுவது தமிம் ஸ்டைல். இந்த பக்கம் முஜீப் தனது வேரியஷன்களால் ரன்களை கட்டுப்படுத்த முற்படுபவர். முஜீப் தனது அசாத்தியமான பெளலிங் மூலம் தமிம் இக்பாலை கட்டுப்படுத்த முற்படுவார். மறுபக்கம் தமிம் பெளலர்களை செட் ஆக விடாமல் கவுன்ட்டர் அட்டாக் செய்ய முற்படுவார். ஆதலால் இந்த இருவருக்குமான போட்டி யார் யாரை அடக்கப்போகிறார்கள் என்பதில் தான் உள்ளது.

கி.ர.ராம் கார்த்திகேயன்