Published:Updated:

மெர்சல் மொமன்ட்ஸ் - ரோஹித் பெஸ்ட் 100

மெர்சல் மொமன்ட்ஸ் - ரோஹித் பெஸ்ட் 100
பிரீமியம் ஸ்டோரி
மெர்சல் மொமன்ட்ஸ் - ரோஹித் பெஸ்ட் 100

மெர்சல் மொமன்ட்ஸ் - ரோஹித் பெஸ்ட் 100

மெர்சல் மொமன்ட்ஸ் - ரோஹித் பெஸ்ட் 100

மெர்சல் மொமன்ட்ஸ் - ரோஹித் பெஸ்ட் 100

Published:Updated:
மெர்சல் மொமன்ட்ஸ் - ரோஹித் பெஸ்ட் 100
பிரீமியம் ஸ்டோரி
மெர்சல் மொமன்ட்ஸ் - ரோஹித் பெஸ்ட் 100

ந்த உலகக் கோப்பையில் பெரிய அணி, கத்துக்குட்டி அணி, முக்கியமான போட்டி, முக்கியமற்ற போட்டி என்றில்லாமல், பத்து அணிகளும், எல்லா போட்டிகளிலும் ஆச்சர்யத்தை அளித்துள்ளன. இரு வாரங்கள் கடந்துவிட்ட உலகக் கோப்பையின் சில முக்கிய ஹைலைட்ஸ்...

மெர்சல் மொமன்ட்ஸ் - ரோஹித் பெஸ்ட் 100

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ரோகித் சதமடித்தது தான் அந்தப் போட்டியின் ஹைலைட். பொதுவாக, 100 பந்துகளைச் சந்திப்பதற்குள் சதமடித்துவிடும் ரோகித், அந்தப் போட்டியில் சதம் அடிக்க 128 பந்துகள் எடுத்துக் கொண்டார். “இது என் இயல்புக்கு மாறான ஆட்டம்” என்றார் ரோகித். “ரோகித்தின் 200 ரன்கள் இன்னிங்ஸைவிட, இந்த இன்னிங்ஸ்தான் எனக்கு மிகவும் பிடித்தது” என்றார் கேப்டன் கோலி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மெர்சல் மொமன்ட்ஸ் - ரோஹித் பெஸ்ட் 100

பென் ஸ்டோக்ஸ் கேட்ச்

முதல் ஆட்டமே படு அசத்தலாகத் தொடங்கியது. ஜோஃப்ரா ஆர்ச்சரின் பௌலிங், ஜேஸன் ராய், ரூட், மார்கன், ஸ்டோக்ஸின் அரைசதம் எனப் பல இருந்தாலும், உலகக் கோப்பை உள்ளவரை பென் ஸ்டோக்ஸின் கேட்ச் பேசப்படும். பார்ப்பதற்கு, `நல்லா சர்க்கஸ் பண்ற மேன் நீ’ என்பது போல் இருந்தாலும், ஃபெலுக்வாயோ அடித்த பந்தை பிடிக்க அவர் எடுத்துக் கொண்டது வெறும் 2.55 விநாடிகள்தான். 6 அடி உயரம் இருக்கும் ஸ்டோக்ஸ் கிட்டத்தட்ட 2.5 அடி குதித்து, 8 அடி 8 அங்குலம் உயரத்தில் பாய்ந்து பிடித்த கேட்ச்சை ஒவ்வொருமுறை பார்க்கும்போதும் பிரம்மிப்பு குறைவதில்லை.

மெர்சல் மொமன்ட்ஸ் - ரோஹித் பெஸ்ட் 100

கெய்ல் தி பாஸ்!

ஒருநாள் போட்டியின் அதிகபட்ச ஸ்கோரை உருவாக்கிய மைதானம்; 6.98 என சராசரி ரன்ரேட் கொண்ட மைதானம் என பேட்டிங்கிற்கான அத்தனை அம்சங்களையும் கொண்ட டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில், பெளலிங் மூலம் அதகளம் செய்தது வெஸ்ட் இண்டீஸ். வெறும் 130 பந்துகள் மட்டுமே வீசிய வெஸ்ட் இண்டீஸ் அணி 85% ஷாட் பால்களைப் போட்டு பாகிஸ்தானை 105 ரன்களில் சுருட்டியது. இந்தப் போட்டியின் மற்றொரு ஹைலைட் கெயிலின் பெர்ஃபாமன்ஸ். ஒரு அரைசதம், உலகக் கோப்பை போட்டிகளில் அதிக சிக்சர்கள் (40) என அதிரடியாக இந்த சீசனைத் தொடங்கினார் யுனிவர்சல் பாஸ்.

மெர்சல் மொமன்ட்ஸ் - ரோஹித் பெஸ்ட் 100

நோ பால் சர்ச்சை!

வெஸ்ட் இண்டீஸ் – ஆஸ்திரேலியா போட்டியில் ஒரு சர்ச்சை வெடித்தது. அம்பயரால் மூன்று முறை அவுட் கொடுக்கப்பட்டார் கெயில். ரிவ்யூமூலம் இரண்டு முறை அவர் நாட் அவுட் எனத் தெரியவந்தது. மூன்றாவது முறை அவர் எல்.பி.டபுள்யூ முறையில் அவுட்டானார். ரிவ்யூ பெளலருக்கு சாதகமாக இருந்ததால், நடையைக் கட்டினார். ஆனால், அதற்கு முந்தைய பந்தில் ஸ்டார்க்கின் கால் க்ரீஸில் இருந்து சில இன்ச் வெளியே இருந்தது தெரியவந்தது. ஆனால், அம்பயர் அதற்கு நோ பால் கொடுக்கவில்லை. ஒருவேளை அம்பயர் அதைக் கவனித்திருந்தால், ஃப்ரீ ஹிட் கிடைத்திருக்கும். அடுத்தப் பந்தில் கெய்ல் அவுட்டாகியிருக்க வாய்ப்பில்லை. அம்பயர்களின் இந்த கவனக்குறைவை மைக்கேல் ஹோல்டிங் உள்பட பல முன்னணி வீரர்கள் விமர்சித்தனர்.

மெர்சல் மொமன்ட்ஸ் - ரோஹித் பெஸ்ட் 100
மெர்சல் மொமன்ட்ஸ் - ரோஹித் பெஸ்ட் 100

இங்கிலாந்து ஆதிக்கம்!

ஒரு போட்டியில் 300 ரன்களைக் கடக்கவே தாவு தீர்ந்துவிடும். ஆனால், தொடர்ந்து ஏழு போட்டிகளில் 300 ரன்கள் அடித்துள்ளது இங்கிலாந்து. கடைசி போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக 386 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 29 நாட்கள் இடைவெளியில் அதிக முறை 300 ரன்களைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது இங்கிலாந்து.

மெர்சல் மொமன்ட்ஸ் - ரோஹித் பெஸ்ட் 100

ஸ்டன்னிங் கேட்ச்!

ஆஸ்திரேலியா – வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் அசத்தல் ஃபார்மில் இருந்தார் ஸ்டீவ் ஸ்மித். அவர் 73 ரன்கள் எடுத்திருந்தபோது, ஓஷேன் தாமஸ் வீசிய பந்தை லெக் சைடில் ஃப்ளிக் செய்தார். அது லாங் லெக்கில் சிக்ஸர் செல்வது போல இருந்தது. ஆனால், எங்கிருந்தோ வந்த ஷெல்டன் காட்ரெல், பெளண்டரி எல்லையைக் கடந்து சென்ற பந்தை ஒற்றைக் கையால் கேட்ச் பிடித்தார். ரீப்ளேவில் பார்த்தபோதுதான் அவர் கேட்ச் பிடித்தது தெரியவந்தது. அந்தளவு மிரட்டலாக இருந்தது கேட்ச். உடனே, பென் ஸ்டோக்ஸ் கேட்ச், காட்ரெல் கேட்ச்... இரண்டில் எது பெஸ்ட் என சர்வே நடத்திவிட்டனர் நெட்டிசன்கள். 

பொ.மாரியப்பன்  

மெர்சல் மொமன்ட்ஸ் - ரோஹித் பெஸ்ட் 100
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism